ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள புதிய சட்டப் பேரவையில் குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் 8ம் தேதி முதல் நடைபெறும் என்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அறிவித்துள்ளார்.
இது 13வது சட்டப் பேரவையின் 14வது கூட்டத் தொடர் ஆகும். ஒருவார காலம் நடக்கவுள்ள இந்தக் கூட்டத் தொடரில்
முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் அதற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
மேலும் சென்னையின் எல்லையை விரிவுபடுத்த வகை செய்வதற்கான மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிகிறது.
பதிவு செய்தது: 02 Oct 2010 6:45 pm
ஒரே நாளில் இந்திய அரசு ஹிந்தி எழுத்தை அதன் நாட்டின் பணக்குரியீடாக (rupee symbol) கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நாம் பதிலடி கொடுக்காலம். நம் தமிழ்நாடு அரசு நினைத்தால் ஒரே நாளில் , ஆங்கில எண்கள் அனைத்தையும் தமிழ் எண் குறியீடாக மாற்ற முடியும் . ஒரு அரசாணையால் , தமிழ்நாட்டில் புழக்கத்தில் உள்ள அத்தனை எண் குறியீட்டையும், தமிழ் எண்களால் மாற்றினால் , நம் தமிழுக்கு பெருமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக