ஞாயிறு, 18 ஜூலை, 2010

கோழிப் பண்ணை அதிபரிடம் லஞ்சம் .அகப்பட்ட 'அ.தி.மு.க.' டி.எஸ்.பி.!

அகப்பட்ட 'அ.தி.மு.க.' டி.எஸ்.பி.!
காவல் துறையில் சிறப்பாகவும் நேர்மையாகவும் பணி புரிந்தமைக்காக 'உத்தமர்காந்தி' விருது வாங்கிய டி.எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால், இந்த விவகாரம் 'லைம் லைட்'டுக்கு வந்துள்ளது!
நாமக்கல் நகர சட்டம் - ஒழுங்கு பிரிவு டி.எஸ்.பி-யாக இருந்தவர் சீனிவாசன். கோழிப் பண்ணை அதிபரிடம் லஞ்சம் வாங்கியதாகத்தான் இந்த நடவடிக்கையாம். போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்கு, மோகனூரில் ஒரு கோழிப் பண்ணை வாங்குவது தொடர்பாக பிரச்னை. மோகனூரைச் சேர்ந்த ஷேக்நவீத், சண்முகம், ரவின்னு மூணு பேர் மேல் ஆரோக்கியசாமி புகார் கொடுத்தார். போலீஸார் அவங்க மீது வழக்குப் பதிவு செஞ்சாங்க. இந்தச் சூழ்நிலையில்தான், அந்த மூணு பேரும் டி.எஸ்.பி. சீனிவாசனைப் போய்ப் பார்த்தாங்க. அவங்களை வழக்கில் இருந்து வெளியே கொண்டுவர, முதலில் ஒரு லட்சம் கேட்டாராம். அவங்களும் கொடுத்திருக்காங்க. அதுக்குப் பிறகும் தொடர்ந்து அவங்ககிட்ட டி.எஸ்.பி. தரப்பில் இருந்து பணம் கேட்டு நச்சரிச்சிருக்காங்க. அப்புறம்தான் அந்த மூணு பேரும் லஞ்ச ஒழிப்புத் துறையில புகார் பண்ணி இருக்காங்க. போலீஸார் விரிச்ச வலையில் சீனிவாசன் வகையா சிக்கிக்கிட்டார். லஞ்சப் பணத்தை வெச்சிருந்த சீனிவாசன் உதவியாளர் சுப்ரமணியத்தையும் போலீஸார் கைது பண்ணிட்டாங்க!" என்றார்கள்.
"திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன், 1972-ம் ஆண்டில் கிரேடு ஒன் போலீஸாக வேலையில் சேர்ந்தார். எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர் எனப் பதவி உயர்வு பெற்று, சில வருடங்களுக்கு முன்புதான் டி.எஸ்.பி-யாகி நாமக்கலுக்கு வந்தார். அ.தி.மு.க-வில் திருச்சி மண்டலப் பொறுப்பாளராக இருக்கும் கலியபெருமாளின் உடன்பிறந்த சகோதரியைத்தான் சீனிவாசன் திருமணம் செய்தார். 2001 சட்டமன்றத் தேர்தலின்போது அவர் ராசிபுரம் ஏரியாவில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது திருச்சி மண்டலப் பொறுப்பாளரான கலியபெருமாள், சீனிவாசனிடம் சில வேலைகளைக் கொடுத்தார். வேட்பாளர்களைத் தேர்வு செய்ததில் சீனிவாசனின் பங்கு அதிகம். அப்படியே அ.தி.மு.க- வில் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் மாற... நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களை சீனிவாசன் கையில் கலியபெருமாள் ஒப்படைத்தார். டி.எஸ்.பி-யாக இருந்தாலும்கூட இந்த மாவட்டங்களில் அ.தி.மு.க-வில் யாருக்குப் பொறுப்பு கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் சீனிவாசனிடம் இருந்தது. அண்மையில், தி.மு.க-வுக்குப் போன கரூர் சின்னசாமி கட்சியைவிட்டுப் போகும்போது, இந்த விஷயத்தை பகிரங்கமாக சொல்லிவிட்டார். அப்போதே சீனிவாசன் மீது ஏதாவது நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. அது இப்போது நடந்திருக்கிறது. அவ்வளவுதான்!" என்கிறார்கள் அ.தி.மு.க-வில் இருக்கும் நடுநிலையாளர்கள்.
சீனிவாசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க, அடுத்த நாளே நெஞ்சு வலிப்பதாக அவர் சொன்னார். அவரை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினர்.
சீனிவாசன் தரப்பில் இந்த விவகாரம்பற்றி கேட்டால், "நேர்மைக்கு இன்னொரு பேர் பெயர் சீனிவாசன். இதில், திட்டமிட்டே அவரை சிக்கவெச்சிருக்காங்க. கட்சிக்கு உண்மையாக உழைக்கிறவனுக்கு நல்லது மட்டும்தான் சீனிவாசன் பண்ணிட்டு இருந்தார். கட்சிக்காரன் எவன்கிட்டயும் பதவி வாங்கித் தர்றேன்னு 10 பைசாகூட வாங்கியதில்லை. அவரைப் பிடிக்காதவங்க கிளப்பிவிடுற தகவல்கள் எல்லாம் பொய்தான்!" என்றனர்.
சீனிவாசன் மனதில் இடம் பிடித்துவிட்டால், கட்சியில் தங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நினைத்து அ.தி.மு.க-வில் இருக்கும் பலரும் போட்டி போட்டுக்கொண்டு அவரைப் பார்க்க மருத்துவமனைக்குப் படை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்!
-கே.ராஜாதிருவேங்கடம்

காந்தி பெயரை எப்படியெல்லாம், யாரெல்லாம் கெடுக்கிறார்கள்...... ஏண்ணா! தன் வினை தன்னை சுடுதோ?ajendran
  
அப்படியே இந்த் சீனிவாசன் அழகிரி அண்ணங்கிட்ட பேசினார்ன்னு போடுங்கப்பு. அப்புறம் பாக்கலாம், யாரு இவர் நேர்மையானவர்ன்னு சொல்றாங்கன்னு. (அதிமுக காரன் சொல்ல மாட்டான். ஏன்னா கட்டம் போட்டுருவாங்களே!!)
Rajendran
 
அது எப்படிப்பா, நல்லா இருக்கறவய்ங்கள்லாம் பிடி பட்ட உடன நெஞ்சு வலி கரெட்டா வருது? அரசு ஆஸ்பத்திரி பொது வார்டுல போடுங்க. அப்புறம் பாக்கலாம் நெஞ்சு வலியா இல்ல ..ஞ்சு வலியான்னு.
Suresh
 
காந்தி விருது வாங்கியவர், "காந்தி" வாங்கினாரா? உதவியாக்ளரை கொஜ்ஜம் கவனிக்கவேண்டும்.
hir Husain
 
ஆமாமாம் வேறயாரும் கெடுக்கக்கூடா
Mohamed Razvi
ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருக்கும் அதிகாரியிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்???

Mohanakrishnan
  
Mr.Soundararajan, you can easily guess the ultimatum of JV is to bring down DMK and give way for ADMK. They will the vice versa after 5yrs.
.சிவா
 //அரசியலில் இதெல்லாம் சகஜம். லஞ்சம் வாங்காத அதிகாரி கிடையாது. ஆனால் நெஞ்சுவலி வரும் திடகாத்திரமா இல்லாத அதிகாரிக்கு பதவி எதற்கு?// lakshmi narayanan : Superb

கருத்துகள் இல்லை: