திங்கள், 4 நவம்பர், 2024

திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?

 Amudhan R P :  திமுகவின் மீது இங்கு பலருக்கு ஒவ்வாமை ஏன்?
திமுக, பார்ப்பனியத்தை எதிர்க்கிறது. இந்தியத் தேசியத்திடம் சரண் அடையாமல் சம அந்தஸ்தில் உரையாடல் நடத்துகிறது. மாநில சுயாட்சி பேசுகிறது. இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கிறது. பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் உரிமையை  வலியுறுத்துகிறது. கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் வளர்ச்சியிலும் எல்லோருக்கும் பங்கு என்று இந்தியாவின் பிற மாநிலங்கள் யோசித்துப் பார்க்காத காலத்திலேயே (சுதந்தரம் அடைந்த உடனேயே) முழக்கமிட்டது.  
உயர்ஜாதி வகுப்பினர் கற்பனை செய்கிற இந்தி, இந்து, இந்தியாவை விமர்சனம் செய்யாமல் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பார்ப்பனியத்தின் தனித்துவ அதிகாரத்தையும் நீர்த்துப் போகச்செய்தது. அது நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டாலும், திமுக போராடிக்கொண்டிருக்கிறது.
இப்படிப் பேசிப் போராடி, ஆட்சியைப் பிடித்து, சாதித்தும் காட்டியிருக்கிறது.
இன்று மனிதவள மேம்பாடு, தொழில் வளர்ச்சி, கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம், சமூக அமைதி, மத நல்லிணக்கம் என பல அளவீடுகளில் தமிழ்நாடு இந்தியாவிலேயே வளர்ந்த மாநிலமாகத் திகழ்கிறது. இதற்கு இடையிடையே, ஆனால் அதிகக்காலம் ஆட்சி செய்த திமுகவிலிருந்து வெளியே வந்த எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக - திமுகவின் அழுத்தம், போட்டி அரசியல் காரணமாக - இந்த வளர்ச்சிப் பாதையிலிருந்து அதிகம் விலகிப்போக முடியவில்லை.
இப்போது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் திமுகவிற்குக் கணிசமான ஆதரவும் இருக்கிறது. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் அதன் முதல்வர் எடப்பாடி, பாஜகவிடம் சரண் அடைந்தது, நமது மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுகவின் முக்கியத்துவத்தை மேலும் கூட்டியிருக்கிறது.
அதன் தற்போதைய தலைமையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துணிச்சலாகவும், சாதுர்யமாகவும், துரிதமாகவும், அதே நேரத்தில் நாகரிகமாகவும் அரசியல் செய்கிறார்.
தமக்கென்று ஒரு மரியாதையை உருவாக்கியிருக்கிறார். எதைச் செய்தாலும் சரியாகச் செய்கிறார். ஏதாவது பிழையிருந்தால் திருத்திக்கொள்கிறார். தமது கூட்டணிக் கட்சியினரிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளார்.
தமது கட்சிக்கு அடுத்த தலைவர் என்பதையும் அடையாளம் காட்டி, அதன் எதிர்காலத்தையும் உறுதி செய்துவிட்டார். அதிமுக போல அது உடைந்து நொறுங்குவதற்கு எந்த வாய்ப்பையும் அவர் கொடுக்கவில்லை.
இப்படி இருக்கையில் எப்படி திமுகவைத் தோற்கடிப்பது?
அதற்காக அனுப்பப்பட்ட சமீபத்திய அடியாள் தான் விஜய்.
அவர் சுயமாக இதைச் செய்யவில்லை. அவருக்கு அரசியல் ஆசை இருக்கலாம். ஆனால் அவர் என்ன பேசவேண்டும், அவரது கொள்கை என்ன, செயல்பாடுகள் என்ன என்பதை திமுகவைத் தோற்கடிக்க நினைக்கும் சக்திகள் தான் முடிவு செய்கின்றன.
எம்ஜிஆரின் தனிப்பட்ட ஆசைகளை, தடுமாற்றங்களை எப்படி அந்தக்காலத்து காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியதோ, அதே போல இப்போது நடிகர் விஜய்யை, திமுகவின் எதிரிகள் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு அதிமுக, பாஜகவின் ஆதரவு இருக்கிறது என்பதற்கு விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பேச்சுக்கள் காட்டிக்கொடுக்கின்றன.
வழக்கம் போல ஊழல், குடும்ப ஆட்சி போன்ற அஸ்திரங்களை இவரும் திமுகவின் மீது எறிகிறார்.
திமுக எங்கு எதில் ஊழல் செய்கிறது என்று அவர் ஆதரத்தோடு சொல்லவேண்டும்.
குடும்ப ஆட்சி என்பது கறிக்கு உதவாத பேச்சு.  அவரே தனது குடும்பத்தினால் (தந்தை இயக்குனர் சந்திரசேகர்) சினிமாவிற்கு வந்தவர் தான். வளர்க்கப்பட்டவர் தான். சினிமா, தொழில், அரசியல், விளையாட்டு (ஜெய் ஷா) என எங்கும் வாரிசுகளின் தாக்கம் உலகம் முழுக்க இருக்கிறது.
அது தமிழ்நாட்டில் எடுபடாது. உதயநிதிக்குத் திறமை இருந்தால் பிழைத்துக்கொள்வார், உழைத்தால் உயர்வார், இல்லையேல் தோற்றுப்போவார். வாரிசு என்பதாலேயே அவர் தேர்தலில் வெற்றி பெறமுடியாது.
அவரால் அவரது கட்சிக்கு லாபம் என்று அவரது கட்சி நம்புகிறது. மக்களிடம் சொல்கிறது. அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். இனிமேல் அதைப் பற்றிப் பேசிப்பயனில்லை.
அவரது செயல்பாடுகளில் ஏதாவது குறையிருந்தால் விஜய்யோ, அஜய்யோ சுட்டிக்காட்டலாம். அதை வைத்துப் பரப்புரை செய்யலாம். மக்களிடம் செல்லலாம். முடிந்தால் நீதிமன்றத்திற்கும் போகலாம்.
அதைவிட்டு, வெற்றுக்கூச்சல் போடுவது அபத்தம்.
ஆனால் விஜய் இத்தோடு நிற்கப்போவதில்லை. அவருக்குப் பின்னாலிருப்போர்கள் புத்திசாலிகள் என்றே தோன்றுகிறது.
பெரியாரையே கைப்பற்றி, நீர்த்துப்போகச்செய்ய முயல்கின்றனர். இதுவரை இது யாரும் செய்யாதது.
ஏற்கனவெ திமுகவை நேரடியாகத் தாக்கியாயிற்று. அதன் மீதிருக்கும் கேள்விக்கு நன்மதிப்பைக் குலைக்கும் வேலையைத் தொடங்கியாயிற்று.
இனி எப்படியாது இன்னோரு பெரிய ஆளின் மீது தாக்குதல் நடத்தி அவரது நற்பெயரைக் கெடுக்க முயல்வார்கள்.
திருமாவைத் தாக்கினால், அதற்கு அவர் எதிர்வினையாற்றினால், அதை ஜாதிப்பிரச்சனையாக்கலாம். மருத்துவர் ராம்தாஸ் போல பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அதன் மூலம் அணி திரட்டலாம்.
அல்லது ஜாதி அபிமானம் உள்ளோரை தமது பின்னால் திரட்டலாம்.
தமிழ்நாடு வளர்ந்த மாநிலம் ஆகிவிட்டதால், அடிப்படைப் பிரச்சனைகளுக்கு இனி கணிசமான பிற்படுத்தப்பட்ட மக்கள் சிரமப்பட வேண்டியதில்லை என்கிற நிலை உருவாகிவிட்டதால், இனியும் சமூகநீதி  பேசவேண்டுமா என்கிற ஆணவநிலைக்கு இவர்கள் வரும் ஆபத்திருக்கிறது.
அவர்களை நோக்கி விஜய், தமது பரப்புரையைச் செலுத்தினால், அவர்கள் தாம் வந்த பாதையை மறந்து (ஏற்கனவே பலர், திராவிட அரசியல் ஒன்றும் செய்யவில்லை, நானே படித்தேன், உழைத்தேன், முன்னேறினேன் என்று உளறிக்கொண்டிருக்கின்றனர்) திமுகவைக் கைவிட்டு இவர் பின்னாடி வரலாம்.
இருக்கவே இருக்கிறது, ஜாதி வெறி, மதவெறி, போலித் தேசப்பற்று (கமல் கூட அமரன் என்றோரு படம் எடுத்திருக்கிறார்) இவற்றை வைத்து எதையாவது புரட்டிப் போடுவார்கள்.
சமூக நீதி அரசியலில், மதநல்லிணக்க அரசியலில்,
பாலியல் சமத்துவ அரசியலில் அக்கறை கொள்வோர் விழிப்போடு இருக்கவேண்டும்.
இதில் விஜய் தோற்றாலும், பிற்காலத்தில் சிவகார்த்திகேயன் வருவார்.
இது திமுகவின் பிரச்சனை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சனை.
கவனத்தோடு இருப்போம்.
அமுதன் ஆர்.பி.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தெலுங்கு விலை மாதர் குடும்பத்தை சேர்ந்த படிப்பறிவில்லாத கருணாநிதிக்கும் அவன் குடும்பத்தினருக்கும் ஒழுக்கம் என்றால் என்னவென்றே தெரியாது . திருடி சொத்து சேர்க்கவும் பல பெண்களிடம் கூடி க்ளிக்கவும் மட்டுமே தெரியும் . சுடலை குடும்பம் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாக கதைத்து கொண்டே யாகம் செய்வார்கள் . பிராம்மண பண்டாரம்களின் காலில் விழுந்து ஆசி வாங்குவார்கள் . தமிழர்கள் தெலுங்கு சுடலை குடும்பத்தின் சொத்துக்களை பறித்து கொண்டு அடித்து விரட்ட வேண்டும்