புதன், 8 மார்ச், 2023

வட மாநில தொழிலாளர்களுக்கு தைரியம் சொன்ன முதல்வர் ஸ்டாலின். பயப்படாதீங்க.. சாப்பாடு கிடைக்குதா?.

 tamil.oneindia.com  - Jeyalakshmi C  : நாகர்கோவில்: வாட்ஸ்அப்களில் வரும் வதந்திகளை நம்பாதீர்கள் என்றும் பயப்படாமல் தைரியமாக இருங்கள் என்றும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஹோட்டல்கள், கட்டிட வேலை, பனியன் தொழிற்சாலை உள்ளிட்ட பல நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
பீகார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதனையடுத்து வட மாநில தொழிலாளர்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டது. வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


இந்த நிலையில் வதந்தி பரப்புவோர் தேசத்தில் எதிரானவர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்வதாகவும், கலவரத்தை தூண்டி விட்டு ஆட்சியை கலைக்க சிலர் நினைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பகிரங்க புகார் கூறியுள்ளார்.

3 விஷயங்கள்.. கருணாநிதியின் திட்டத்துக்கு களங்கமா.. முதல்வர் ஸ்டாலினுக்கு 9 யூனியன்கள் வைத்த கோரிக்கை3 விஷயங்கள்.. கருணாநிதியின் திட்டத்துக்கு களங்கமா.. முதல்வர் ஸ்டாலினுக்கு 9 யூனியன்கள் வைத்த கோரிக்கை

இதனையடுத்து நாகர்கோவில் அருகே தொழிற்சாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்,தமிழ் தெரியுமா என்று கேட்டார். அதற்கு ஒரு பெண் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று கூறினார். எத்தனை வருடங்களாக இங்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு 2 ஆண்டுகளாக வேலை செய்கிறோம் என்று கூறினர்.

உங்க குடும்பம் எல்லாம் ஊர்ல இருக்காங்களா? இங்கே சாப்பாடு, தங்கும் இடம் எல்லாம் வசதியாக இருக்கா என்று கேட்டார். அதற்கு அவர்கள் நன்றாக இருக்கிறது என்று கூறினர்.

தமிழக தொழிலாளர்களையும் நேரில் பார்த்து எத்தனை ஆண்டுகளாக வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு 16 ஆண்டுகள் வேலை செய்வதாக கூறியதோடு ரொம்ப சந்தோஷம் சார் என்று தெரிவித்தனர்.

CM Stalins meeting Met with North Indian workers at Nagercoil

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், வட மாநிலத்தைச் சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் பலரையும் சந்தித்து நலம் விசாரித்தார். ஜார்கண்ட், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்கள், திருப்பூரில் பயமாக இருந்தது. இங்கே பயமில்லை. பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறினர். அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை பயப்பட வேண்டாம் என்று கூறினார். எல்லாம் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் நீங்கள் நம்ப வேண்டாம் என்றும் முதல்வர் கூறினார். எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றும் கூறினார்.

ஹோலி பண்டிகைக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டார் முதல்வர் அதற்கு அவர்கள் தீபாவளிக்கு ஊருக்கு போய் விட்டு வந்தோம் என்று கூறினர். அங்கிருந்த தொழிலாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சாப்பாடு எல்லாம் சரியா கிடைக்குதா? தைரியமாக இருங்க பயப்படாதீங்க என்று நம்பிக்கை அளித்த முதல்வர் அனைவரிடமும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Chief Minister M. K. Stalin personally met the workers of the northern states and assured them not to believe the rumors on WhatsApp and to be brave without fear. Chief Minister Stalin also said that we will take care of anything.

கருத்துகள் இல்லை: