வியாழன், 26 பிப்ரவரி, 2015

பன்னீர்செல்வம் படித்த 75 நிமிட பதிலுரை முழுக்க முழுக்க தவறான தகவல்கள்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல்களை பதிவு செய்வதை அறிந்து திகைத்து போனதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில்,நடந்து முடிந்த சட்டப் பேரவையில் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் படித்த 75 நிமிட பதிலுரையைக் கேட்டு கொண்டிருந்த போது, எவ்வளவு தவறான தகவல்களை சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் பதிவு செய்கிறார் என்பதை எண்ணி திகைத்து போனேன். 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 4640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு தற்போது கிடைத்து வருகிறது என்று சொன்னவர், அதன் தொடர்ச்சியாக " மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது " என்றார்.ஆனால் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின், புதிய மின்திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் உண்மை.தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறது அதிமுக அரசு.


அடுத்து, பெரிய தொழில் முதலீடுகள் பற்றி திரு பன்னீர்செல்வம் படித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் தொழில்துறையில் கடைசி இடத்திற்கு அதாவது 18வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 2013-14 இல் வெறும் 1.61 சதவீதம் தான் என்பது மத்திய அரசின் புள்ளியியல் துறை தந்துள்ள புள்ளிவிபரம் சொல்கிறது. அதிமுக ஆட்சியில் தொழில் துறை முன்னேற்றம் இவ்வளவு தான்.

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான ஆணை பெறப்படும் என்று முதலமைச்சர் படித்தார். கழக ஆட்சியில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக 2009 இல் இயற்றப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதோடு,ஜல்லிக்கட்டு நடத்தவும் தடை விதிக்கப்பட்டது. பிறகு வந்த அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவினை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. உரிய காலத்தில் உச்சநீதிமன்றத்தை அதிமுக அரசு அணுகியருந்தால் சாதகமான உத்தரவை பெற்றிருக்கலாம். ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் தென்மாவட்ட மக்கள் போராடிச் சோர்ந்த பிறகு, ஆணை பெறப்போகிறோம் என்று சொல்வது யாரை ஏமாற்றுவதற்காக?

இவ்வாறு மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள் nakkheeran.in

கருத்துகள் இல்லை: