வியாழன், 11 மார்ச், 2010


ஒருவழி பண்ணிய நடிகை.

துறவறத்தைத் துறந்து விட்டு இல்லறத்துக்கு வரும்படி ஒரு சாமியாரை ஒரு நடிகை வலியுறுத்தினார். சாமியார் அதற்குத் தயாராக இருந்தார். ஆனால் அப்படிச் செய்தால் சிஷ்யர்களின் கோடானுகோடி சொத்து கையை விட்டுப் போய் விடும் என்று பயந்து பிறகு சாமியார் தன் முடிவை மாற்றிக் கொண்டார்.

இதனால் ஏமாற்றமடைந்த நடிகை, தன் ‘கொழுந்தனுடன்’ சேர்ந்து அந்தச் சாமியை ஒரு வழி பண்ணிவிட்டார். காமலீலை குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் அந்த சாமியின் ஆசிரம வட்டாரங்கள் இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளன.

ரஞ்சிதாவுக்கு இப்போது வயது 35. சாமியாருக்கு வயது 32. மணமான ரஞ்சிதாவுக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது விவாகரத்துக்குக் காத்து இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன், நடிகை கே ஆர் விஜயாவின் உறவுப் பெண் சுதா, ரஞ்சிதாவை சாமியாருக்கு அறிமுகம் செய்துவைத்தார். படிப்படியாக ரஞ்சிதா, சாமியாரைக் கண்டு சொக்கி, தன் இருப்பிடத்தைச் சென்னையில் இருந்து பெங்களூரூவுக்கு மாற்றிக் கொள்ளக்கூட முடிவு செய்தார். சாமியார்- ரஞ்சிதா உறவு வலுவானது. சாமியார் ஒருவர் துறவறத்தைவிட்டு இல்லறத்தைக் கைப்பிடித்த கதையை எல்லாம் சாமியாரிடம் எடுத்துச் சொல்லிய ரஞ்சிதா, ஒருவழியாகச் சாமியாரைத் தன் வழிக்குக் சொண்டு வந்தார்.

திருமணத்துக்கு முதலில் சம்மதித்த சாமியார், ஆல விருட்சமாக வளர்ந்து இருந்த சொத்து எல்லாம் போய்விடும் என்று பயந்து தன் முடிவை மாற்றிக்கொண்டு பிறகு ரஞ்சிதாவை ஔரங்கட்டினார். ரஞ்சிதா எவ்வளவே கெஞ்சிப் பார்த்தார். ஆனால் சாமியார் மசியவே இல்லை. அதோடு சாமியாரின் கண்கள் வேறு ஒரு பெண் பக்கம் திரும்பின. ஏமாற்றம், கோபம் எல்லாம் விஸ்வருபம் எடுக்க, ரஞ்சிதா, தன்னை ‘அண்ணி’, ‘அண்ணி’ என்று அன்புடன் அழைத்து வந்த லெனின் கருப்பன் என்பவரின் உதவியை நாடினார். லெனின் கருப்பன், சாமியாரின் வலது கையாக இருந்தவர். இவர் ஒரு மாதத்துக்கு முன் சாமியாரை ஏதோ ஒரு விவகாரம் தொடர்பில் மிரட்டினார். அவருக்கும் சாமியார் மசியவில்லை. சாமியாரை ஒரு கை பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு இருவரும் வந்தனர்.

ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து வீடியோ திட்டத்தைத் தீட்டினர் என்று ஆசிரம வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்தியத் தகவல் சாதனங்கள் குறிப்பிட்டு உள்ளன. “ரஞ்சிதாவும் லெனினும் சேர்ந்து இந்த வீடியோ திட்டத்தை போட்டனர் என்று நான் நினைக்கிறேன். இருவரும் பல நாட்களாக அணுக்கமாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன்,” என்று ஒரு வட்டாரம் கூறியது. “எனக்கு ரஞ்சிதாவையும் தெரியும். லெனினையும் தெரியும். இருவரும் நேர்மையானவர்கள் அல்ல என்பதும் எனக்குத் தெரியும்,” என்று சொன்னார் சாமி நித்யானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் சுவாமி சேவானந்தா.

இதற்கிடையே சாமி நித்யானந்தாவின் சார்பில் முன் ஜாமின் கேட்டு கர்நாடக நீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்று அவரின் வழக்கறிஞர் தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வேளையில் சேலம் பெரிய புதூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த எட்டு பெரும் புள்ளிகள், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டனர். பெரும் சொத்துகளை ஆசிரமத்துக்கு எழுதி வைத்துள்ள அவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. தமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுக்கும் நித்யானந்தாவுக்கும் தொடர்புகள் இருந்ததாக இந்தியா டுடே இதழில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: