சென்னை: நடிகை சபர்ணா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, சபர்ணா வீட்டில் இருந்து அவரது டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டம், உடுமலைபேட்டை அருகே காட்டூர் கிராமத்தை சேர்ந்த அனந்தகுமார்- புஷ்பலதா தம்பதி மகள் சபர்ணா (25). சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் ெதாகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘பிரிவோம், பூஜை, குடியரசு, காளை’ உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார்.
சினிமா புள்ளி ஒருவரை சபர்ணா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது சபர்ணா பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், அவரது பெற்றோரை விட்டு பிரிந்து சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர், 1வது பிரதான சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சபர்ணா தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சபர்ணா வசித்து வந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்த பக்கத்தில் குடியிருப்பவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மதுரவாயல் போலீசார் அங்கு வந்து பார்த்த போது படுக்கை அறையில் அரை நிர்வாண கோலத்தில் சபர்ணா பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை கழட்டி வைக்கப்பட்டிருந்தது. இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் இருந்தது. தரையில் கொட்டியிருந்த ரத்தம் உலர்ந்திருந்தது. இதனால், அவர் இறந்து 3 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என தெரிகிறது. சபர்ணாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சபர்ணா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ேகாயம்பேடு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சபர்ணாவின் வீடு முழுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்துகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:
நடிகை சபர்ணா வீட்டுக்கு நாங்கள் சென்ற போது, கதவு பூட்டப்பட்டிருக்கவில்லை. தாழிடாமல் மூடப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது. அரை நிர்வாணமாக சபர்ணா பிணமாக இருந்தார். சடலத்துக்கு அருகில் சிறிய கத்தி எடுக்கப்பட்டுள்ளது. அவரது இடது கை உடைந்த நிலையில் உள்ளது. கழுத்து பகுதியில் நகத்தின் கீறல்கள் பட்டு காயம் உள்ளது. இதனால், அவரை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது அவரே குடித்தாரா என்பதை அறிய ரத்த மாதிரிகளை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். அந்த சோதனை முடிவு வர இரண்டு வாரம் ஆகும்.
சபர்ணா இறந்து கிடந்த இடத்தில் கடையில் இருந்து டீ வாங்கி குடித்த 20 கப்புகள் கிடந்தன. அதில், பல கப்புகளில் சிகரெட் துண்டுகள் அணைக்கப்பட்டிருந்தது. அவை அனைத்தும் ெவவ்வேறு பிராண்டுகள். மேலும் இரண்டு மதுபாட்டில்களும் கிடந்தன. சபர்ணாவுக்கு போதை பழக்கம் இருந்ததா, நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வாரா என்பது குறித்தும் விசாரிக்கிறோம். அப்பகுதியில் உள்ள டீ கடை வைத்திருப்பவர்களிடம் விசாரித்த போது, சபர்ணா இரவு நேரத்தில் தினமும் டீ வாங்கி கொண்டு போவார் என்று தெரிவித்துள்ளனர். தனியார் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு நிறைந்த பகுதி, வெளியாட்கள் யாரும் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது. எனவே, வாட்ச்மேன் வைத்திருக்கும் பார்வையாளர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்து வருகிறோம்.
சபர்ணா வீட்டில் நேற்றுமுன்தினம் சோதனை செய்தபோது டைரி ஒன்று கிடைத்தது. அந்த டைரியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களின் மூலம் சில துப்புகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளோம். மேலும், அவர் சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில், யாரையும் நம்பக்கூடாது போன்று சில வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. சபர்ணா சின்னத்திரை கலைஞர்களுடன் மட்டுமே பழகுவார் என்று தெரியவந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் விசாரிக்க உள்ளோம். 3 நாட்களாக அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப்-பில் இருந்துள்ளது. எனவே, 3 நாட்களுக்கு முன்பு யாரிடம் பேசினார் என்றும் ஆராய்ந்து வருகிறோம்.
சபர்ணாவுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விட்டன. இதனால், இந்தி சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.
இதற்காக டெல்லிக்கு சென்று வந்தார். அங்கு நவீன் என்ற சினிமா பிரமுகரை காதலித்ததாக கூறப்படுகிறது. அந்த காதல் தோல்வியடைந்ததாக தெரிகிறது. மேலும், சென்னையில் அவருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். கடைசியாக அவரிடம்தான் பேசியுள்ளார். அப்போது, விரைவில் வீட்டை காலி செய்ய போகிறேன். பேசாமல் டெல்லியில் போய் செட்டில் ஆக போகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அந்த பணத்தை ஓரிரு நாளில் தருவதாக கூறியுள்ளார். இதனால், அவரது வீட்டுக்கு ஆண் நண்பர் அல்லது காதலர் யாராவது வந்திருக்கலாம். அதன்பின் சபர்ணா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், நடிகை சபர்ணாவின் மொபைல் போனில் கடைசியாக பேசியது யார் என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடைசியாக அவர் தனது நண்பருக்கு பிறகு, ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேசியிருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சபர்ணா ஜஸ்ட் டைல் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் டிரைவர் மொபைல் எண் வாங்கியுள்ளார். அவரிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், அவர் மொபைல் போனை எடுக்கவில்லை. பின்னர் 30 நிமிடங்கள் கழித்து சபர்ணாவின் எண்ணிற்கு ஆம்புலன்ஸ் டிரைவர் பேசியுள்ளார். அப்போது, அவரை சபர்ணா தகாத வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து சபர்ணாவின் உடல் அவரது பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பின்னர் போரூரில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
கத்திக்குத்து
சபர்ணாவின் பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கை வெளிவந்துள்ளது. அதில், இடது கை 5 இன்ச் ஆழத்தில் வெட்டியிருப்பது தெரியவந்துள்ளது. சபர்ணாவின் கையில் வேறொருவர் வெட்டும் பட்சத்தில் 10 இன்ச் ஆழத்திற்கு மேல் கத்தி சென்றிருக்கலாம். ஆனால், அவர் கையில் பட்ட வெட்டு காயத்தை பார்க்கும் போது, அவரே தனது கையில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்த பிறகு அடுத்தகட்ட விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். தினகரன்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக