கோகுலம் சிட்ஸ் நிறுவனத்தில்
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'கோகுலம் சிட்ஸ் அண்ட்
பைனான்ஸ்' நிறுவனத்தில், வருமான வரித் துறை அதிகாரிகள், நேற்று அதிரடி
சோதனை நடத்தினர். அந்நிறுவனத்துக்கு சொந்தமான, 79 இடங்களில் சோதனை நடந்தது.
இதில், 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. <
சென்னை,
கோடம்பாக்கத்தில், கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் நிறுவன தலைமை யகம்
உள்ளது. இந்நிறுவனம், 1968ல், எம்.ஜி.ஆரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன்
உரிமையாளர் ஏ.எம்.கோபாலன், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு
நெருக்கமானவர். இவர், திரைப்பட தயாரிப்பு மற்றும் வினியோக துறையிலும்
ஈடுபட்டு வருகிறார். கோகுலம் நிறுவனத்துக்கு, தமிழகம், கேரளா,
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஏராளமான கிளைகள் உள்ளன.
இந்நிலையில், அந்நிறுவனம், கறுப்பு பணம் பதுக்கல் மற்றும் வருமான வரி
ஏய்ப்பில் ஈடுபடுவதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அதற்கான ஆதாரங்களை
தேடும் பணியில், வருமான வரித்துறையினர் இறங்கினர். நேற்று காலை, 6:00 மணி அளவில், கோகுலம் சிட்ஸ் தலைமை அலுவலகம்; கே.கே.நகரில் உள்ள, 'கோகுலம் பார்க்' நான்கு மாடி ஓட்டல் மற்றும் அதில் உள்ள அலுவலகம்; சென்னையில் அமைந் துள்ள கிளைகளில், ஒரேநேரத்தில் சோதனை நடத் தப்பட்டது.மேலும், கேரளா, கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள, அந்நிறுவன அலுவலகங் களிலும், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சோதனையில், 500 அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். சென்னையில், 26 இடங்கள்; கோவை மற்றும் புதுச்சேரி என, 43 இடங்களில், சோதனை நடந்து வருகிறது. இதுதவிர, கேரளாவில் எர்ணாகுளம், கொச்சி, ஆலப்புழா உள்ளிட்ட, 29 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கர்நாடகாவில், பெங்களூரு உட்பட, ஆறு இடங்களில் விசாரணை நடந்து வருகிறது. மொத்தம், 78 இடங்களில் நடந்து வரும் சோதனையில், வரி ஏய்ப்புக்கான ஆவணங் கள் சிக்கியுள்ளன. அவற்றை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அதன்பின்,வரி ஏய்ப்பு, பணம் பதுக்கல் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை பற்றிய விபரங்கள் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். நேற்றைய சோதனையின் போது, 2004 முதல், 2008 வரையிலான ஆண்டுகளில், சீட்டு பணம் பிடித்த தற்கு, கோகுலம் சிட்ஸ் நிறுவனம் கணக்கு காட்ட வில்லை என்றும், 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் < அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக, வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
அனுமதி இல்லை!
கோகுலம் நிறுவனத்துக்கு, கோவையில் காந்தி புரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. காந்திபுரம், நுாறடி ரோட்டில் உள்ள அலுவலகத் தில், ஏழு பேர் கொண்ட வருமான வரி அதிகாரி கள் குழு, நேற்று காலை, 6:45 மணி முதல் சோதனை நடத்தியது.
அலுவலகங்களின், 'ஷட்டர்களை' மூடிய அதி காரிகள், யாரையும் உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கவில்லை. இதேபோல், புதுச் சேரியில்,பல இடங்களில் நடந்த சோதனை யின் போதும், வாடிக்கையாளர்கள், அலுவல கத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
- நமது சிறப்பு நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக