Vincent Raj : .
மிகுந்த துயரத்துடன் இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.சாதி கொடுமைகளுக்கு எதிராக பல ஊடகங்கள் குரல் கொடுத்து வருகின்றன.குறிப்பாக ஆங்கில இந்து அதிகமான தலித் பிரச்னைகளை எழுதி இருக்கின்றனர்.ஒரு சமயம் ஆசிரியர் குழு விவாதத்தின்போது ஒருவர்,நாம் அதிக அளவில் தலித் பிரச்னைகளை எழுதுகிறோம்.இதனால் சலிப்பு வருகிறது என்று கேள்வி எழுப்பியபோது, உங்களுக்கு சாப்பிட சலிப்பு வருமா? சாதி கொடுமையால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்கள்.அவர்களின் நியாயத்தை எழுத சலிப்பு வர கூடாது என்று என்.ராம் கூறினார்.இதை கேள்விப்பட்டபோது உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.ஆனால் தமிழ் இந்து இதற்கு நேர் எதிரானது.

தலித் மக்கள் மீது நடைபெறும் நூற்று கணக்கான வன்கொடுமைகளை தீண்டாமை
சித்ரவதைகளை சமூகத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்து வருகிறது.இது மட்டும்
அல்ல வன்கொடுமை நடத்துபவர்களுக்கு ஆதரவாகவும் எழுதுகிறது.
எல்லா மாவட்டங்களிலும் ஆதிக்க சாதி ஆட்களை பணியாளர்களாக நியமனம் செய்து இந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது.தமிழ் இந்துவில் பல நேர்மையான பத்திரிகையாளர்கள் இருக்கின்றனர்.அவர்களால் இதை சகித்து கொள்ள முடியாமல் புழுங்கி தவிக்கின்றனர்.
தலித் பிரச்னைகளை எழுத வேண்டாம் என்று கொளகை முடிவு எடுத்து இருப்பதாக அறியவருகிறேன்.தென் மாவட்டங்களில் மற்றும் கடந்த 3 ஆண்டுகளில் 80 வன்கொடுமை சம்பவங்களை எழுதாமல் மறைத்து உள்ளனர்.இதற்கு ஆதாரம் தேவை என்றால் கொடுக்க தயாராக இருக்கிறேன்.ஆரம்பத்தில் சாதி கொடுமைக்கு எதிராக எழுதுவது போன்ற இருந்த இந்த பத்திரிக்கை மெல்ல மெல்ல தன சாதி முகத்தை காட்ட தொடங்கியது.
எல்லாவற்றையும் சகித்து கொண்டு இருந்த நான் கடந்த 2 மாதமாக தமிழ் இந்து வாங்குவதை நிறுத்தி கொண்டேன்.என் அலுவலகத்திலும் இந்த மாதத்தோடு அந்த பத்திரிகையை நிறுத்து சொல்லிவிட்டேன்.எங்கள் பிரச்னையை எழுதாத உங்கள் பத்திரிகையை காசு கொடுத்த வாங்க வேண்டும் என்று எங்களுக்கு அவசியம் இல்லை.தலித்துகள் பிற ஒடுக்கப்படுகிற சமூகத்தினர் தமிழ் இந்துவை புறக்கணிப்பு செய்து நம் எதிரிப்பினை காட்ட வேண்டும்.இது என் வேண்டுகோள்.சேரி காசைவிட அவர்களுக்கு ஊர் தெரு காசு லாபத்தை கொடுக்கட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக