மின்னம்பலம் :திரைப்படங்களைத் தொடர்ந்து பாபி சிம்ஹா இணையத் தொடரிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக எந்தப் படைப்பையும் திரையரங்கில் சென்றுதான் பார்க்கவேண்டும் என்ற நிலை இல்லை. குறும்படம், ஆவணப்படம், திரைப்படம், வீடியோ ஆல்பம் என, தாங்கள் உருவாக்கும் படைப்புகளை இணையத்தில் தாங்களே வெளியிடுவதன் மூலம் குறைந்த செலவில் ஏராளமான ரசிகர்களைப் பெறுகின்றனர். அதில் சமீபகாலமாக இணையத் தொடர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
தமிழில் பாலாஜி மோகன் இயக்கிய ‘அஸ் ஐ அம் சப்பரிங் ஃப்ரம் காதல்’ தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பல இணைய தொடர்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தற்போது அருவி, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய இணையத் தொடர் ஒன்றைத் தயாரிக்கவுள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியான சவாரி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான குகன் சென்னியப்பன் இந்தத் தொடரை இயக்கவுள்ளார். “பாபி சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ஜிகர்தண்டா படத்திற்குப் பிறகு அவரது வில்லத்தனமான நடிப்பை இதில் காணலாம்” என்று படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
பார்வதி நாயர் பிரதான வேடம் ஏற்று நடிக்கும் இந்தப் படம் அவல நகைச்சுவை பாணியில் உருவாகவுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக