முகநூல் பதிவு : இலங்கை மலையக தமிழர்களை ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை குறிக்கும் சொல்லால் இலங்கை தமிழர்
குறிப்பிடுவதாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையத்தில் எழுதியுள்ளார்.
ஜெயமோகன் அந்த ஜாதிபெயரை குறிப்பிட்டு எழுதிய விதம் இவர் சர்வ சாதாரணமாக
அப்படிதான் தாழ்த்தப்பட்ட ஜாதியினரை அழைக்கிறார் என்று ஊகிக்க கூடியதாக
இருக்கிறது. ஜெயமோகன் போன்ற ஜாதியவாதிகளிடம் இந்த வெறி இருப்பது
தெரிந்ததுதான் .இவர் தனது ஜாதிவெறி சொற்பிரயோகத்தை இலங்கை தமிழர்களின்
வாயில் திணிப்பது கடைந்தது எடுத்த கயமைத்தனம் . மலையக மக்களை ஒருபோதும
ஜாதி பெயரோடு இலங்கையில் யாரும் குறிப்பிடுவதே இல்லை. மலையக மக்கள்
பலஜாதியையும் சேர்ந்தவர்களாகும் . அதுமட்டும் அல்ல ஏராளமான மலையக தமிழர்கள் யாழ்ப்பாண மட்டக்களப்பு தமிழர்களை திருமணம் முடித்து உள்ளார்கள் . இவர்களுக்கு இடையே இதுவரை எந்த விதமான ஜாதி தகராறும் ஏற்பட்டதே இல்லை .இந்த ஜெயமோகன் எவ்வளவு பெரிய பொய்யன் என்பது இத்தால் சகலரும் அறிந்து கொள்ளவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது இவ்வளவு காழ்புணர்ச்சி ஜெயமோகனுக்கு ஏன் வந்துள்ளது? அண்மையில் இவர் பல நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். இவர் எதிர்பார்த்த வரவேற்பும் டாலர்களும் இவருக்கு கிடைக்காததுதான் காரணம் என்று கருதுகிறேன்
Sinna Siva மலையகமக்களை தோட்டக்காட்டான், வடக்கத்தையான் என்று யாழ்ப்பாணிகள் அழைப்பதுண்டு.
Radha Manohar அது உண்மைதான் ஆனால் ஜெயமோகன் பாவித்த வார்த்தை ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியை குறிக்கும் வார்த்தையாகும். எந்த காலத்திலும் யாழ்ப்பாணிகளோ மட்டக்கலப்பாரோ அந்த வார்த்தையை பிரயோகித்ததே கிடையாது. அது ஜெயமோகன் பாவிக்கும் வார்த்தை.. மலயகத்தினரும் யாழ்ப்பாணிகளை பாணிகள் என்றும் அழைப்பதை கேட்டிருக்கிறேன். இவை எல்லாம் ஜாதியை குறிக்கும் வார்த்தைகள் அல்ல , ஆனால் ஜெயமோகன் ஜாதிப்பெயரை அல்லவா சூட்டுகிறார் முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக