செவ்வாய், 3 ஜூலை, 2012

பெண்கள் மீது வீசப்படுவதால் ஆசிட் விற்பனை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? உச்சநீதிமன்றம்


புதுடெல்லி, ஜூலை 3-ஆசிட் விற்பனையை கட் டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த மைனர் பெண் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரது முகம், கைகள் சிதைந்தது. காதலிக்க மறுத்ததால் இளை ஞர்கள் 3 பேர் சேர்ந்து ஆசிட் வீசினர். அவருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், ஆசிட் வீசிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை உச்ச நீதிமன்றம் விசா ரித்து வருகிறது. இதை விசாரித்த நீதிபதிகள், பெண்கள் மீது வீசப் படுவதால் ஆசிட் விற் பனையை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங் களுக்கு கடந்த பிப்ர வரியில் உத்தரவிட் டனர். ஆசிட் விற்ப னையை கட்டுப் படுத் துவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒருங்கி ணைந்து செயல் பட மத் திய அரசுக்கு ஏப்ரலில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.ஆர். தவே ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிட் விற் பனையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுக ளுக்கு நீதிபதிகள் உத் தரவிட்டனர்.

Sex விசுவாசிகள் வின்சென்ட் செல்வக்குமார், சாது சுந்தர் செல்வராஜ் மோகன் சி லாசரஸ்

மோகன்-சி-லாசரஸ் உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.
வின்சென்ட்-செல்வகுமார் கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் இந்த கார்ப்பரேட் பாஸ்டர்கள் மேடை போட வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?
 ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”
“ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன்???? கப்சாக்கள் மொத்த வியாபாரம் செய்யப்படும்

ஜெயா டிவி கொச்சடையானை க்கு வாங்கியது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தொலைக்காட்சி உரிமை ஆளுங்கட்சிக்கு சொந்தமான ஜெயா டிவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பாளர்களான ஈராஸ் மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ரஜினி, தீபிகா, சரத்குமார் உள்பட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள 3டி படமான கோச்சடையான் உரிமையை வாங்க பெரிய தொலைக்காட்சிகள் அனைத்தும் ஆர்வம் காட்டின.
ஆனால் இந்த உரிமையை இம்முறை வாங்கியிருப்பது... ஜெயா தொலைக்காட்சி.
தமிழ் சினிமா மட்டுமல்ல.. இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் தராத அளவுக்கு பெரும் விலையை இந்தப் படத்துக்கு தந்துள்ளது ஜெயா தொலைக்காட்சி.
இந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு ஜீ, சோனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றன.
12.12.12-ல் படம் ரிலீஸ்

Angel TV வின்சென்ட் செல்வக்குமார் பாலியல் முறைகேடுசிறுமிகளையும் விடுவதில்லை

 Famous Christian Pastor Trouble
ராமநாதபுரம்: பெரும் பிரபலமான ஒரு கிறிஸ்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்.
அவரது பெயர் வின்சென்ட்செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்றுகூறப்படுகிறது. இவருக்கு எதிராகத்தான் தற்போது கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.

DMK Mp Mla க்கள் சிறையில் அடைபட்டால் ஜனாதிபதி தேர்தலில் எப்படி ஓட்டுப் போடுவார்கள்?

 Fill Jail Or Stay To Vote Pranab Dmk Leaders Political திமுக  அறிவித்துள்ள சிறை நிரப்பும் போராட்டம் திமுகவினர் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக அரசு வேண்டும் என்றே திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்து உள்ளேயே வைத்து விட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலின்போது திமுக எப்படிப் பங்கேற்க முடியும்?
என்பதுதான் அதில் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.
திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக திமுகவினர் தயாராகி வருகின்றனர். அதேபோல காவல்துறையினரும் ஆயத்தமாகி வருகின்றனர். இதுதொடர்பாக டிஜிபி தலைமையில் உயர் காவல்துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனையை நடத்தி முடித்துள்ளனர். இதனால் பல திமுகவினர் போராட்டத்தில் பங்கேற்க அஞ்சுவதாகவும் கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா அரசை நம்ப முடியாது. பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்து வேண்டும் என்றே நீண்ட நாட்களுக்கு உள்ளேயே வைத்து விட்டால் நமது நிலை என்ன ஆவது, குடும்பத்தின் நிலை என்ன ஆவது என்பது பல திமுகவினரின் சந்தேகமாகும்.

அ.தி.மு.க அமைச்சர்கள்: குனிந்து பார்த்தால்தான் கஷ்டம் புரியும்



கார்டனில் காத்திருக்கிறது பஞ்சாயத்து! குதித்த அமைச்சர்கள் கொதிக்கிறார்கள்!!

 அம்மாவின் கார் தெரிந்ததும் உடல் குலுங்க ஓடும் ஓட்டம் உள்ளதே.. அதற்கு இழப்பீடு கிடையாதா?

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதாவுக்காக மற்றொரு பஞ்சாயத்து காத்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில். இந்த விவகாரத்தில், குறைந்தது 6 மாவட்டங்களில் மா.செ.க்கள் அல்லது அமைச்சர்கள் வசமாக சிக்கிக் கொள்ளும் விதத்தில் தகவல்கள் உள்ளன என்கிறார்கள். இதில் தொடர்புடைய தொகை மட்டும் ரூ10 கோடிக்கு குறையாது என்று அடித்துச் சொல்கிறார்கள்.
மாவட்டங்கள் தோறும் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்பும் நடைமுறையில் விளையாடிய பணம் இது.

பிரணாப் முகர்ஜி வேட்பு மனு ஏற்கப்பட்டது!

 Office Profit Allegation Pranab Reply Today
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்வதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது பிரணாப் முகர்ஜி, ஆதாயம் தரும் பதவியில் இருந்தார் என்பது அவரை எதிர்த்துப் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் பி.ஏ.சங்மாவின் ஆட்சேபனை. இதையடுத்து பிரணாப் முகர்ஜியிடம் தேர்தல் அதிகாரியான அக்னிகோத்ரி விளக்கம் கோரியிருந்தார்.

நித்தியானந்தா எப்படியெல்லாம் பாலியல் சித்திரவதைகளை செய்தார்

 Arthi Rao Reveals The Shooting Secret Of Nithyanantha

ஏர் பியூரிபயருக்குள்' கேமரா வைத்து நித்தியானந்தா- ரஞ்சிதாவை கையும் களவுமாக பிடித்தேன்-ஆர்த்தி ராவ்

சென்னை: நித்தியானந்தாவின் அறையில் அவரது அனுமதியுடன் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட, ரகசிய கேமரா பொருத்தப்பட்ட ஏர் பியூரிபயரை பொருத்தி, அதன் மூலம் நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட அந்தரங்க காட்சிகளை பதிவு செய்தேன் என்று அவரது முன்னாள் சீடரான ஆர்த்தி ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் போலீஸில் நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ராவ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நித்தியானந்தாவின்செக்ஸ் லீலைகள் தொடர்பாகவும், அவர் தன்னிடம் எப்படியெல்லாம் பாலியல் சித்திரவதைகளை செய்தார் என்பதையும் கூறியிருந்ததை நேற்று பார்த்தோம். இன்று நித்தியானந்தா, ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சிகளை தான் எப்படி படமாக்கினேன் என்று ஆர்த்தி கூறியதை பார்க்கலாம்:

வி.ஐ.பி.க்களுக்கான கறுப்புப் பூனைப் படை வாபஸ்

என்.எஸ்.ஜி. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படை (கறுப்புப் பூனைப் படை) தனது 900 கமாண்டோக்களை வி.ஐ.பி.க்களுக்கான பாதுகாப்புப் பணியில் இருந்து வாபஸ் பெறத் தீர்மானித்துள்ளது. 
அதற்குப் பதிலாக, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளது.கறுப்புப் பூனைப் படை 1984-ல் உருவாக்கப்பட்டது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இது அமைப்பட்ட போதிலும், உயிருக்கு ஆபத்து நிறைந்த வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்கே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. இப்படையின் வீரர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 900 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்

திருப்பதியில் இன்று மின்சார வாரியத்தின் சார்பில் மழை வேண்டி வருண யாகம் தொடங்கப்பட்டது. யாகத்தில் தங்க மூர்த்திகளையும், கலசத்தையும் வேத பண்டிதர்கள் வேதம் ஓத ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வந்தனர்.
சிர்ராஊர் ஸ்ரீராமசர்மா தலைமையில் அர்ச்சகர் குழு கலச பூஜை, லிங்கார்ச்சனையுடன் யாகத்தை தொடங்கினார்கள்.
இதுகுறித்து தென்மண்டல மின்வாரியத்துறை சேர்மன் வித்யாசாகர் ரெட்டி, "மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வேத பண்டிதர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, வருணயாகம் செய்ய முடிவு செய்தோம்'' என்று தெரிவித்தார்.
ம்ம்ம் இனி என்ன அப்படியே நம்ம நாடு வல்லரசாக வேண்டி சீக்கிரமா மகா யாகத்துக்கும் ஒரு டோக்கன் எடுத்துடுங்க ... விளங்கிடும்  

கர்நாடகத்தின் துர்-நாடகத்தில் அம்பலமாகி வரும் BJP ஊழல்

துணிந்து முடிவெடுக்க முடியாமல் தலைமை இருக்குமானால் அந்தக் கட்சி படும் அவஸ்தை எத்தகையது என்பதற்கு உதாரணம் பாரதிய ஜனதாக் கட்சி. 
கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்சித் தலைமையின் பிடிவாதத்தால், மக்களின் வெறுப்புக்கும், ஏளனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது பாஜக.  சில அமைச்சர்களையும் சில எம்எல்ஏ-க்களையும் தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு தான் நினைத்தபடியெல்லாம் கட்சித் தலைமையைத் தலையாட்டி பொம்மையாக ஆட்டுவிக்க முடியும் என்பதைக் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.  

சிறைநிரப்பும் போராட்டத்தில் தயாநிதி உதயநிதி போட்டாபோட்டி

 தி.மு.க.-வில் ஒரு வேகத்தோடு சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து விட்டார்கள். ஆனால், நிரப்பும் நாள் நெருங்க, நெருங்க, வேகம் குறைந்து விவேகம் தலைதூக்குகிறது. சிறை நிரப்ப தொண்டர்கள் வருவார்கள், ஆனால் தலைவர்கள் வரணுமே!
தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒரு செட் முன்னாள் அமைச்சர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்கனவே லீவு லெட்டர் கொடுத்து விட்டார்கள் என்கிறார்கள். “இப்பதானே தலைவரே ‘உள்ளே’ இருந்துவிட்டு வந்திருக்கேன். கொஞ்ச நாளைக்கு வெளியே இருந்து உடம்பை பாலிஷ் போட்டுவிட்டு, அடுத்த போராட்டத்துக்கு டாண் என்று வந்திடறேன்”
லீவு லெட்டர்கள் வரிசையாக வந்து சேரவே, கருணாநிதி அப்செட்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவிடம், “ஜெயிலுக்கு போகலாம் வர்ரிங்களா?” என்று கேட்கும் தைரியம் கருணாநிதி உட்பட யாருக்கும் கிடையாது! வீரபாண்டியாரை கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவர் (குண்டராக) உள்ளேதான் உள்ளார்.

உள்ளாட்சி துறையில் தலை விரித்தாடும் லஞ்சம்

உள்ளாட்சி துறையில், அதிகாரிகள் பணி மாற்றம் முதல், சிறு சிறு வேலைகளுக்கும், அதிகாரிகளிடம் இருந்தே கட்டாயமாக லஞ்சம் வாங்கப்படுவதால், அதிகாரிகள் மத்தியில், பெரும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.பணம் பெற்று வேலைகளை செய்வதால், அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நடக்கும் முறைகேடுகளை, தட்டிக் கேட்க முடியாமல், மூத்த அதிகாரிகள் திணறி வருகின்றனர்.பணிகளுக்கான லஞ்சத் தொகையும் அதிகரித்து உள்ளதால், "இந்த ஆட்சியை விட, கடந்த ஆட்சியில் லஞ்சம் குறைவாகத் தான் இருந்தது' என, ஒப்பந்ததாரர்கள் குமுறத் துவங்கி உள்ளனர்.
அதிகாரிகள் குமுறல்:மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில், சென்னை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கமிஷனர்களாக உள்ளனர்.கடந்த ஆட்சியின் போது, மாநகராட்சிகளில், ஐ.ஏ.ஏஸ்., அதிகாரிகளை நியமிக்காததால், பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது, தி.மு.க., பின்பற்றிய அதே நடைமுறையை, அ.தி.மு.க.,வும் கடைபிடித்து வருகிறது.
தற்போது, பல்வேறு விஷயங்களுக்கு, அதிகாரிகள் கொடுக்க வேண்டிய லஞ்சம் மற்றும் மாதந்தோறும் கட்ட வேண்டிய, "கப்பம்' என, லஞ்ச நிலவரம் கட்டுக்கடங்காமல் உள்ளதாக, துறை அதிகாரிகள் குமுறுகின்றனர்.

திங்கள், 2 ஜூலை, 2012

நித்தியானந்தா Night Clubக்கு ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டு

ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்

சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை

சென்னை ராயபுரம் சிங்காரத் தோட்டம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கீதா (32). பெண் போலீஸ் ஏட்டு. சென்னை கமிஷனர் ஆபீஸ் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சங்கீதா பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் வேலு (39). இவர் தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 இவர்களுக்கு ரஞ்சனா (5), ரச்சனா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
பெண் போலீஸ் ஏட்டு சங்கீதா நேற்று வேலைக்கு போய்விட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கும் கணவர் வேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கீதா உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

IAS IPS தேர்வு: கேள்வித் தாள் தமிழ் இடம் பெற பிரதமருக்கு கலைஞர் கடிதம்

 அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கேரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான தேர்வு மத்திய தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது.
இதற்கான கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் மட்டும் இடம் பெறுகின்றன. இதனால் இந்தி பேசுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
எனவே தமிழக மாணவர்களும் பயன் பெறும் வகையில் கேள்வித்தாளில் தமிழ் இடம் பெற ஆவன செய்ய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தஷ்ணாமூர்த்தியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகிகளை

விருத்தாசலம்-விடிஐ-கொலைவிருத்தாசலம்: தஷ்ணாமூர்த்தியைக் கொன்ற தனியார் பள்ளி!வினவு< ‘உள்ளுரில் இருந்து கொண்டே என்னை ஜெயிலில் தள்ளிட்டீங்க இல்ல” என்று தனது உறவினர் நண்பரிடம் பேசிய பேச்சுதான் தூக்கில் தொங்கிய தஷ்ணாமூர்த்தியின் கடைசி குரல்









‘‘உள்ளுரில் இருந்து கொண்டே என்னை ஜெயிலில் தள்ளிட்டீங்க இல்ல” என்று தனது உறவினர் நண்பரிடம் பேசிய பேச்சுதான் தூக்கில் தொங்கிய தஷ்ணாமூர்த்தியின் கடைசி குரல் . . .
விருத்தாசலம் ஊரின் எல்லையில் ஆளரவம் இல்லாத பொட்டல் காட்டில் விருத்தகீரிஸ்வரர் எஜுகேஷனல் டிரஸ்ட் சுருக்கமாக வி.இ.டி என்ற பெயரில் தனியார் மேல்நிலைப்பள்ளி நடத்தப்படுகிறது.

சந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி!

சுஷ்மா சுவராஜுடன் ரெட்டி சகோதரர்கள்
லஞ்சம் பெற்றுக் கொண்டு பிணை வழங்கிய விவகாரத்தில் ஹைதராபாத் சி.பி.ஐ நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி பட்டாபிராம ராவ் கையும் களவுமாகப் பிடிபட்டு பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். கருநாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.கவின் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சட்டவிரோதமான முறையில் இரும்புத் தாதுக்களை தோண்டியெடுத்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜனார்த்தன ரெட்டியுடன் அவரது கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான ராஜகோபால் மற்றும் சிரீலட்சுமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சன்ச்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க நீதிபதியை இடைத்தரகர்கள் மூலம் அணுகிய ரெட்டி சகோதரர்கள், பத்து கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பேசிமுடித்து முன் பணமாக மூன்று கோடி ரூபாய்களை நீதிபதிக்கு வழங்கியிருக்கிறார்கள்.

கடவுள்' இருக்கிறார்!?!? !Higgs Boson நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது

god particle world awaits higgs boson announcement -ஏ.கே.கான்
அணுவுக்கு நிறையைத் தரக்கூடியதாகக் கருதப்படும் கண்ணுக்குத் தட்டுப்படாத ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) எனப்படும் நுண் துகள் உண்மையிலேயே இருக்கிறது என்பது ஊர்ஜிதமாகியுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள விஞ்ஞானிகள் வரும் புதன்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்புக்காக உலகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
ஹிக்ஸ் போஸான் என்பது எல்லா அணுக்களுக்குள்ளும் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள். ஆனால், அதை யாரும் பார்த்தும் இல்லை, அது இருப்பதாக நிரூபித்ததும் இல்லை.ஆனால், இந்த துணைத் துகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால் இந்த பிரபஞ்சம் உருவானது தொடர்பாக சொல்லப்படும் தியரிகள் முழுமை பெறுவதும் இல்லை. கிட்டத்தட்ட பிளாக் ஹோல், டார்க் மேட்டர் மாதிரி இது தியரியிலேயே இருக்கிறது.
இப்படி கண்ணுக்குப் புலப்படாத இந்த அதிசயத்தைத் தான் விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். இந்தத் துகள் இருப்பதாக முதலில் சொன்னவரான ஒருவரான (பீட்டர்) ஹிக்ஸ்சின் பெயரையே அதற்கு வைத்துவிட்டார்கள்.

சேது சமுத்திர திட்டம்' மாற்று பாதையில் சாத்தியமில்லை: உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்



 Alternative Route Ram Sethu Not Economical Sc
டெல்லி: ஆதாம் பாலம் (ராமர் பாலம்) வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்செளரி தலைமையிலான குழு அறிக்கை சமர்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராமர் பாலம் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகளும் சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு மாற்றுப் பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

கொலை வழக்கு: டாக்டர் ராமதாசுக்கு சிக்கல், ‘மற்றவருக்கு’ சிக்கலோ சிக்கல்!!

Viruvirupu

அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் டாக்டர் ராமதாஸ், தாம் சொந்தமாக சிக்கிக் கொண்டது போதாதென்று, மற்றொரு நபரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். காரணம், இந்த கொலை வழக்கில் அரசியல்வாதிகள் சிக்கலுக்கு உள்ளாகும் அதே அளவுக்கு, காவல்துறையினரும் சிக்கலில் மாட்டுவார்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இந்த வழக்கில், ஏற்கனவே மூன்று போலீஸ் அதிகாரிகள் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. கொலை நடைபெற்ற காலப் பகுதியில், பதவியில் இருந்த காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் சமீபத்தில் சி.பி.ஐ.-யால் விசாரிக்கப்பட்டார். அவர் தமக்கு ‘மேலே இருந்தவரை’ நோக்கி கை காட்டி விட்டதாக தகவல் உள்ளது. காக்கிச் சட்டையிடம் இருந்து நம்மையும் காப்பாற்றணும்… நம்மோட சேர்ந்து காக்கிச் சட்டையையும் காப்பாற்றணும்!

மர்ம சந்நியாசி – 7 யார் சொல்வது பொய் என்று நீதிபதி கண்டுபிடித்தாக வேண்டும்.

மேஜோ குமாருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், ஏனைய மருத்துவர்களின் சாட்சியத்தை வைத்தும் மேஜோ குமாருக்கு என்ன நடந்தது என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
‘மேஜோ குமார் முதலில் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்குத் தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவம் நடந்த அன்று காலை மேஜோ குமார் வாந்தி எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக நீர்ச் சத்து வெளியேறியதால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரத்தப் போக்கு ஏற்பட்டதால் உடல் தடுமாற்றம் ஏற்பட்டு, மேஜோ குமார் சுயநினைவை இழந்திருக்கிறார்.’
மேஜோ குமாருக்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டது?
ஒருவர் வயிற்றில் நச்சுப் பொருள் உட்புகுந்தால் வயிற்றுக் கடுப்பு ஏற்படும்.

பிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்- மனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியின் மனுவை ஏற்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு பரிசீலனை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக, பிஜூ ஜனதாதளம் மற்றும் பாஜக ஆதரவு வேட்பாளரான சங்மா திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
அதாவது மத்திய அரசின் இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு (Indian Statistical Institute) தலைவராக இன்னமும் பிரணாப் முகர்ஜிதான் பதவி வகித்து வருகிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் விதிமுறைகளின்படிப் பார்த்தால் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு செல்லாது என்று ஒரு போடு போட்டார். இதைக் கேட்ட தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் ஒரு கணம் ஷாக்கிப் போனார். வேறுவழியின்றி பிரணாப்பிடம் விளக்கம் கேட்கிறோம் என்று கூறி வேட்பு மனு பரிசீலனையை நாளைக்கு ஒத்திவைத்துவிட்டனர்.
சுப்பிரமணியசாமி அதிரடி
இதனிடையே டிவிட்டரில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, "பிரணாப் முகர்ஜியின் வேட்புமனு நிராகரிக்கப்படும்? வேட்புமனு பரிசீலனை திடீரென நாளைக்கு ஒத்திவைப்பு...ரகசியமாக பல்வேறு அரசுப் பொறுப்புகளை வகித்து வருகிறார்" என்று தட்டிவிட்டிருக்கிறார்.

அண்ணா நூலகத்தில் திருமணம் நடத்த உயர் நீதிமன்றம் தடை

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் கடந்த திமுக ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து வழக்கறிஞர்கள் வீரமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தடை விதித்தனர். மேலும் நூலகம் செயல்படுவதற்கு தேவையான வசதிகளை குறைக்ககூடாது என்றும் உத்தரவிட்டனர்.

ஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்

t;மதுரை டி.வி.எஸ்., நகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையின் மொபைல் போனுக்கு, சில நாட்களாக ஆபாச எஸ்.எம்.எஸ்., வந்ததோடு, பேசியவரின் பேச்சும் ஆபாசமாக இருந்தது.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆசிரியை, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூரிடம் புகார் செய்தார். 
சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், எஸ்.ஐ., சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மொபைல் போன் எண்ணை ஆய்வு செய்ததில், அந்த நபர் பல பெண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், பேசியதும் தெரியவந்தது. இதற்காக, 10க்கும் மேற்பட்ட "சிம்' கார்டுகளை பயன்படுத்தியுள்ளார். மொபைல் போன் டவர் உதவியுடன், மதுரை தெற்குவாசல் சின்னக்கடைத் தெருவைச் சேர்ந்த கிஷோரை,18, (பெயர் மாற்றம்) கைது செய்தனர். அவரிடம் இருந்து இரு மொபைல் போன்கள், ஒன்பது "சிம்' கார்டுகள், இரண்டு "மெமரி' கார்டுகளை பறிமுதல் செய்தனர். பிளஸ் 2வில், 1100 மதிப்பெண் பெற்ற கிஷோர், பொறியியல் படிப்பில் சேருவதற்காகக் கவுன்சிலிங்கில் பங்கேற்க இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிளஸ் 2 வரை கருக்கு அந்த ஆசிரியை வகுப்பு எடுத்துள்ளார். அப்போதே, பெண்களுக்கு "ஜாலி'யாக ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புவதை கிஷோர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.