:கர்நாடகாவில்,
சுரங்க ஊழல் வழக்கில் இருந்து, முன்னாள் முதல்வரும், அம்மாநில, பா.ஜ., தலைவருமான, எடியூரப்பா உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டனர். கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2008ல், பா.ஜ.,வைச் சேர்ந்த, எடியூரப்பா முதல்வராக இருந்த போது, பெல்லாரி பகுதியில் சுரங்க ஒதுக்கீடு செய்ததில், 40 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. எடியூரப்பா, அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திரா, மருமகன் சோகன் குமார் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது; 2015ல், எடியூரப்பா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதி, ஆர்.பி.தர்மகவுடர் தன் தீர்ப்பில், 'குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, சரியான ஆதாரங்கள் இல்லாததால், அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர்' என்றார். ஊழல் வழக்கு காரணமாக,நெருக்கடிக்கு ஆளாகி இருந்த எடியூரப்பாவிற்கு,
இந்த தீர்ப்பு நிம்மதியை அளித்துள்ளது.
கர்நாடகாவில், ௨௦௧௮ல், சட்டசபை தேர்தல் நடக்க வுள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள, பா.ஜ., இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க, தயாராகி வரு கிறது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எடியூரப் பாவை, பா.ஜ., மேலிடம் ஓரம் கட்டி வைத்திருந்தது. கர்நாடகாவில், எடியூரப்பாவுக்கு செல்வாக்கு உள்ள தால்,அடுத்த தேர்தலில் வெற்றி பெற, அவரது உதவி, கட்சி மேலிடத்துக்கு தேவைப்படுகிறது.
இதன் காரணமாகவே, அவருக்கு மீண்டும், கட்சியின் மாநில தலைவர் பதவி தரப்பட்டது. தற்போது, ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கபட்டு உள்ளதால், நிம்மதி யடைந்துள்ள எடியூரப்பா, மீண்டும் முழு வீச்சில் கட்சி பணிகளில் இறங்க முடிவு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில், சுரங்கம் அமைப்ப தற்காக, 'சவுத் வெஸ்ட் மைனிங்' நிறுவனம், எடியூ ரப்பாவின் குடும்பத்திற்கு சொந்தமான, 'பிரேரனா டிரஸ்டு'க்கு, பல கோடி ரூபாய் நன்கொடை வழங்கி யது. இதனால், அந்நிறுவனத்திற்கு, அப்போது முதல் வராக இருந்த எடியூரப்பா, பல சலுகைகளை வழங்கி யதாகவும் கூறப்பட்டது. இதனால், அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது.
இதன்பின்,ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, காங்கிரசை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்ற தும், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு வேகம் எடுத்தது. 'சத்யமேவ ஜெயதே' ஊழல் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக் கப்பட்டது குறித்து, எடியூரப்பா கூறியதாவது: ச'த்யமேவ ஜெயதே' எனப்படும், 'வாய்மையே வெல்லும்' என்பது தான், என் நிலைப்பாடு. கோர்ட்டில் எனக்கு நீதி கிடைக்கும் என, முழுமையாக நம்பினேன்;நம்பிக்கை வீண் போகவில்லை.
இனிமேல், மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் செய்வேன்; கர்நாடகா வில், பா.ஜ., வை மீண்டும் ஆட்சியில் அமர்த்து வது தான், என் இலக்கு.இவ்வாறு அவர் கூறினார்.
எடியூரப்பா மீதான ஊழல் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே,அவரை, மாநில தலைவராக, பா.ஜ., தலைமை நியமித்தது. இதில் இருந்தே வழக்கின் போக்கு தெரிந்து விட்டது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, சி.பி.ஐ., இந்த வழக்கை சரிவர நடத்தவில்லை.
- டாம் வடக்கன் dinamalar.com

வழக்கு என்ன?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக