சனி, 28 டிசம்பர், 2019

பார்படோஸில் நித்யானந்தா,, புதிய திருப்பம்! Nithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location

https://www.republicworld.com/india-news/general-news/nithyananda-in-barbados-complainants-daughters-affidavits-confirm-t.htmlNithyananda in Barbados Complainant's daughters' affidavits confirm their location
n another hearing of the habeas corpus matter of the self-styled Godman Nithyananda, two affidavits were filed in the Gujarat High Court by the legal team representing the corpuses claiming that the girls (daughters of the complainant Janardhan Sharma ) do not want to come to India since they ‘fear for their lives’. Both affidavits were also notarised and attested in Barbados – which proved that the girls – Lopa Mudra and Nithyananditha were in Barbados. பார்படோஸில் நித்யானந்தா?: வழக்கில் புதிய திருப்பம்!மின்னம்பலம் : நித்யானந்தா தனது இரண்டு மகள்களைச் சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட இரு பெண்களும் இந்தியத் தூதரகத்தில் ஆஜராகக் குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் தங்களது இரு பிள்ளைகளைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதாக ஜனார்த்தனன் சர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தனது இரு மகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பான, வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

டெல்லியில் கடும் குளிர் - 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு .. வீடியோ


தினத்தநதி  : புதுடெல்லி,டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும்.
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. டெல்லியில் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு முக்கிய பகுதியான சப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 12 முதல் 13 டிகிரிவரை வெப்பநிலை இருந்தது. இதே பகல் நேரத்தில் நேற்று சென்னையின் வெப்பநிலை 28 டிகிரியாகவும், ஊட்டியின் வெப்பநிலை 17 டிகிரியாகவும் இருந்தது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி குடும்பத்தின் கறுப்பு பணத்தை உலகெங்கும் தேடும் வருமான வரி துறை?

 https://keralakaumudi.com/en/news/news.php?id=155364&u=income-tax-dept-issues-notice-to-ambani-family-under-black-money-act-asks-to-reveal-foreign-assets
Income tax dept issues notice to Ambani family under black money act, asks to reveal foreign assets.. MUMBAI: The Income Tax department has apparently issued a notice to Reliance Industries Chairman Mukesh Ambani and his family under provisions of the 2015 Black money act. As per reports, the IT department has asked Ambani to reveal about the family's undisclosed assets in the HSBC bank in Geneva. 
Subaguna Rajan :  காலையில் முகேஷ் அம்பானி கருப்புப் பணத்தை வருமான வரித்துறை உலகெங்கும் துரத்துகிறது என்ற செய்தியை வாசித்ததும்
ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் உண்டானது.
என்ன நடக்கிறது இந்தியாவில்?
இது போன்ற பெரும்புள்ளிகளிற்கெதிரான வருமான வரி தேடல் நம் கவனத்திற்குரியது. இப்போதே அவசரப்பட்டு சில அவதானங்களைச் செய்வது முறையில்லைதான். ஆனால் மகிழ்ச்சி சில வார்த்தைகளைப் பேச வைக்கிறது.
மோடி / ஷா பாணி அரசியலில் குஜராத் காலத்திலிருந்து “ பிளாக் மெயில் “ ஒரு முக்கியமான காரணி. குஜராத் உள்துறை அமைச்சராக அமீத் ஷா செய்த சாகசங்கள் அவரது வீழ்ச்சிக்கு பின் சுவராஸ்யமான நூலாகும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது ‘சொந்த நிறுவனமாக ‘ கருதப்படும் அதானி குழும்மும் , அம்பானி குழுமமும் மோதுகிறதோ என்ற எண்ணம்தான் தோன்றுகிறது.
அம்பானியின் ஆகப் பெரிய பலம் பெட்ரோலியம். சமீபத்தில் சவுதியின் மிகப் பெரிய நிறுவனத்தோடு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு நிறுவனமான பி பி சி எல் ஐ யார் வாங்கப் போவது என்ற பேச்சு பரபரப்பாய் உள்ளது ( ப சிதம்பரம் அவர்களே ஒரு பேட்டியில் சொன்னார் ) . இந்த நடவடிக்கைக்கும் அதற்குமான தொடர்பு உள்ளதா?
அமீத் எதையும் செய்யத் தயங்காதவர். அதானி குழுமத்தை முதன்மையாக்குவதன் மூலம் ‘இந்தியாவை ‘ தங்களது விருப்பப்படி ஆட்டிப் படைக்கும் ஆவல் அவரிடம் இருப்பது ஆச்சர்யமில்லை.

இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சை ... சாதனை வரலாறு .. ஸ்டான்லி மருத்துவ மனை ..

  டாக்டர் ஆர். சுரேந்திரன்:  1995ல் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல்
மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை சொன்னபோது எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள்.
இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச்சிகிச்சை செய்தேன். அவர், தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்று துறைக்குகொடுத்தார். ஆனால், அந்த நிதியும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும் பலனில்லை.
இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைதொடங்கி, அதில் ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வதுஎன்று முடிவெடுத்தோம். அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டு பெற்றோம். அந்தத் துறைக்கென்று நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினார். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தை தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.

இலங்கையில் தமிழில் தேசியகீதம் பாடப்படும் .. அமைச்சர் டலஸ் அழகபெருமா விளக்கம்

தேசிய கீதம் தமிழில் பாடமுடியாது என அரசாங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. டலஸ் அழகப்பெரும சுதந்திர தின நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்படும்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி முற்றிலும் தவறானது என கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
73வது சுதந்திர நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கும், தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரையில் எவ்விதமான உத்தியோகப்பூர்வ தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் அனைத்து இன மக்களையும் இணைத்தே பயணிக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம் பெற்றவுள்ள சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தியும், அதனை தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் ஏற்பட்டமை தொடர்பிலும் தெளிவுப்படுத்தலை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெறியாளர் செந்தில் ..பாஜக ராகவன் மோதல் .. கதாகாலாட்சேபம் என்பது தீய சொல்லா? வீடியோ


நீ சொல்றதெல்லாம் அம்புலி மாமா கதைன்னா கோபம் வரும்தானே?
காலம் காலமாக வெறும் அம்புலி மாமா கதைகளையே உண்மையாக நடந்த வரலாறுகள் புராணங்கள் கதாகாலட்சேபங்கள் என்று உள்ட்டா விட்டுகொண்டிருந்தார்கள்.
அதையெல்லாம் மக்கள் எல்லோரும் நம்புகிறார்கள் என்ற அவர்களின் நம்ம்பிக்கையை எல்லா பக்கங்களில் இருந்தும் பலர் இப்போது அசைத்து கொண்டிருக்கிறார்கள் இதை எண்ணி ஏற்கனவே கலங்கிபோயிருக்கும் அவாளுக்குக் நீங்க வாயை திறந்தாலே எல்லாம் அம்புலி மாமா கதைதான் என்று நேருக்கு நேர் கேட்க நேர்ந்தால் .. அது எவ்வளவு அதிர்ச்சி?
சும்மா கதை விடுறாங்க சார் என்று கூறுவது போல .. கதா காலட்சேபம் என்பது பச்சை பொய் உரையென்பது அவர்கள் அறிவார்கள் ..
இந்த உண்மை மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள் ஏனெனில் அதுதானே அவர்களின் மூலதனம். .. தோழர் செந்தில் அதை படாரென போட்டு உடைந்து விட்டாரே ... அதுவும் எவ்வளவு சாதரணமாக கூறிவிட்டார் ?
தங்களின் பேச்சுக்களை இவர்கள் நம்புவதில்லை .. அவற்றை வெறும் கட்டு கதைகள் என்றே கருதுகிறார்கள் என்பதை ராகவன் எதிர்பார்க்கவில்லை . ராகவன் வேண்டுமென்றே தொலைக்காட்சி விவாதம் நடத்திய திரு செந்திலை மிரட்ட வில்லை , தாளாத ஒரு கோபம் .அதை அடக்க முடியாமல் அடக்கி கொண்டு சீறுகிறார் ..

வெள்ளி, 27 டிசம்பர், 2019

CAA: உத்தரப்பிரதேசத்தில் 21 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் - தொடரும் போராட்டங்கள்


BBC : குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் அம்மாநில அரசு இணைய சேவையை முடக்கியுள்ளது. உத்தர பிரதேசத்தின் 21 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள்முழுவதும் இணைய சேவை முடக்கம் நீடிக்கும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
"மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள 21 மாவட்டங்கள் விரைவில் நிலைமை சீராகும்" என்று ஓ.பி. சிங் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்தன. எனினும், உத்தர பிரதேசத்தில்தான் ஒப்பீட்டளவில் அதிகளவிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகின.
எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் இதுவரை நடந்துள்ள போராட்டங்களின்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 - 16 உயிரிழந்து இருக்கலாம் என்று அம்மாநிலத்தின் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்? சின்மயி எச் ராஜா கோஷ்டி எதிர்ப்பு அரசியல்

Samayam Tamil :; கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்டம் அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை பார்த்தவர்கள் பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஒருவருக்கு மத்திய அமைச்சர் கையால் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதா என்று கூறி  சின்மயி போன்றவரக்ள்  எதிர்த்தார்கள்.
வேண்டாம் ராஜ்நாத் சிங் வைரமுத்து பாலியல் புகார்களில் சிக்கியவர், இந்து கடவுளை அவமதித்தவர். தயவு செய்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று எச் ராஜாவும் சின்மயியும்   ராஜ்நாத் சிங்கிற்கு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தனர்.
 இதனால்  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று ராஜ்நாத் சிங் தற்போது தெரிவித்துள்ளாராம்.
 பட்டமளிப்பு விழா ராஜ்நாத் சிங் வராவிட்டாலும் பட்டமளிப்பு விழா குறிப்பிட்ட தேதியில் வேறு சிறப்பு விருந்தினருடன் நடக்க உள்ளதாம். ஆனால் அந்த விழாவில் வைரமுத்துவுக்கு பட்டம் அளிக்கப்படுமா, இல்லையா என்பது தெரியவில்லை.

போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நோர்வே பயணி வெளியேற உத்தரவு...


நக்கீரன் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜமிலியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடியபின் போலீஸார் அவர்களை தாக்கினார்கள். இதனால் இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் வலுவானது. இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட தொடங்கினார்கள்.அந்த வகையில் சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் சிஏஏ-வுக்கு எதிராக போராடினார்கள். அப்போது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவரும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் கையில் வைத்திருந்த பதாகையில் ”அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இதன் பின் அவர் விசா நெறிமுறையை மீறி செயல்பட்டதற்காக மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். இதேபோல கேரளாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நார்வேவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியையும் அவருடைய சொந்த நாட்டிற்கு செல்லுமாறு ஃபாரீன் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேசன் அறிவித்துள்ளது

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!மின்னம்பலம் : முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.
ஊரகப் பகுதிகளுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணிக்குத் துவங்கியது. வாக்குப் பதிவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டு தொடர்பாக குழப்பங்கள் எழுந்தன. அந்த இடங்களில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நேரம் முடிந்தாலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. பிறகு அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் ஏற்பட்ட தகராறில் வாக்குப் பெட்டியை வெளியே எடுத்துவந்த சில நபர்கள், அதற்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இதனால் பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர், “பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” என்று கூறினார்.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது போக்சோ கோர்ட்மாலைமலர் : கோவை அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு, அவர்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோஷ்குமார் மீதான குற்றம் நிரூபணமானதால், அவர் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

BBC : 1000 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீக காலத்து மாளிகை கண்டுப்ப்டிப்பு


மெக்சிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான, மாயன் நாகரிகத்தை சேர்ந்த பழம்பெரும் மாளிகை ஒன்றின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். யுகாடன் மாகாணத்தில் உள்ள குலுபா என்ற பழமையான நகரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. மாளிகை என்று கருதப்படும் அக்கட்டடம் 20 அடி உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டிருந்தது மாயன் நாகரீகத்தை சேர்ந்த மாளிகை ஒன்றின் இடிபாடுகள் ஸ்பெயின் இப்பிராந்தியத்தை கைப்பற்றும் முன்புவரை அங்கு மாயன் நாகரிகமே இருந்து வந்தது.
அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?

பிபின் ராவத் கருத்து: பாகிஸ்தான் வழியில் இந்தியாவா?மின்னம்பலம் : ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத், “குடியுரிமை திருத்தச்சட்ட விவகாரத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். இதனைச் செய்பவர்கள் சரியான தலைவர்கள் அல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ராணுவத் தளபதி ஒருவர் அரசியல் கருத்து கூறுவது இதுதான் முதல் முறை என்ற நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள், பிபின் ராவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்து

கஜகஸ்தானில் 100 பயணிகளுடன்  சென்ற விமானம் விழுந்து விபத்து தினத்தந்தி :  கஜகஸ்தான் நாட்டில் 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
அல்மாத்தி, மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானில் உள்ள அல்மத்தி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 95 பயணிகள் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 100 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமான நிலையம் அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாததே கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை: – விரிவான தகவல்கள் ... வீடியோ


BBC : இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை பிபிசி தமிழுக்கு தெரிவித்தார நாட்டின் தேசிய கீதம் என்பது ஒன்று எனவும், அது இரண்டாக பிளவுபடுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் பாடினால், இரண்டு இனங்கள் என்ற பொருளை வெளிப்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் ஒரே இனம் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேசிய கீதத்தை இரண்டு தடவைகள் பாடுவதிலேயே நல்லிணக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறினார்.
இந்தியாவிலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதை அவர் இதன்போது நினைவூட்டினார். அரசியல்வாதிகள் கண்டனம் தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாட முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவிக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் இதனை பிபிபி தமிழுக்கு கூறினார்.

HERO உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”

வெந்து தணிந்தது காடு : “மார்க் ஷீட்,மற்ற நோட்டுப் புத்தகங்களைப் பார்த்திருக்கும் நீங்கள் என்றாவது உங்கள் குழந்தைகளின் ரஃப் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா ?”
ஹீரோ படம் பார்த்த அனைவரையும் யோசிக்க வைத்த வசனம் இது தான்!
எனக்கு இந்தப் படம் பிடித்ததற்கு இரு காரணங்கள் உண்டு..
முதலாவது மது அருந்துவது,புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்கிற அறிவிப்பு எங்கும் காண்பிக்கப் படாதது...
இரண்டாவது ,இன்றைய கல்வி முறை என்ற
ஒரு வித்தியாசமான கருவை யோசித்தது..

குடும்பத்துடன் குறிப்பாகக் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம்..
சூப்பர் ஹீரோ இலட்சியத்துடன் வளரும் குழந்தைகள் எப்படி சுயநலவாதிகளாக மாறுகிறார்கள்?
எப்படி வேலைக்குச் செல்பவர்கள் தினமும் வீடு திரும்பி மறுநாள் வேலைக்கு ஆயத்தமாகி இந்த வலைக்குள் மீள முடியாதபடி சிக்கிக் கொள்கிறார்கள் ...
சுயமாக சிந்திப்பவனே சூப்பர் ஹீரோ...

542 இடங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 347 தொகுதிகளில் மோசடி..

மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆனபிறகு..? இந்த குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்குமா..? என்றெல்லாம் உங்கள் மனம் வினவுகிறதா..? நெருப்பில்லாமல் புகையாதே..! பனிமூட்டம் கூட புகை போல் தான் தெரியும் என்று கலைஞர் வசனத்தையே காவிகள் துணைக்கு அழைக்கலாம்..! ஆனால் உண்மையின் மறுபக்கம் மிகவும் அருவருப்பானது மட்டுமல்ல, மக்களாட்சி அமைப்புக்கு ஆபத்தானதும் கூட..! இதை நாம் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்வோம்...!
2019 இன் பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டுதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது பாஜக என்பதை தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அறிந்த பிறகும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அது பற்றி பேசாமல் தவிர்ப்பது பாசிச பாஜகவின் தேர்தல் முறைகேட்டை அங்கீகரிப்பதாகவே பொருள்.
சுமார் 70 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்கள் ஒரே எண்ணிக்கையில் வாக்குப்பதிவை பெற்றுள்ளனர் . இவர்களுக்கு எதிராக தோல்வி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்களின் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையை காட்டுகின்றன. அதுமட்டுமின்றி பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே கணிசமான வேறுபாடு காணப்பட்டது. தேர்தல் முடிவுகள் அச்சு ஊடகங்களில் வெளிவந்த போது இந்த குறைகள் வெளிப்படையாக கவனிக்கப் பட்டது.
இது குறித்து Quint என்னும் பத்திரிகை தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியதுடன் புகார் மனுவையும் அனுப்பி இருந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட காவி ஆதரவு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ பக்கத்தில் வெளியிட்ட வாக்கு விபரங்களை முழுவதுமாக அழித்து விட்டனர். இதுவரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் கட்சிகள், வேட்பாளர்கள் பெற்ற வாக்குத் தரவுகள் இருக்க 2019 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மட்டும் வாக்கு விபரங்கள் இல்லாமல் காணப்படுகிறது.
திருடர்கள் களவாடும் தருணங்களில் தங்களை அறியாமல் சில ஆதாரங்களை விட்டுச் செல்வதைப் போன்று ஓட்டு இயந்திரத்தில் செய்யப்பட்ட பல தில்லுமுல்லுகள் மனித மூளைகளிடம் தற்போது சிக்கியதை தொடர்ந்து இந்த தரவுகளை அழிக்கும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி சிக்கியிருக்கிறார்கள். 'ஓரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தவறுதலாக நடந்திருக்கலாம் என அறிவித்ததோடு மற்ற தரவுகளை தேர்தல் ஆணையம் அழித்து விட்டது.

பாஜகவிடம் வசமாக சிக்கிய சசிகலா... ரகசியத்தை கூறிய கிருஷ்ணப்ரியா... அன்றே போட்டுடைத்த நக்கீரன்

nakkheeran

sasikalanakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் : பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா 1674 கோடியே 50 லட்சத்துக்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் என விவரமாக வருமானவரித்துறை தாக்கல் செய்த அறிக்கை சசிகலா குடும்பத்தில் மிகப் பெரிய மோதலை உருவாக்கியுள்ளது. அதன் எதிரொலியாக மன்னார்குடி குடும்பத்தின் வாரிசு ஒன்று பா.ஜ.க.வில் சேர்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது என்கிறது மன்னார்குடி வட்டாரம்.
சசிகலாவின் பெயர், கணவர் நடராஜன் பெயருடன் இல்லை. அவரது தந்தை விவேகானந்தன் தாயார் கிருஷ்ணவேணி ஆகிய பெயர்களுடன் இணைந்து வி.கே.சசிகலா என்றுதான் சிறைச்சாலை பதிவுகளில் காணப்படுகிறது. தனது தாயின் பெயரை சேர்த்து ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சார ஷாக் அடித்து இறந்த ஜெயராமனின் மகளுக்கு சசிகலா சொல்லி ஜெ. வைத்த பெயர்தான் கிருஷ்ணப்ரியா.

வியாழன், 26 டிசம்பர், 2019

அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் என்ஆர்சி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு

pramila-jayapalhindutamil.in :சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க எம்.பி.க்கள் உடனான தனது சந்திப்பை ரத்து செய்தார். அமெரிக்க எம்.பி.க்கள் குழுவில்ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்தியவம்சாவளி எம்.பி. பிரமிளா ஜெயபால், பிறகு சேர்க்கப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் (54) அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய – அமெரிக்க பெண் ஆவார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அமெரிக்க எம்.பி.க்கள் சிலரில் பிரமிளாவும் ஒருவர்.
இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் பிரமிளாஜெயபால் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:

மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்... சூரிய கிரகணமாம்

 மூடநம்பிக்கையில் குழந்தைகளைப் புதைத்த பெற்றோர்கள்!மின்னம்பலம் : சூரிய கிரகணத்தின் போது, 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனர். மூட நம்பிக்கையால் இவ்வாறு செய்ததற்கு சமூக ஆர்வலர் உட்படப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்நிகழ்வு ஏற்படுகிறது. இன்று காலை 8 மணி தொடங்கி 11.20 வரை தோன்றியது. இதனை பொது மக்கள் சூரிய கண்ணாடி அணிந்து ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். ஒரு சில இடங்களில் மேகமூட்டம் இருந்ததால் அதைக் காண வந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இச்சமயத்தில் சில நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. 8 மணிக்கு முன்பாக சாப்பிட வேண்டும். வெளியில் பயணம் செய்யக் கூடாது. இந்த இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனப் பல தகவல்களைப் பரப்பினர்.

CAA / NPR / NRC தொடரும் ஆபத்துகள்… சவுக்கு .ஆன்லைன்

savukkuonline.com: by Jeevanand Rajendran · 26/12/2019
நாடு முழுவதும் தேசியக்குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (CAB) எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.   பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் மதத்தால் (முஸ்லீம் அல்லாத) ஒடுக்கப்பட்டவர்களுக்கு  குடியுரிமை கொடுப்பதே அந்த சட்டதிருத்தம்.   உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தருணங்களில் தேசிய மக்கள் பதிவேட்டிற்கு (NRC) முதல் படி தான் CAB என்று கூறியிருக்கிறார் .   அதன் படி NRC வரும்பட்சத்தில் முறையான ஆவணங்கள் கொடுக்க முடியாத முஸ்லீம் அல்லாதவர்கள் CAB சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறவும், முஸ்லீம்கள் நாடற்றவர்களாக மாறுவதும் சாத்தியம் என்பதால் தான் இத்தனை போராட்டமும்.
போராட்டங்கள் கைவிடப்படாத நிலையில் மோடி அவர்கள் டிசம்பர் 22இல் ஆற்றிய உரையில் NRC என்ற வார்த்தையை கூட இதுவரை பிரயோகப்படுத்தியது இல்லை எனவும் இந்தியாவில் எந்த மூலையிலும் அகதி முகாம்கள் இல்லை எனவும் ஒரு பச்சை பொய்யை கூறினார்.

பாகிஸ்தானுக்கு போ.. இல்லாட்டி சுடுகாட்டுக்கு போ.. மிரட்டிய போலீஸ்..லக்னோ வயோதிபருக்கு நேர்ந்த கொடுமை


Hemavandhana - tamil.oneindia.com : .. என் மனைவி, பேத்திகளை ஒரு ரூமில் தள்ளி பூட்டிட்டு போய்ட்டாங்க.. நகை, பணத்தை எடுத்துட்டு போய்ட்டாங்க" என்று இஸ்லாமியர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடந்து வருகிறது.. இதற்கான போராட்டங்களும் வலுத்து வருகின்றன. அப்படித்தான் போன வெள்ளிக்கிழமை உத்திரபிரதேசம் முசாபர் நகரில் போராட்டம் நடந்தது.. அந்த நகரில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் திரண்டு வந்து கலந்து கொண்டனர்.. எல்லோரும் சேர்ந்து ஊர்வலமாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போராட்டம் இந்த ஊர்வலத்தில் ஒருவர்தான் ஹாஜி ஹமித் ஹசன்.. இவருக்கு 73 வயதாகிறது.. பெரியவர் என்று நினைத்துவிட வேண்டாம்.. இந்த போராட்ட ஊர்வலத்தை முன்னின்று நடத்தியதே இவர்தான்.. அதுவும் எந்த வன்முறையும் இந்த ஊர்வலத்தில் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிக்கும் முக்கிய பொறுப்பை இவர்தான் அன்று கவனித்தார். ஊர்வலத்தை மிக அழகாக முன்னெடுத்து சென்றார்.
ஊர்வலமும் முடிந்து 2 நாள் ஆன நிலையில், போலீசார் ஹமித் வீட்டுக்கு வந்துவிட்டனர்.. வீட்டை சுற்றி முற்றுகையிட்டு விட்டனர். இதை பற்றி ஹமித் சொல்கிறார்: "நான் வயதில் மூத்தவன் என்பதால், அந்த ஊர்வலத்தில் வன்முறை எதுவும் நடக்காமல் தடுத்து, கண்காணித்தபடியே வந்தேன்.. என் பையனும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டான்.. இதை தவிர வேற எந்த தப்புமே நாங்கள் செய்யவில்லை.. ஆனாலும் போலீசார் என் வீட்டை சுற்றிவிட்டனர்.

ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் அபாயம்... காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் எச்சரிக்கை


Bipin_Rawat_-EPSதினமணி : வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைப் பண்பு கிடையாது என்ற ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ராணுவத் தலைமை தளபதி விபின் ராவத்,
"மக்களைத் தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. நிறைய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை நாம் பார்க்கிறோம். நமது நகரங்களில் அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை வன்முறையை கையில் எடுக்கும் வகையில் வழிநடத்துகின்றனர். இது தலைமைப் பண்பு கிடையாது" என்றார்.

ஜார்க்கன்ட் புதிய அரசு பதவி ஏற்பு ....ஸ்டாலினுக்கு JMM அழைப்பு ...அகில இந்திய கட்சியாகும் திமுக?

வெப்துனியா : சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில்  காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனை அடுத்து வரும் 29ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவுக்கு முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ஏற்கனவே சமீபத்தில் சிவசேனா தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிர மாநிலத்தில் பதவியேற்ற போதும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதும் அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அகில இந்திய அளவில் முக ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிராவில் 30 ஆயிரம் பெண்கள்:கருப்பைகளை நீக்கிய அதிர்ச்சி ... வேலைக்காக வீடியோ


வெப்துனியா : மகாராஷ்டிராவில் மாதவிடாய் பிரச்சனையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் நிதின் ராவத் என்பவர் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதமொன்றில் ’மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மாதவிடாய் சுழற்சி காலங்களில் பணிக்கு செல்ல முடியாமல் இருப்பதால் 30 ஆயிரம் பெண்கள் கருப்பையை நீக்கி இருப்பதாகவும் குறிப்பாக மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டங்களில் பணிபுரியும் பெண்கள் தான் கருப்பையை நீக்கியவர்களில் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 மாதவிடாய் காலங்களில் விடுமுறை எடுத்தால் தங்களுக்கு சம்பளம் இழக்க நேரிடும் என்பதால் சம்பள இழப்பை தவிர்ப்பதற்காக 30 ஆயிரம் பெண்கள் தங்களுடைய கருப்பையை நீக்கியுள்ளதாகவும், இதுகுறித்து உடனடியாக முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண்களின் வாழ்வாதாரம் குறித்து சரியான திட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்