வியாழன், 8 அக்டோபர், 2015

தலிபான்களுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பெண் வேடமிட்டு தப்பினர்!

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் குண்டூஸ் நகரை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினார்கள். அந்த நகரை மீட்பதற்காக ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடும் சண்டைக்கு பிறகு அந்த நகரம் மீண்டும் ஆப்கானிஸ்தான் ராணுவகட்டுப்பாட்டில் வந்தது. இந்த சண்டையில் ஏராளமான தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் தீவிரவாதிகள் இந்த நகரை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேரடியாக உதவி செய்ததாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் ராணுவ துணை தளபதி முராக் அலி கூறியதாவது:- நாங்கள் குண்டூஸ் நகரை மீண்டும் கைப்பற்றும்போது அங்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பதுங்கி இருந்தனர். அவர்களை நாங்கள் கைது செய்ய முயற்சித்தோம். ஆனால் அவர்கள் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அங்கிருந்து தப்பி விட்டனர்.


பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் செய்த உதவியால்தான் தலிபான் தீவிரவாதிகள் இந்த நகரை கைப்பற்றினார்கள். ஆனால் நாங்கள் சரியான பாடம் புகட்டினோம். தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இதை பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கீழ்த்தரமான குற்றசாட்டுகளை எங்கள் மீது கூறியுள்ளது என கூறியுள்ளார் dailythanthi.com

கருத்துகள் இல்லை: