tamil.oneindia.com -Shyamsundar : நியூயார்க்: சிரியாவில் நடக்கும் போர் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அவர் ஜனவரி 20ம் தேதிதான் அதிகாரபூர்வமாக அதிபர் ஆவார்.
அதனால் இப்போது படைகளுக்கு உத்தரவிட முடியாது.
அவரின் இந்த விருப்பம் ஜனவரி 20ம் தேதிக்கு பின் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப்.,.
நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்;
நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன் என்று ஃபளோரிடாவில் ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றி உள்ளார்.
அதோடு நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.
us presidential election 2024 kamala harris donald trump syria
ஈரானுக்கு விழுந்த முதல் அடி.. டிரம்ப் வென்றதுமே நடந்த மாற்றம்! ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி
நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றியை அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம்.
நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம். அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்தது உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
சிரியா போர்: இப்படிப்பட்ட நிலையில்தான் சிரியாவில் நடக்கும் போர் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளது. இந்த நிலையில்தான் சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார். சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் மட்டும் இதுவரை 1500 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகுவதால் சீனாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? நச்சென்று 4 பாயிண்ட்கள்
சிரியா நாட்டில் கடந்த 40 வருடமாக ஒரே குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. 30 வருடம் ஹபீஸ் ஆட்சி செய்தார். கடந்த 14 வருடமாக அவரது மகன் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி நடக்கிறது. இவர்களை தாண்டி அந்த நாட்டில் எதிர்க்கட்சி, இயக்கங்கள் என எதுவுமே இல்லை.
ஆனால் கடந்த 10 வருடங்களில் அந்த நாட்டின் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது. யாருக்கும் வேலை இல்லை , அரசியல் சுதந்திரம் இல்லை, பொருளாதாரம் சரிவானது, பலருக்கு கல்வி இல்லை. இதனால் மக்கள் அரசுக்கு எதிராக கொஞ்சம் கொஞ்சமாக குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அரபு வசந்தம் தொடங்கியது. அரபு நாடுகளில் குடும்ப ஆட்சி நடத்தி வந்த பல நாடுகளில் புரட்சி நடந்தது. வரிசையாக பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்தது. அதை பார்த்த சிரியா மக்கள் தங்கள் நாட்டிலும் இப்படி மாற்றம் நடக்க வேண்டும் என்று புரட்சியில் இறங்கினார்கள்.,
ஆனால் இது வெறும் புரட்சி என்ற அளவில் மட்டும் நிற்கவில்லை. இதற்கு பின் மத பிரிவினைகளும் இருக்கிறது. அந்த நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த முஸ்லீம்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். ஆனால் ஆட்சி ஷியா பிரிவை சேர்ந்த பஷர் அல் ஆசாத்திடம் இருக்கும். கடந்த 40 வருடமாக அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். ஆனால் இந்த பிரிவை உருவாக்கியதே வெளிநாட்டு அரசுகள்தான் என்று கூறப்படுகிறது. முதல்தடவை போராட்டம் சாதாரணமாக தொடங்கிய போதே சிரியா அரசு அவர்களை எளிதாக கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு இருக்கும் போராளி குழுக்கள் ஆயுதம் எந்த முடிவு செய்தார்கள். மற்ற நாட்டில் இருக்கும் போராளி குழுக்களிடம் ஆயுதம் வாங்கி போராட ஆரம்பித்தார்கள்.
அதிபர் ஆனதும் முதல் நாளே.. இதுதான் ஆக்சன்.. டிரம்ப் கையில் எடுக்கும்
ஆரம்பத்தில் சிரியா ராணுவத்தை விட போராளி குழுக்கள் மிகவும் வலுவாகவே இருந்தது. இதனால் போர் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் முடிந்து இருக்கும். ஆனால் தற்போது அங்கு உலக நாடுகள் அனைத்தும் உள்ளே வந்து இருக்கிறது. இதனால் 12 வருடமாக போர் நடக்கிறது. இதில் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா போர் செய்கிறது.. ஐஎஸ் படைகளுக்கு எதிராக இங்கே அமெரிக்கா போர் செய்யும் நிலையில் படைகளை வாபஸ் வாங்க வேண்டும் என்று டிரம்ப் கூறி உள்ளார்.
இதே டிரம்ப்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை வாபஸ் வாங்கினார்.. அங்கே தலிபான் உடன் அமைத்து ஒப்பந்தத்தை கையெழுத்து போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக