க்னோ :ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப் பட்டது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு, உ.பி., முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி சற்றும் அசரவில்லை. நேற்று நடந்த கட்சிக் கூட்டத்தில், மீண்டும் அவருக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கப்பட்டது.
'இனிமேல் மாயாவதிக்கு, பூமாலைக்கு பதில், ரூபாய் நோட்டு மாலை மட்டுமே அணிவிப்போம்' என, அக்கட்சியினர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.இரு நாட்களுக்கு முன், உ.பி., தலைநகர் லக்னோவில், பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் நடந்தன. ஐந்து லட்சம் தொண்டர்களை திரட்டி, பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்காக, 200 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.இந்த விழாவில், லக்னோவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தங்கள் தலைவியை கவுரவிக்கும் வகையில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு, ரூபாய் நோட்டுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான மாலையை அணிவித்து, அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர்.இந்த மாலையில் இடம் பெற்றிருந்தவை அனைத்தும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். மாயாவதிக்கு ரூபாய் நோட்டு மாலை போட்ட காட்சிகள், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பானதும், நாடு முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த மாலையை உருவாக்குவதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, அந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். லோக்சபாவிலும் இந்த பிரச்னை பெரிய அளவில் எதிரொலித்தது. வருமான வரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணையை துவக்கியுள்ளனர்.மீண்டும் மாலை:இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நேற்று காலை லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த விழாவில், முதல்வர் மாயாவதிக்கு மீண்டும் ஒரு பிரமாண்டமான ரூபாய் நோட்டு மாலை போடப்பட்டது. இந்த மாலையின் மதிப்பு 18 லட்சம் ரூபாய் என்றும், இதில் 1,000, 500, 100 என, பல்வேறு ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றுள்ளன என்றும், கட்சி நிர்வாகிகளே தெரிவித்தனர்.
1 கருத்து:
இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி முக்கியங்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். மாயா தனக்கு கீழே இருக்கும் பிராமண அதிகாரிகளை உயர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு , தன் ஜாதிக்காரர்களையே முக்கிய அரசுப்பணிகளில் அமர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது
மற்றவை
http://manakkan.blogspot.com/2010/03/blog-post_18.html
கருத்துரையிடுக