புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் புலிகள் இன்னும் அழியவில்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் புலிகள் அமைப்பு அழியாமல் பாதுகாத்து வருவதாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கிறார்.
அவர் அப்பேட்டியில் தெரிவித்துள்ளதாவது. எல்லாம் இன்னும் முடிந்துவிடவில்லை. செயல்படா உறுப்பினர்களும் ஆர்வமுள்ள தரப்பினரும் இன்னும் இருக்கிறார்கள், குறிப்பாக இலங்கைக்கு வெளியில் அவர்கள் இருக்கின்றார்கள்.
வெளிநாட்டுத் தமிழர்கள் சிலர் ஈழத்தை வைத்து வாழ்க்கை நடத்துவதாகவும் கூறிய அவர் 'புலிகள் அமைப்புக்காக வெளிநாட்டில் பணம் திரட்டி வந்தவர்கள் தங்களது வயிற்றுப் பிழைப்பை இழந்துவிட்டார்கள். தமிழர்கள் இப்போது நிதி வழங்க முன்வருவதில்லை என்பது இதற்குக் காரணம். எனவே, தமது உழைப்பை பெருக்குவதற்காக செயலில் இறங்கவும் இங்கு ஏதாவது செய்யவும் விரும்புகிறார்கள்.
ஆனாலும், வெளிநாட்டிலுள்ள தமிழர்களில் பெரும்பானோர் இலங்கையில் அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பதை வரவேற்பதாகவும் திரு ராஜபக்சே குறிப்பிட்டார். அவர்களில் சிலர் இலங்கைக்குத் திரும்பிவந்து வாழவும் முதலீடு செய்யவும் விரும்புகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ்கூடத் தெரியாது , இதே நிலைதான் வெளியேயுள்ள சிங்களவர்களிடமும் காணப்படுகின்றது.
இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரும் இப்போதெல்லாம் நிம்மதியாக வாழ்கிறார்கள். பொதுக்கூட்டம் ஒன்றில், தனக்கு ஆதரவான தமிழ் வழக்கறிஞர் ஒருவர் எழுந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அதன்வழி தமிழர்கள் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்றும் கேட்டுக் கொண்டதாக தெரிவித்த ராஜபக்ச அச்சந்தர்பத்தில் , இவ்வாறு செய்யக்கூடாது என்று இளம் தமிழ் ஆடவர் ஒருவர் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.
'தயவுசெய்து மறுபடியும் எங்களைப் பிரிக்காதீர்கள்.' எங்கள் அனைவரையும் ஒரே நிழலின்கீழ் வைத்திருப்பதே நல்லது,' என்று அவ்விளைஞர் சொன்னதாக அதிபர் தெரிவித்தார்.
வடகிழக்கு இணைப்பு என்பதனை தான் செய்யமாட்டேன் என உறுதிபடக்கூறியுள்ள அவரிடம் இந்தியா, அல்லது சுவிற்சர்லாந்து போன்ற சமஸ்டி முறையிலான தீர்வு பற்றி கேட்டபோது, சமஸ்டி என்ற சொற்பதம் இலங்கை மக்களுக்கு சூனியம் எனவும் அது நாடுபிரிபடுவதாக அவர்கள் அர்த்தம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாயின் சமஸ்டி பற்றி பேசலாம் என தெரிவித்துள்ளார்.
தமிழர்களை மத்திய வட்டத்திற்குள் கொண்டு வர குறிப்பிட்ட சில திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்வதாக தெரிவித்ததுடன் , கிழக்கு மாகாணத்திலிருந்து 500 தமிழர்கள் பொலிஸ் திணைக்களத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர். வட மாகணத்திலிருந்து மேலும் 450 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரிலிருந்து தலையெடுக்கும் இலங்கை, வட்டார விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மையமாகத் திகழவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சராசரி தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் விரும்புகிறது. தனது இரண்டாவது தவணைக் காலத்தில் 'இந்நாட்டை கல்வித்துறை, கப்பல்துறை, விமானத்துறை, தொடர்புத்துறை, பயணத்துறை மையமாக உருவாக்க விரும்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.
ஜெனரல் பொன்சேகாவை ஓர் மூடன் என ஏளனமாக பேசிய அவர், ஜெனரல் பொன்சேகாவிற்கு எவ்வித மன்னிப்பும் தன்னால் வழங்கப்படமாட்டாது எனவும், அவ்வாறு செய்தால் இராணுவத்தின் ஓழக்கம் என்னவாகும் எனவும் கேள்வி எழுப்பினார். போன்சேகா தொடர்பாக தொடர்ந்து பேசிய அவர், கடந்த நவம்பர் மாதம் 16ம் திகதி இங்கு என்முன் இருந்த அவரிடம் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் உண்டா எனக்கேட்டேன், அப்போது இல்லை சேர் என்றார். புpன்னர் என்னை சந்தித்த கடைசி நாளில் கூட அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை.
ஆனால் நான் அவரிடம் அரசியல் இராணுவம் அல்ல என்பதை தெரிவித்திருந்தேன் எனவும் கூறியுள்ளார்.
அரசியல் என்பது ராணுவம் போல அல்ல. ராணுவத்தில் ஒரு ஒழுங்கு, சட்ட திட்டம் இருக்கும். ஒரு உத்தரவு போட்டால் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள்.
ஆனால் அரசியல் அப்படியல்ல. ஒரு உத்தரவு போட்டால் அது பல விதமான விளைவுகளை உண்டாக்கும். நான் நினைத்திருந்தால், அவரின் பணிக் காலத்தை நீட்டித்து தேர்தலில் போட்டியிடாமல் செய்திருக்க முடியும்.
ஆனால் நான் பயந்துவிட்டதாக யாரும் சொல்லிவிடக் கூடாது. எனவே போட்டியிடட்டும் என விட்டுவிட்டேன். பொன்சேகாவை மன்னித்து விடுவது இயலாது. நான் மன்னித்துவிட்டால், கோர்ட் நடவடிக்கைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்? மற்ற குற்றவாளிகளுக்கு என்ன பதில் சொல்வது?.
இது ஆங்கிலேயரின் சட்ட திட்டம். இந்தியாவுக்கும் எங்களுக்கும் அவர்களை இதைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
பொன்சேகா பல ஆயிரம் வீரர்களை ராணுவ நீதி விசாரணைக்கு உட்படுத்தியிருக்கிறார். ஒருமுறை 8,500 பேரை விசாரிப்பதாகத் தெரிந்தது. பின்னர் நான் சத்தம் போட்டதால் விடுவித்தார்கள் என்று கூறியுள்ளார் ராஜபக்சே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக