சனி, 4 ஜனவரி, 2020

தொடர் தாக்குதல் நடத்தும் அமெரிக்கா.. ஈரானின் மிக முக்கிய தலைவர்கள் கொலை.


என்ன போர் tamil.oneindia.com - shyamsundar பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் மீண்டும் டிரோன் விமானம் மூலம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.
நேற்று ஈராக்கில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான், ஈராக் மற்றும் அமெரிக்கா இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. நேற்று அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதல் இரண்டு நாடுகளுக்கு இடையே போரை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
கடந்த சில மாதங்களாகவே டிரோன் விமானங்கள் மூலம் அமெரிக்க படைகள் தொடர்ந்து ஈரான் தலைவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய தாக்குதலாக பார்க்கப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அதேபோல் ஈரான் மிலிட்டரி கமாண்டர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸும் கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு போர் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா இப்போதே தங்கள் படைகள் வடகிழக்கு நாடுகளில் குவித்து வருகிறது. ஈராக்கில் அருகே இருக்கும் அமெரிக்க படைகள் பல தற்போது அங்கு பாக்தத்தில் போர் செய்ய தயார் ஆகி வருகிறது. மீண்டும் தாக்குதல் இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் மீண்டும் டிரோன் விமானம் மூலம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளது. இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார். ஈராக்கில் உள்ள ஈரான் நாட்டு தலைவர்கள், ராணுவ அதிகாரிகளை குறி வைத்துதான் இந்த தாக்குதல் நடந்தது. போர் வரும் முன் இவர்களை காலி செய்ய வேண்டும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. இன்று காலை நடந்த தாக்குதல் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள்
இரண்டு கார்கள் மீது இன்று காலை தாக்குதல் நடந்தது. இந்த காரில் ஈரானின் ராணுவ படையினர் சென்றுள்ளனர்.
அமெரிக்கா, ஈரான் இரண்டு தரப்பும் இந்த தாக்குதலை உறுதி செய்துள்ளது.
பாக்தாத்தில் டாஜி பகுதி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகி உல்ளலஹாக் கூறப்படுகிறது. முக்கியமான ஈரான் அதிகாரிகள் இருவர் பலியானதாக கூறப்படுகிற

கருத்துகள் இல்லை: