சாவித்திரி கண்ணன் :
விஜயகுமார் என்ற எல்.ஐ.சி ஏஜெண்ட் எப்படி கல்கி சாமியாராக விஸ்வருபமெடுத்து வருகிறார் என்று 1990 களிலேயே நான் எழுதினேன்...!
பெரம்பூர் பகுதியில் அவர் வாழ்ந்த இடத்தின் தெருவாசிகள், உற்ற நண்பர்கள், அவருக்கும்,அவரது மனைவிக்குமான சண்டைகளில் சாமாதானம் செய்து வைத்த பெரிசுகள் என பலதரப்பட்டவர்களை சந்தித்து கல்கிசாமியார் ஒன்றும்
அவதாரமல்ல! சாதாரண ஆசாமி தான் என்று உறுதிபடுத்தினேன்.
கடவுள் என்று தன்னை அறிவித்துக் கொண்டவர் தன்னைப் பார்ப்பதற்கு கரன்சிகட்டுகளை நிபந்தனையாக்கலாமா?
கால்களை பார்க்க ரூ 10,000 ! முழு ஆளையும் பார்க்க ரூ50,000! அவர் மனைவியை பார்க்க ரூ25,000 தான்!(இதிலும் ஆண்,பெண் வேறுபாடு)
கடவுள் என்ற ஒருவர் அவதாரமெடுத்து வந்தால், அவர் ஏன் ஒரு சொகுசு அறையில்
தன்னை அடைத்துக் கொண்டு, சொத்துக்கு மேல்,சொத்து சேர்க்க வேண்டும்!
அவர் கடவுள் என்றால்,ஒட்டு மொத்த நாட்டிற்கும், மனிதர்களுக்கும்,உயிரினங்களுக்கும் பொதுவானவராக அல்லவா வெளிப்பட்டிருக்க வேண்டும்?
மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகவல்லவா கருதி உருகி இருக்க வேண்டும்?
பல ஆயிரம் கோடி சொத்துகள்,கரன்சிகட்டுகள்!வெளினாட்டு முதலீடுகள்,44,000 ஏக்கர் நிலங்கள்,அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையை மிஞ்சும் ஆடம்பர மாளிகை!
ஆன்மீகம் என்பது கணக்கில் காட்டாமல் பணம் செய்யும் நுட்பமான வியாபாரமல்ல...என்பதை நாம் உணரும் வரை இத்தகைய சாமியார்களுக்கு ஏது முடிவு?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக