செவ்வாய், 4 அக்டோபர், 2016

நடிகை அதிதி தற்கொலை முயற்சி.. இயக்குனர் செல்வகண்ணன் பாலியல் தொல்லை Director's Sexual Harassment! Suicide attempted Heroine's Exclusive Interview

சினிமாவில் அவ்வபோது பல சர்ச்சைகள் எழும். அந்த வகையில் சமீபத்தில் நெடுநெல்வாடை இயக்குனர் செல்வக்கண்ணன் தனக்கு பாலியல் தொந்தரவு தருவதாக அப்படத்தின் ஹீரோயின் அதிதி கூறியிருந்தார். இதுக்குறித்து செல்வக்கண்ணன், அதிதி தான் பட்டதாரி படத்தின் ஹீரோவுடன் தொடர்பில் இருக்கிறார், அதனால், என் படத்தின் படப்பிடிப்பிற்கு வர மறுக்கின்றார் என கூறினார். தற்போது அதிதி தற்கொலை முயற்சி செய்து படுத்த படுக்கையாக மருத்துவமனையில் உள்ளார், அவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருப்பதாக கூறப்படுகின்றது.

காஞ்சிபுரத்தில் சங்கரராமன் மகள் போட்டி.. காஞ்சி ஜெயேந்திரர் சங்கரராமன் கொலைவழக்கில்.....

மின்னம்பலம்,காம் : காஞ்சிபுரத்தில் கொல்லப்பட்ட சங்கரராமனின் மகள் மைத்ரேயி அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் போட்டியிடுகிறார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளராக பணியாற்றி வந்தவர் சங்கரராமன். இவர் 2004-ம் ஆண்டு கூலிப்படைகளால் கொல்லப்பட்டார் இந்தக் கொலை வழக்கில் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் சந்தேக நபராக சேர்க்கப்பட்டார் பிரள் சாட்சிகளால் குற்றம் நிரூபணமாகமல் போக அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலையானார். சங்கரராமன் குடும்பத்து நீதி கிடைக்காமல் போனதாக அவரது குடும்பத்தினர் வருத்த்தம் தெரிவித்த நிலையில் , சங்கரராமனின் குடும்பம் அதிமுக கட்சியில் இணைந்தனர். இந்நிலையில், இப்போது நடைபெறும் உள்ளாட்சி உள்ளாட்சி தேர்தலில் சங்கரராமனின் மகள் மைத்ரேயி, காஞ்சிபுரம் நகராட்சியின் 40-வது வார்டில் அதிமுக சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பிரதமர் மோடியின் உருவபொம்மை எரிப்பு .. தி.நகர் பாஜக தலைமை செயலகம் முற்றுகை !

மின்னம்பலம்.காம்  :காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக, மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு பதில் மனு தாக்கல்செய்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு ஏற்கனவே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இரண்டு நீதிபதிகள்கொண்ட அமர்வில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட இயலாது. மேலும் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டபிறகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும்.

டெல்லி:அதிமுக எம்பிக்களின் அதிர்ச்சி!..

minnambalam,com காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அதிமுக-வின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிமுக எம்.பி. தம்பிதுரை தலைமையில் நாடாளுமன்றம் முதல் பிரதமர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் பிரதமரைச் சந்திக்க முயன்றபோதிலும் அவர்களை பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், தாங்கள் எடுத்துச் சென்ற மனு ஒன்றை பிரதமர் அலுவலகச் செயலரிடம் கொடுத்திருக்கிறார்கள் அதிமுக உறுப்பினர்கள். அந்த மனுவில், “இந்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தால் ஆனது. இந்த அமைப்பில் மத்தியில் ஆளும் அரசு அனைத்து மாநிலங்களுக்கும் நடுநிலையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

Dr.ரிச்சர்ட் அப்படிச் சொன்னாரா? - பரபரக்கும் அப்பல்லோ!

minnambalam,com :.
"போயஸ் கார்டனைத் தவிர அம்மா வெளியில் தங்கிய நாட்கள் மிகக் குறைவு. விருப்பத்துடன் போகும் இடம் கொடநாடு. எப்போதாவது போவது சிறுதாவூர். எதிர்பார்க்காமல் போனது பரப்பன அக்ரஹாரா. இப்போது நினைவேயில்லாமல் போயிருப்பது அப்பல்லோ என்று சொல்கிறார்கள் அப்பல்லோவில் காத்திருக்கும் அதிமுக பிரபலங்கள்.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே மீடியா ஆட்கள் அப்பல்லோ வாசலைவிட்டு நகரவே இல்லை. ஷிஃப்ட் கணக்கில் ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். கேமரா மட்டும் அப்படியே நகராமல் இருக்கிறது. மீடியா ஆட்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கச்சொல்லி செய்தி மக்கள் தொடர்புத்துறையில் இருந்து அப்பல்லோ நிர்வாகத்துக்கு உத்தரவு போயிருக்கிறது.

BBC.COM :தமிழக உள்ளாட்சித் தேர்தல் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் இம்மாதம் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தல்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது< சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப் படம்) >தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 25- ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்த நாளே வேட்புமனுத் தாக்கலும் துவங்கியது.
இந்நிலையில், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் இடங்கள் குறித்து முறையாக அறிவிப்பு வெளியிடப்படவில்லையென திமுகவின் சார்பில் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி கிருபாகரன், இந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகள் ரத்து செய்யப்படுவதாகவும், டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

அப்போலோ ... என்னன்னவோ செய்திகள் .... எதை நம்புவதோ தெரியல

டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே லண்டன் திரும்பினர் .. முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ...

Jayalalithaa's health: Dr Richard John Beale return to london
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து நாடு திரும்பினார் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே.
உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 -ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் பீலே கடந்த 30 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தார்.

சசிகலா புஷ்பா: ஓரிரு நாட்களில் முதல்வரின் உடல்நிலை குறிந்து .. நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு ...


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஓரிரு நாட்களில் வெளிப்படையாக கூறாவிட்டால் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறினார். முதல்வர் குறித்த புகைப்படத்தையோ, வாட்ஸ்-அப்பில் ஒரு அரை நிமிடம் பேசும்படியான வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி எதுவும் செய்யவில்லை என்றும் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா எம்பி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.  tamiloneindia.com

பாலியல் வன்கொடுமை : ஒரு தந்தையின் ஆதங்கம்!

விகடன்,காம்  :நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், பாலிவுட் கதாசிரியரும் படத்தயாரிப்பாளருமான ஃபரான் அக்தர், தனது மகள்களுக்கு ஒரு ஓபன் லெட்டர் எழுதியுள்ளார். இவருக்கு பதினாறு வயதிலும் ஒன்பது வயதிலும் இரு பெண் குழந்தைகள். மூத்த மகள் பதினாறு வயதை எட்டிய நிலையில், ஃபரான் அக்தர் கொட்டியுள்ள ஆதங்கம் அந்த கடிதம் வாயிலாக வெளிப்படுகிறது.
''ஒரு தந்தையாக  நானோ அல்லது எனது இடத்திலும் வேறு எந்த தந்தையாக இருந்தாலும் பாலியல் வன்புணர்வு போன்ற விஷயங்களை மகள்களிடம் விவாதிக்க விரும்பமாட்டார்கள். ஆனால், இப்போது நமது சமூகம் போய்க் கொண்டிருக்கும் சூழலில் இது குறித்த விவாதம் தேவையானதாகவே எனக்குத் தெரிகிறது. எனது அருமை மகளே...எனது தோழிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த சம்பவம் நடக்கும் போது,  உனக்கு வயது பன்னிரென்டுதான் ஆகியிருந்தது. இப்போது நீ 16 வயதினை எட்டி விட்டாய். அதனால், உன்னிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முடிவு?

ரயில்வே நிலத்தை மேம்படுத்த தனியாருக்கு வாய்ப்பு: தமிழகத்தில் முதல் முயற்சி தாம்பரம் ரயில் நிலையம் முதல், சானடோரியம் வரை உள்ள, ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம், வர்த்தக ரீதியான மேம்பாட்டுக்காக, தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மும்பையை போன்று, தமிழகத்திலும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாடு முழுவதும், ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள், பயன்பாடின்றி, காலியாக உள்ளதால், வருவாய் இழப்பு ஏற்படுவதாக, தணிக்கை துறை சுட்டிக்காட்டி வருகிறது. இதையடுத்து, எதிர்கால தேவை என்ற பெயரில், நகரங்களின் பெரிய ரயில் நிலையங்களுக்கு அருகே, பயன்பாடின்றி உள்ள நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில், ஏற்கனவே, ரயில்வே துறை காலி நிலங்கள், நிபந்தனை அடிப்படையில், தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளன.

சசிகலா புஷ்பாவிடம் போலீஸ் 3 நேரம் விசாரணை .. குழந்தைகளுக்கு ஈட்டி எல்லாம் குத்துராங்க அதை கேக்க துப்பில்லை ...

தூத்துக்குடி, வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள்
அளித்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா திங்கள்கிழமை ஆஜராகினார். அப்போது, அவரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் எஸ்.சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் அண்மையில் அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, சசிகலா புஷ்பா வீட்டில் பணிப் பெண்களாக வேலை பார்த்த திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி கிராமத்தைச் சேர்ந்த பானுமதி மற்றும் ஜான்சிராணிஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தனர்.

காவிரி .. கர்நாடகா .. மத்தியரசு.. தேசியகட்சிகள் .. கொந்தளிக்கும் முகநூல் பதிவுகள்

என்னாடா ..கேப்மாரித்தனம் ..இது ?
தமிழன் ..தமிழ்நாடுன்னா ..என்னதாண்டா.. நினைக்கறீங்க?
கூட்டாட்சிக்கு ...குண்டு வைக்கிறது ..கர்நாடகம் ..
திரிக்கு ...கொள்ளி வைக்கிறது...மத்திய அரசு..
உச்சநீதிமன்றத்தை...
முதலில் ..கர்நாடக.. மாநில காங்கிரஸ் அரசு ..அவமதித்தது!
அடுத்து ...கர்நாடக.. மத்திய மந்திரிகள் ..அவமதித்தார்கள்!
இப்போது ..மத்திய.. பீ.ஜெ.பீ.. அரசு.. அவமதித்திருக்கிறது!
தவிர ..தமிழக எம்.பீ.க்களின்..தயவால் மட்டுமே பிரதமரான
தேவகவுடா ..அவமதிப்புக்கு ..தலைமை தாங்குகிறார்!
நேற்றுவரை ...இந்த பிரச்சனையில் ..உச்சநீதிமன்றத்தின்
நிலைதான் எங்கள் நிலை என்று சொன்ன ...பீ.ஜெ.பீ..ஆட்சி
இன்றைக்கு..எங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு
அதிகாரமில்லை...என்று சொல்வது..கடைந்தெடுத்த..???????
அப்போது..உச்சநீதிமன்றம்..சொல்லித்தானே..அரசிதழில்..
வெளியிட்டீர்கள்? அன்றைய அறிவு இன்று எங்கே போனது?

சத்தியம் திரையரங்கில் தர்மதுரை ,ரெக்கை, ஆண்டவன் கட்டளை... விஜய் சேதுபதியின் மூன்று படங்களும் .... சாதனை .

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம்
வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவருடைய படங்களுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியானது. இந்நிலையில், வருகிற 7-ந் தேதி அவர் நடித்த ‘றெக்க’ படமும் வெளியாகவிருக்கிறது.

குழந்தைகளுக்கு அலகு, வேல், ஈட்டி கூத்தும் அதிமுக அடிமைங்க.. சிறுவர் நல வாரியம் தூங்குகிறது.. ஐ நா சிறுவர் உரிமை ஆணையம் தலையிட ....

thetimestamil.com
இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா? ரொம்ப அவசியம்னா யாராவது மன்னார்குடி வீட்டு குழந்தைகளுக்கு குத்தவேண்டியதுதானே ?”
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான நடைபெற்ற பிரார்த்தனைகள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, நேத்தாஜி நகரில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் கோயிலில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள், அலகு குத்தி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, தண்டையார்பேட்டையில் உள்ள சேனியம்மன் ஆலயத்தை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் வழிபாடு நடைபெற்றது.இதில் கழக நிர்வாகிகளும் மற்றும் தொண்டர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

சவுதி அரேபியா ஆங்கில காலண்டரை பின்பற்ற முடிவு

புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகாக சவுதி அரேபியா அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது
புதிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகாக சவுதி அரேபியா அரசு பணியாளரகளுக்கு இனி இஸ்லாமிய நாள்காட்டிக்கு பதிலாக ஆங்கில காலண்டரை பின்பற்றி சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது. ஆங்கில நாள்காட்டியின்படி, பிப்ரவரி நீங்கலாக இதர 11 மாதங்களும், 30 அல்லது 31 நாட்களை கொண்டுள்ளன. ஆனால், 12 மாதங்களை கொண்ட இஸ்லாமிய நாள்காட்டியின்படி, முதல்பிறை தென்பட்ட நாள் பிறகு வரும் ஒவ்வொரு மாதத்திலும் 29 அல்லது 30 நாட்களே உள்ளன. எனவே, அதிகமான வேலை நாட்களை கொண்ட ஆங்கில நாள்காட்டியின்படி அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தீர்மானித்துள்ள சவுதி அரேபியா இந்த புதியநடைமுறையை நேற்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  dinamalar.com

சென்னை மாநகராட்சி தேர்தல் 184 வார்டுகளில் தி.மு.க., போட்டி

சென்னை மாநகராட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு, 14 வார்டுகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு வார்டும், 'சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' கட்சிக்கு, ஒரு வார்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில், மொத்தம், 200 வார்டுகள் உள்ளன. இவற்றில், 11 வார்டுகளை, ஏற்கனவே கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு, தி.மு.க., ஒதுக்கியிருந்தது. இந்நிலையில், 77, 96, 79 என, மேலும் மூன்று வார்டுகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளன. அத்துடன், 61வது வார்டு, மனிதநேய மக்கள் கட்சிக்கும்; 55வது வார்டு, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய, 16 வார்டுகள் போக, மீதமுள்ள, 184 வார்டுகளில், தி.மு.க., போட்டியிடுகிறது.தினமலர்.காம்

கர்நாடக சட்டசபை தீர்மானம் : 27 டி எம் சி குடிநீருக்கும் எஞ்சியது கர்நாடக பாசன தேவைக்கும்தான் .. தமிழகத்துக்கு கிடையாது!

Karnataka decides to release Cauvery water to agricultureபெங்களூர்: கர்நாடகாவில் காவிரி தண்ணீரை சேகரித்து வைத்துள்ள நான்கு அணைகளில் மொத்தம் 27 டிஎம்சி தண்ணீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தவும், பிற தண்ணீரை பாசன தேவைக்கு திறந்துவிடவும் கர்நாடக சட்டசபை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காவிரிக்காக, கடந்த செப்டம்பர் 23ம் தேதி கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, கே.ஆர்.எஸ், ஹேமாவதி, ஹாரங்கி மற்றும் கபினி ஆகிய நான்கு அணைகளிலும் இருப்பு உள்ள, 27.6 டிஎம்சி தண்ணீரை பெங்களூர் நகரம் உள்பட காவிரி பாசன பகுதியிலுள்ள கிராமம் மற்றும் நகரங்களுக்கு குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதையே காரணமாக வைத்துக்கொண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவுகளை மதிக்காமல், தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீரையும் கர்நாடகா இதுவரை திறந்து விடவில்லை.

திங்கள், 3 அக்டோபர், 2016

கோட்சேக்கு சிலை எடுக்கும் ஹிந்து தீவிர வாதிகள்.... காந்தி பிறந்த நாள் வெட்க கேடான துக்க நாளாம்

காந்தியை கொன்றது ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர் எஸ் எஸ் தான் என்பதை அவர்கள் வாயால் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கின்றார்... காந்தி பிறந்த நாள் ஒரு வெட்கக்கேடான...துக்க நாளாம்.. கோட்ஸேக்கு சிலைவைத்து கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். பாருங்கள்.... ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் தான் இன்றய மோடி கூட்டம்.. தடைசெய்யப்படவேண்டிய கட்சி நாட்டை ஆள்கிறது ..
தீவிரவாதிகள் தலைவர்களாக வலம் வருகிறார்கள்.
The Hindu
Just now ·
The Hindutva outfit established a bust of Godse in its office in Meerut and observed Gandhiji's birth anniversary as “dhikkar diwas (day of shame and disgust)”.
Do not discriminate between Savarkar, Godse: Hindu Mahasabha
On the day father of the nation Mahatma Gandhi was born, the Akhil Bharatiya Hindu Mahasabha on Sunday hailed his killer Nathuram Godse.
thehindu.com|By Mohammad அலி
சவர்க்கரும் கோட்சேயும் வேறுவேறு அல்ல: மீண்டும் இந்து மகாசபை சர்ச்சைக் கருத்து..# தமிழ் இந்து நாளிதழ்
முகநூல் பதிவு Damodaran Chennai

துணை முதல்வர் கோரிக்கை! ஜெயலலிதா உடல் நிலை.. சட்டம் ஒழுங்கு .. காவிரி விவகாரம் ...

கடந்த 22ஆம் தேதி உடல்நலம் குன்றி மருத்துவமனையில்   
அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 12 நாட்கள் ஆகிவிட்டநிலையில், தமிழக அரசு நிர்வாகம் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டநிலையில் சட்டமன்றத்தை கூட்டச் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். இந்நிலையில், சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியோ நீதிமன்றம் சென்றுள்ளார். அவர், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் முதல்வரின் உடல்நிலை பற்றிய உண்மை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் எனவும், முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்யவேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல அம்சங்களை அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள இந்த மனுமீதான விசாரணை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. தலைமைச்செயலகத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள் .... இப்போது மருத்துவமனையையே தலைமைச்செயலகமாக மாறிவிட்டது ...  தத்துவம் :உன் நோக்கம் எதுவோ அதுவே உன்னை நோக்கி வரும்... சிம்பிளாக சொன்னா செஞ்ச வினை? 

லண்டன் டாக்டர் மல்டிபிள் ஆர்கன் பெயிலியர் சிகிச்சையில் நிபுணத்துவம் உள்ளவர். .முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும்

லண்டன் டாக்டர் ரிசேர்ட் பேல் அவர்கள்   நுரையீரலில் சீழ்பிடிப்பு மற்றும் நுரையீரலில் ஏற்படும் காயங்கள் , மல்டிபிள் ஆர்கன் பெயிலியர் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளுறுப்புகள் செயலிழப்பது போன்ற பிரச்னைகளில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் எல்லாவிதமான தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளித்து உடல்நலம் முன்னேற்றம் அடையாதநிலையில் லண்டனில் இருந்து மருத்துவர் ரிச்சர்ட் பேல் வரவழைக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்றுதான் ரிச்சர்ட் பேல் தலைமையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடந்து வருவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யார் இந்த மருத்துவர் ரிச்சர்ட் பேல். இவரின் பின்னணி என்ன? எந்த மருத்துவத்தில் இவர் பிரபலம். எண்பதுகளில் எம்.ஜி.ஆர்-க்கு இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் டாக்டர் காணுவின் அறிவுரையின்பேரில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள புரூக்ளின் டவுன்ஸ்டேட் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து நலமுடன் திரும்பி வந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டர்கள் அமெரிக்காவில் சிகிச்சை அளித்த ஜப்பானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் காணுவின் படத்தை பூஜையறையில் வைத்து வணங்கினார்கள்'' தலைவர் உயிரைக் காப்பாற்றியவர்ப்பா'' என, வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு பெருமை பொங்க டாக்டர் காணுவின் படத்தைக் காட்டியது வரலாறு.

6 ஐ எஸ் தீவிரவாதிகள் கேரளாவில் கைது .. இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்

கோவை: தென்மாநிலங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுருந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தமிழகத்தில் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 21 பேர் அண்மையில் ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்களைக் கண்டறியும் பணியில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, இவர்களை கைது செய்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஈர்ப்பில் இவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை இவர்கள் சேகரித்ததாகவும், தென்இந்தியாவில் மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் பிரபலங்களை குறிவைத்து தாக்க இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்தது.

ராம்குமார் ராம்குமார்னு கத்தினோம்; கடைசி வரைக்கும் திரும்பிப் பார்க்கலை”: திலீபன் மகேந்திரன் உருக்கம்

thetimestamil.com ; மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது
செய்யப்பட்ட ராம்குமார், சந்தேகத்துக்குரிய வகையில் புழல் சிறையில் மரணமடைந்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு நடந்த உடல்கூராய்வுக்குப் பிறகு அவருடைய உடல், சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ராம்குமார், சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதிலிருந்து அவர் இந்த வழக்கில் காவல்துறையால் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என சொல்லிவருபவர் திலீபன் மகேந்திரன். இந்த வழக்குத் தொடர்பாக பல்வேறு விவரங்களைத் திரட்டி ராம்குமாரின் வழக்கறிஞருக்கு இவர் அளித்தார்.  ராம்குமார் மரணமடைந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட திலீபன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இங்கே:
“தோழர் ராம்குமார்.
இது வரைக்கும் நா கையிலெடுத்த எந்த விஷயத்துல தோத்தது இல்ல.. இந்த ராம்குமார் விஷயத்திலேயும் அப்படிதான் வெற்றிக்கு ரொம்ப பக்கம் போனோம்.. 90 நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால ராம்குமார ஜாமின்ல வெளிய விட்டுதான் ஆகனும் வேறவழி இல்ல.. அதுக்குள்ள கொன்னுட்டாங்க..

வினாடிக்கு 10,000 கன அடி நீர்.. காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட கர்நாடக திடீர் முடிவு!

பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு கூடுதலாக 5 டி.எம்.சி தண்ணீர் வந்துள்ளதால் நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் திறக்க கர்நாடகா அரசு திடீரென முடிவு செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் கர்நாடகா அதை அமல்படுத்தவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் கர்நாடகா அரசு எதிர்த்தது. மத்திய அரசும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வியுரிமையைப் பறித்து… குலத் தொழிலைத் திணித்து…

child-labour-1மோடி அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் சட்டமும் புதிய கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் குறிவைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகும்.பேனாவைப் பிடிக்க வேண்டிய கரங்கள் தீக்குச்சிகளை அடுக்கும் சமூக அவலம்
இனி இந்தியாவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலம் என்பது அச்சமூட்டக்கூடிய கொடுங்கனவாய் ஆகிவிடும் நிலையைத் தோற்றுவித்திருக்கிறது மோடி அரசு. அவரது அரசு விவாதத்திற்கு விட்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையானது ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக் கனவைக் காவு வாங்கும் விதத்தில் உள்ளதென்றால், குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்கள் ஏழைக் குழந்தைகளைச் சட்டபூர்வ கொத்தடிமைகளாக வைத்து, அவர்களது உழைப்பையும் இளமையையும் உறிஞ்சிக் கொள்ளும் உரிமையை முதலாளிகளுக்கு வழங்கியிருக்கிறது.