:"அரசியல் கட்சியினரிடம் மட்டுமே, பண பறிமுதல்
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தேவையில்லாமல், பொதுமக்களை துன்புறுத்தக்
கூடாது' என, தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஒழிக்கும் முயற்சிகளை, தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. சந்தேகத்துக் கிடமாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, யாராவது பணத்தை கொண்டு சென்றால், அவர்களிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இதை எதிர்த்து, குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. http://www.dinamalar.com/
இந்த மனுவை விசாரித்த, குஜராத் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை தடுப்பதாக கூறி, ஒட்டு மொத்தமாக, அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தக் கூடாது.சந்தேகத்துக்கிடமாக, யாராவது, 2.5 லட்சத்துக்கும் அதிகமாக கொண்டு சென்றால், அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தவறு.இதுபோன்ற நடவடிக்கைகளால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கை.இவ்வாறு குஜராத் ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, தேர்தல் ஆணையம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள், டி.கெ.ஜெயின், மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சந்தேகத்துக்கிடமாக பணம் வைத்திருப்பதாக கூறி, ஒட்டு மொத்த சோதனைக்கு உத்தரவிடுவது தவறு. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தலுக்காக, அரசியல் கட்சியினரால் நியமிக்கபட்டுள்ள ஏஜென்டுகள் ஆகியோரிடம் தான், சோதனை நடத்த வேண்டும்; பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.அரசியல் கட்சியினர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பணத்தை கொண்டு சென்றால், பறிமுதல் செய்யலாம். எனவே, இது தொடர்பான, உங்களின் உத்தரவை திருத்தம் செய்யும்படி, இந்த கோர்ட் வலியுறுத்துகிறது. இந்த இடைக்கால உத்தரவு, குஜராத் தேர்தல் முடியும் வரை, அமலில் இருக்கும். தேர்தல் முடிந்தபின், இந்த வழக்கு குறித்து, விரிவாக விசாரிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக