வெள்ளி, 5 ஜனவரி, 2018

மம்தா ! வடக்கின் திராவிட சித்தாந்தமாய் வாழும் தீதீயின் பிறந்த தினம் இன்று..

Devi Somasundaram : மம்தா பானர்ஜி... எளிய மனிதர்களின் நம்பிக்கை என்று அறியபட்ட வங்கத்து புயல் மம்தா பானர்ஜி.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண். சின்ன வயதிலேயே தகப்பனை இழந்தவர். தன் முயற்சியால் உயர் கல்வியும் ,சட்ட கல்வியும் பயின்றவர். 15 வயதிலே காங்கிரஸ் ஸ்டூடண்ட் விங் ல் இணைந்து அரசியலுக்கு வந்தவர்.
இன்று வங்கத்து முதல்வராய் அறியப்படும் இந்த பெண்மணி .சேல்ஸ் கேர்ல் ,டீயூஷன் டீச்சர், ஸ்டெனோக்ராபராக வேலை பார்த்து ஆர்ம்பகாலத்தில் வாழ்க்கையோடு போராடி இந்த பதவி வரை வந்தவர்..
இப்பொழுதும் வெறும் வெள்ளை நிற காட்டன் புடவையில் எளிய வாழ்வை வாழ்பவர். கொல்கத்தாவில் வசித்தவர்களுக்கு தெரியும். மிக சாதாரணமா அவர் தெருகளில் நடமாடுவதை காணலாம்..தெற்கு கொல்கத்தாவில் ஹரிஷ் சாட்டர்ஜி தெருவில் அவர் வசிக்கும் வீடு சாதாரண செங்கல் தரை போட பட்ட எளிமையான வீடு .மிக தாழ் தளம்..எப்ப மழை வந்தாலும் அவர் வீடு முழுவதும் தண்ணிர் வந்து விடும்..அப்படியே அட்ஜஸ் செய்து கொண்டு வாழ்கிறார்.. திராவிட தலைமைகள் போல் அதிகாலை எழுந்து விடும் இன்னொரு அரசியல்வாதி .2 மணி நேரம் வாக்கிங் .செய்தி வாசிப்பு..
அதிகாரிகளுடன் இயல்பாய் பேசுதல் . சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் தமிழகத்தை நினைவு படுத்தும் தலைமை மம்தா .
தீதீ என்று அழைக்கபடுவார். மூத்த சகோதரி என்று அர்த்தம் ( த தென் துருவத்தில் அண்ணாவும் வட துருவத்தில் அக்காவும் இந்த நாட்டின் பாதுகாவல் உறவுகள்ன்னு அப்பா சொல்வார் )
இந்துத்துவா எதிர்ப்பாளராய் கடுமையான முடிவுகளை ( துர்க்கா பூஜை ஊர்வல தடை ) எடுத்ததால் இஸ்லாத்திற்கு மாறி விட்டதாக கதை கட்ட பட்டவர் ..
மத்திய அரசின் ஆதார் திட்டத்தை கடுமையாய் எதிர்த்தார் . என் மொபைல் நம்பரில் ஆதார் நம்பரை இணைக்க மாட்டேன்.வேண்டுமானால் என் நம்பரை முடக்கி கொள்ளட்டும் டோண்ட் கேர் என்று சொல்லி விட்டார் மம்தா..
மா, மாதே,மனுஷ் ( தாய், தாய் மண் ,மக்கள் ) என்ற அவரது முழக்கம் வங்க மக்களின் ஜீவனோடு கலந்தது...
கடும் ஆதிக்க எதிர்ப்பாளராய் ,அதிகம் விமர்சிக்க்பட்ட ( 60 year old frustrated Lady , ரவுடி பெண்மணி என்று சுவாமியால் விமர்சிக்க பட்டவர் ) வடக்கின் திராவிட சித்தாந்தமாய் வாழும் மம்தாவின் பிறந்த தினம் இன்று..
ஹேப்பி பர்த் டே தீ தீ.
#HBD_Mamtha

கருத்துகள் இல்லை: