ஞாயிறு, 13 நவம்பர், 2016

புது ரூ.2000 கள்ளநோட்டு சிக்மகளூரில் வியாபாரியிடம் சிக்கியது. அறிமுகமான 3வது நாளே கள்ளநோட்டு...

சிக்மகளூர் பழைய ரூபாய் 500, 1000 செல்லாது என்று பிரதமர் மோடி
அறிவித்திருந்தார். இதனால் நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை பொதுமக்கள் பெற்று வருகின்றனர் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதனால் அதை வைத்து கள்ளநோட்டுகள் அச்சடிக்க முடியாது என்று கூறப்பட்டது. 2000 ரூபாய் நோட்டில் ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய நானோ சிப் உள்ளதால் அதை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை என நிதியமைச்சகமே மறுத்து உள்ளது. புதிய 2000 ரூபாய் நோட்டில் எந்தவித புதிய பாதுகாப்பு அம்சமும் சேர்க்கப்படவில்லையாம். அதனால் அதே போன்று கள்ளநோட்டுகள் அடிப்பதில் சிக்கல் இருக்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணத்திற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அம்சங்களும் கள்ளநோட்டு கும்பலால் எளிதில் காப்பியடிக்க முடியும் என கூறப்பட்டது


இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் ரூ.2000 கள்ள நோட்டு புழக்கத்தில் விட்டுள்ளனர். இது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து கள்ள நோட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கள்ளநோட்டை புழக்கத்தில் யார் விட்டார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 அசோக் என்ற  வெங்காய விவசாயி ஒருவர் அங்குள்ள ஏபிஎம்சி மார்க்கெட்டில்  வெங்காயம் விற்று உள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புதிய 2 ஆயிரம் நோட்டை கொடுத்து உள்ளார். இது புது நோட்டு செல்லும் என கூறி உள்ளார்.ஆனால அசோக் அதனை தன்னுடைய நண்பர்களிடம் காட்டி உள்ளார். ஆனால் அது உண்மையான நோட்டு இல்லை என்றும் அது போட்டோகாபி எடுக்கப்பட்ட நோட்டு எனவும் தெரியவந்தது. இது குறித்து அசோக் போலீசில் புகார் செய்து உள்ளார்.

இது குறித்து போலீஸ் சூப்பிரெண்டு அண்ணாமலை கூறும் போது:-

இது போட்டோ காபி எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டு. எளிதில் இதையாரும் கவனிக்க முடியும்.அடையாளம் தெரியாத நபர் சந்தையில் இதை கொடுத்து உள்ளார்.இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்து 3 நாட்களே ஆன நிலையில் தற்போது கள்ளநோட்டை அச்சடித்தது பொதுமக்களிடையே பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது.dailythanth,com

கருத்துகள் இல்லை: