மாலைமலர் : சீர்காழி நகராட்சி வாக்கு சாவடி, வாக்கு எண்ணும் மையங்களில் 81 கேமராக்கள் அமைக்கப்பட்டதை ஆர்.டி.ஓ ஆய்வு செய்தார்.
சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 14,340,பெண் வாக்காளர்கள் 15,273 மொத்த வாக்காளர்கள் 29ஆயித்து 615 பேர் உள்ளனர். மொத்த வாக்குச் சாவடிகள் 36 அமைக்கப்பட்டுள்ளன இதில் 15 வார்டுகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில்24 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு மையம்
மேலும் 36 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நலன் கருதி 36 கேமராகளும் வாக்கு என்ணும் மையத்தில் 45 கேமராக்களும் மொத்தம் 81 ஒரு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன பதட்டமான 15 வாக்கு சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக