புதன், 31 ஜூலை, 2024

பிரிட்டன் கத்திக் குத்து தாக்குதல்: 3 சிறுமிகள் உயிரிழப்பு- கொலையாளி இஸ்லாமிய பின்புலம்?

 தினமணி “லண்டன்:இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடனப் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்நிலையில், நடன பள்ளியில் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்த சிறுவர்களை 17-வயது சிறுவன் திடீரென கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் 3சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதலை தடுக்க முயன்ற 9 பேருக்கு கத்திக் குத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர்.
ரத்த காயத்துடன் சிறுவர்கள் சிலர் நடனப்பள்ளியில் இருந்து வெளியே சாலையில் ஓடியுள்ளனர். இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து தாக்குதல் நடத்திய சிறுவனை கைது செய்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.தாக்குதல் நடத்திய சிறுவன், தாக்குதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த தாக்குதல் பற்றி கூறும்போது, இச்சம்பவம் பயங்கரமான மற்றும் ஆழ்ந்த அதிர்ச்சி என்றும் கூறியுள்ளார்.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் இதை பற்றி கூறும் போது, “குழந்தைகள் மீதான தாக்குதலை அறிந்ததும் நானும், என் மனைவியும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தோம் என்றும், மிகவும் துயரமான முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், இந்த பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப் பூர்வமான இரங்கல், பிரார்த்தனை மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறோம்” என்றார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: