ஞாயிறு, 3 அக்டோபர், 2010

வட அமெரிக்காவில் மாத்திரம் 42 விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட

யுத்தக் குற்றச்சாட்டுக்களை களைவதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்-ரொஹான் குணரத்ன

தமிழீழ  விடுதலைப்   புலிகளுக்கு வடகொரியா கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் உதவிகளை வழங்கியுள்ளதாக சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளமைப்பு ஆணைக் குழுவுக்கு முன்னால் சாட் சியம் அளிக்கும் வேளையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.   தனது சாட்சியத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…,
விடுதலைப்புலிகளுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான ஆயுதப் பரிவர்த்தனையை, புலிகளின் கணக்காளர் பொன்னையா ஆனந்தராஜா மேற்கொண்டார். அவர் தாய்லாந்தை வெளித்தளமாக பயன்படுத்தி, வடகொரியாவின் பாரிய கனரக ஆயுதங்களை விநியோகித்து வந்துள்ளார் இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வடகொரியாவை தெளிவுபடுத்த வேண்டியது முக்கியமானது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது    நிதிகளுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களை நடத்தியதுடன், மறுபக்கத்தில் பாரிய ஆயுத வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளனர் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் விடுதலைப் புலிகளின் ஆயுத பரம்பல் காணப்பட்டன. அத்துடன் இந்தியாவுடன் அவர்கள் முக்கிய ஆயுத ஒத்துழைப்புகளை கொண்டிருந்தனர்.
துரதிர்ஷ்ட வசமாக இந்தியாவுடன் இலங்கை கொண்டிருக்க வேண்டிய முக்கிய உறவு குறித்து,    இலங்கை அரசாங்கம் போதிய தெளிவினைக் கொண்டிருக்கவில்லை. இலங்கையில் சமாதானம் நிலைக்க, இந்தியாவுடனான உறவு முக்கியமானது.   பிந்திய நிலையிலேனும்,    இலங்கை தொடர்பில்  முன்வைக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுகளை களைவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.      தவறும் பட்சத்தில் அவர் பல்வேறு எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச தொடர்புகள் இன்னும் இயங்கி வருகின்றன.
இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துவிட்டதாக பெருமிதம் கொண்டுள்ளமையே,     சர்வதேச விடுதலைப் புலிகளின் வலையமைப்பில் கைவைக்க முடியாது போயுள்ளது. வட அமெரிக்காவில்  மாத்திரம்    42 விடுதலைப் புலிகளின்   சிரேஷ்ட அதிரிகாகள் செயற்பட்டு வருகின்றனர்     குறிப்பாக நோர்வேயில்  இயங்கும் நெடியவன் தற்போது  விடுதலைப்  புலிகளை வழிநடத்துகிறார்.
எவ்வாறாயினும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமைப் பொறுப்பு இதுவரையில் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை. நெடியவனும், பிரபாகரனின் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: