புதன், 6 ஜூன், 2012

அடடா ஆண்கள் பெண்கள் ஆடிப்பாடி, மதுரை ஆதீனம்

- இளையமகன்
மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவாலலாயருள்
பெண்ணகத்து எழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!  - -
- திருஞானசம்பந்தர்
கற்பழிக்க அருள்வேண்டிய திருஞானசம்பந்தரால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதாக கூறப்படும் மதுரை ஆதீன மடத்தில்தான் சர்ச்சை சுழல்கிறது. ஏன் இந்த சர்ச்சை? சிடி புகழ் நித்தியானந்தா  மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக  நியமிக்கப்பட்டிருக்கிறார். நியிமித்தது  292வது நடப்பு மதுரை  ஆதீனம்.  இந்த அறிவிப்பையடுத்து நித்தியானந்தா 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். திருவாளர் 292 வது ஆதினமோ பதிலுக்கு தங்கச் செங்கோல் வழங்கி, நித்திக்கு தங்க கிரீடத்தையும் சூட்டினார்.  அதற்கு பிறகு பேட்டியளித்த மதுரை  ஆதீனம் அருணகிரி, திருஞான சம்பந்தரால் 1500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட மதுரை  ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாக(!) கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்  தோன்றி, நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு என்று சொன்னார். அதன்பிறகு பெங்களூரு ஆசிரமத்திற்கு வந்து பழகிப்பார்த்தேன்; அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்தபடி ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து  ஆடினேன். அடடா ஆதீனமே  ஆடுதே என ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

செவ்வாய், 5 ஜூன், 2012

Four women killed for dancing at Pakistani wedding

pakistani Dacnceஆண்களுடன் நடனமா 4 பெண்கள் படுகொலை

Four women killed for dancing at Pakistani wedding


Islamabad : Four women, who were sentenced to death by clerics in Pakistan’s Khyber Pakhtunkhwa provice for singing and dancing at a wedding, have been killed, a media report said. A minister, however, denied this.
Four women and two men had been sentenced to death in Kohistan for singing and dancing at a wedding.
Muhamamd Afzal, brother of one of the convicted men, said that four women have been done to death, Geo News reported.
Clerics ordered their killing following a mobile phone video that showed the six singing and dancing at a remote village in the mountainous district of Kohistan.
There were, however, conflicting reports about the killings.
While Interior Minister Rehman Malik Sunday ordered a judicial inquiry into the incident, Khyber Pakhtunkhwa Minister for Social Welfare Sattar Ayaz told Geo News that the women were not killed.
Malik said a judicial commission would probe the incident.
Tahir Rehman, an official, said that he has no information about the killing of the four women.

பாகிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின் போது 2 ஆண்களுடன் நடனமாடி பாட்டு பாடிய 4 இளம் பெண்களை பழங்குடியின கவுன்சிலை சேர்ந்தவர்கள் படுகொலை செய்துள்ளனர்.பாகிஸ்தான் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ளது கோகிஸ்தான் மாவட்டம். இங்கு நேற்று ஒரு திருமணம் நடந்தது. அப்போது 4 இளம்பெண்கள் ஆண்களுடன் சேர்ந்த நடனமாடி பாட்டுப்பாடி உற்சாக இருந்துள்ளனர். இந்த தகவல் அறிந்து, பழங்குடியின கவுன்சில் (ஜிர்கா) உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனடியாக திருமணம் நடந்த இடத்துக்கு சென்று நடனமாடிய பெண்களையும் ஆண்களையும் அடித்து உதைத்தனர். பின்னர் 4 பெண்களையும் படுகொலை செய்தனர்.

தஸ்லிமா கண்டனம் சன்னி லியோனை தலையில் வைத்து ஆடுவதா?



ஆபாச நடிகை சன்னி லியோனை தலையில் வைத்து கொண்டாடுவதா என்று எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Taslima Nasreen Slams Porn Star Sunny Leone வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடிப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்னி லியோன். பிக் பாஸ் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டதன் மூலம் அவர் இந்தியாவில் பிரபலமானார். இதையடுத்து பூஜா பட் தனது படமான ஜிஸ்ம் 2ல் சன்னி லியோனை நடிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவர் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
ஆபாச நடிகையான அவர் தற்போது பெரிய நட்சத்திரம் அளவுக்கு கொண்டாடப்படுகிறார். இது எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

ரவுடி ரத்தோர் இரண்டு நாளில் 29.80 கோடி

அக்ஷ்ய் குமார் நடிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ரவுடி ரத்தோர் படம் இரண்டு நாளில் ரூ.29.80 கோடி வசூலாகியுள்ளது. தமிழில் சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா, சந்தானம் நடிப்பில் வெளியாகி சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சிறுத்தை. அத்தோடு வசூலையும் வாரி குவித்த படம் இது. இப்படம் இப்போது இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. கார்த்தி வேடத்தில் அக்ஷ்ய் குமாரும், தமன்னா வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவும் நடித்து இருந்தனர். பிரபுதேவா இப்படத்தை இயக்கி இருந்தார். ரூ.45 கோடி செலவில் உருவான இப்படம் இந்தியா முழுக்க 2500 தியேட்டர்களில் வெளியானது.

வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் வழக்கு

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஹெராயின் போதைப் பொருளை வைத்திருந்ததாக போலீசார் கடந்த 2001-ம் ஆண்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிலும், அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஹெராயின் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர். இந்த வழக்குகள் சென்னை போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன. 
ஜெயலலிதா நம்பிக்கை அடிப்படையில் கொடுத்து வைத்திருந்த பெருமளவு கருப்பு பணத்தை சுதாகரன் ஏப்பம் விட்டதாக ஒரு தியரி உண்டு.

5 வயது சிறுமி நரபலி..இந்து – முஸ்லிம் – கூட்டணியில்

கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி
நரபலி
அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

உண்மையை உரக்கச் சொல்லும் தொலைக்காட்சிகள்!

பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிய தொலைக்காட்சிகளையும், அரசியல் பின்னணி உள்ள தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளி தன் தனித்திறமையினால் ஒரு ஆண்டுகளுக்குள்ளாகவே முன்னணிக்கு வந்து விட்டது புதிய தலைமுறை தொலைக்காட்சி. இதற்கான காரணம் அந்த தொலைக்காட்சி வழங்கும் செய்தியின் தன்மையும், நிகழ்ச்சிகளில் காட்டும் வித்தியாசமும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள் அது பற்றிய ஒரு சின்ன ரவுண்ட் அப்.
தமிழ்நாட்டில் 1992 வரை தூர்தர்சன் எனப்படும் அரசு தொலைக்காட்சி மட்டுமே இருந்தது. அவர்களின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கே வரிசை கட்டி நிற்பார்கள் ஜனங்கள். கேபிள் டிவியின் வரவினாலும் 1993ல் சன் டிவி தொடங்கப்பட்ட பின்னரும் மக்களின் ரசனையே மாறியது.

சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு பெரும் வெற்றி- முதல் முறையாக உச்ச மதிப்பெண் எடுத்து சாதனை

 Samacheer Kalvi Scheme Scores Maiden Sslc Exams
சென்னை: கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பல புதிய சாதனைகளை நிகழ்த்த காரணமாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து வந்த மாநில போர்டு, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட நான்கு பாடத் திட்ட முறைகளையும் நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தைத் தரும் வகையில் கொண்டு வரப்பட்டதே சமச்சீர் கல்வித் திட்டம்.
இதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக தனியார் பள்ளிகள் முரண்டு பிடித்தன. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தையே தூக்கி குப்பையில் போட்டனர். ஆனால சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அரசின் முடிவை ரத்து செய்து சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டன.

Ragging போலீஸ் அதிகாரிகளுக்கு தனி அலைபேசி

சென்னை : "ராகிங், ஈவ்-டீசிங்' குறித்த தகவல்களை மாணவர்கள் நேரடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வசதியாக, போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு தனியான அலைபேசி எண்கள் வழங்கப்பட்டு உள்ளதாக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
"ராகிங்' பிரச்னை : இதுகுறித்து, தமிழக சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஜார்ஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் உள்ள பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்லூரிகளில், 2012 - 13ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை துவங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, கேலி செய்தல் (ராகிங்) மற்றும் பெண்களைக் கேலி செய்தல் (ஈவ்-டீசிங்) ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து, தமிழ்நாடு போலீசார் முன்னுரிமை அளித்து வருகின்றனர்.

Andhra மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்

ஆந்திராவில் காளான்கள் போல பெருகி விட்ட பொறியியல் கல்லூரிகளால், மாணவர்கள் மத்தியில் மவுசு குறைந்து விட்டது. இதனால், பல கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையின்றி, மூடப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில், தலைநகர் ஐதராபாத் மற்றும் இதர சில நகரங்களில் மட்டுமே, பொறியியல் மற்றும் தொழில்கல்வி கல்லூரிகள் இருந்தன. இதனால், ஏராளமான மாணவர்கள் பொறியியல், மருத்துவம், பார்மசி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், இளங்கலை பட்டப்படிப்புகளை படிக்க, இங்கு அதிக அளவில் வந்தனர்.ஆனால், அதன்பின் நிலைமை மாறி விட்டது.

திங்கள், 4 ஜூன், 2012

அரசு முதலாளிகளுக்கு Gift 7 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய்

சாயிநாத்தின் பொருளாதாரப் பொங்கல் - 1

ஏழைப் பங்காளன் இதழாளர் சாயிநாத்துடைய பேனாவுக்கு அவ்வளவு சக்தி. அவர் சாட்டையைச் சொடுக்கினால் மாண்டேக் சிங் அலுவாலியாகூட அலறுவார்.
இடதுசாரிக் கதையாடலை முன்னெடுத்துச் செல்வதில் சாயிநாத்தின் கட்டுரைகளுக்கு முக்கிய இடமுண்டு. வினவு உடனே அந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துப் போடுவதிலிருந்தே இதனை நீங்கள் உணரலாம். அதேபோல தொலைக்காட்சியில் உரையாடும் இடதுசாரிகள், சாயிநாத் கட்டுரையின் சாரத்தை மேற்கோள் காட்டும்போது நீங்கள் அந்த வாதத்தை எதிர்கொள்ளத் திணறுவீர்கள். சாயிநாத்தே சொல்லிவிட்டார், அதுவும் தி ஹிந்துவிலேயே வந்துவிட்டது. பிறகென்ன?
சாயிநாத்தின் சமீபத்தில் தி ஹிந்துவில் எழுதிய ஒரு கட்டுரையில், இந்திய அரசு முதலாளிகளுக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் அள்ளிக் கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். இந்திய பட்ஜெட்டில் “ரெவின்யூ ஃபோர்கான்” (வேண்டாமென்று விடப்பட்ட வருமானம்) என்று கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரத்தைத்தான் அவர் எடுத்துக் கொடுத்துள்ளார். எனவே சாயிநாத்தைக் குற்றம் சொல்ல முடியாது. இந்த எண்ணை முன்வைத்து சாயிநாத்தின் வாதம் இப்படியாக உள்ளது.
என்னவோ தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாயைக் கொடுப்பதற்குப் போய் மூக்கால் அழுகிறீர்களே, உங்களுக்குத் தெரியுமா பெரும் பணமுதலைகள் எவ்வளவு பெறுகிறார்கள் என்று? 25 லட்சம் கோடி ரூபாய். இப்போது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளப்போகிறீர்கள்?
இதைப் படிக்கும் பலரும் நடுங்கிப் போய்விடுவார்கள். உண்மையா? முதலாளிகள் இப்படி அள்ளி எடுத்துக்கொண்டு போகிறார்களா? அடப்பாவிகளா! நாசமாப் போக! ஏழைகள் வயிற்றில் அடித்துவிட்டு, இப்படி அநியாயம் பண்ணுகிறீர்களே...

ரன்வீர் சேனா வெறிநாய்கள் தலைவன் கொல்லப்பட்டான்!

 வினவு
பிரம்மேஷ்வர் சிங்
இந்த ஆண்டின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளில் இது முக்கியமானது. ஆதிக்க சாதி வெறியர்களின் குண்டர் படையான ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.  அந்த அடையாளம் தெரியாத தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

Bhawal சமஸ்தானத்து ராஜகுமாரன் திரைப்படத்தை விட மர்மம் நிறைந்த இளவரசனின் உண்மை கதை


மர்ம சந்நியாசி – 


ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று டார்ஜிலிங்கிலிருந்து பாவல் சமஸ்தானத்துக்கு தந்தி அனுப்பப்பட்டது. குடும்பத்துடன் கோடை விடுமுறையை கழிக்கச் சென்ற பாவல் ஜமீனின் இரண்டாவது ராஜகுமாரன். ராஜ்குமார் ராமேந்திர நாராயண ராய் என்பது முழுப்பெயர்.  மேஜோ குமார் என்றும் அழைக்கப்படுவார். பாவல் ஜமீன் டார்ஜிலிங்கிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஜமீனைச் சேர்ந்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என்று யாரும் இன்னும் வந்து சேரவில்லை. இன்னும் அவர்களுக்குத் தந்தியே கிடைக்கவில்லை. இருப்பினும் இறந்த இராஜ்குமாரை அவசரமாக அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
1909ம் ஆண்டு, மே மாதம் 8ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் அவர் இறந்துபோனார். அக்கம் பக்கத்தில் யாராவது பிராமணர்கள் இருக்கிறார்களா என்று விசாரித்து வர, மேஜோ குமாரின் சிப்பந்திகள் அனுப்பப்பட்டனர். இறந்தவர் பிராமணர் என்பதால், பிராமண முறையில் சடங்குகள் செய்யவேண்டும். ஆனால் யாரும் கிடைக்கவில்லை. அதனால் என்ன, பிணம் அடக்கம் செய்யப்பட்டாகவேண்டும். இரவு 9 மணி. உடல் பாடையில் ஏற்றப்பட்டது. அடக்கம் செய்ய செல்லவிருந்த கும்பலில் சுமார் 20 பேர் இருந்தனர். பங்களாவின் ஒரு அறையில் மேஜோ குமாரின் மனைவி பிபாவதி தேவி ஆற்றமுடியாமல் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு 19 வயதுதான் ஆகியிருந்தது.

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி கைது!

அனுமதியில்லாமல் குவாரி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் மாவட்ட திமுக செயலாளருமான ஐ.பெரியசாமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, போலீசார் அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி வந்தனர். இந்த வழக்கில் முரளிதரன் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்திருந்தனர். ஆனால் ஐ.பெரியசாமி மீது எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இருப்பினும் அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (04.06.2012) காலை திண்டுக்கல் டிஎஸ்பி ஆபிசில் சரண் அடைந்தார். கூம்பூர் போலீஸ் ஸ்டேசனுக்கு விசாரணைக்கு அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டார். பின்னர் நிலக்கோட்டை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் கைது!

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சென்னை டி.நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்< சேலம் அங்கம்மாள் காலணி நில வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சேலத்துக்கு அழைத்துச் சென்றனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அங்கம்மாள் காலணியில் 30 ஆண்டுகளாக குடியிருந்த வந்த 27 குடும்பங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயப்படுத்தி, ரவுடிகளின் துணையோடு அவர்களை வெளியேற்றிவிட்டதாகவும் தங்களுக்கு மேற்படி இடத்தில் குடியிருக்க பாதுகாப்பு வழக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களின் முறையீட்டின்படி மேற்படி நிலத்தில் அவர்கள் வீடுகட்டி குடியிருந்துகொள்ள பாதுகாப்பு வழக்கும்படி சேலம் நகர போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி கடந்த மாதம் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அவரவர்கள் வசித்த இடங்கிலேயே குடிசை அமைத்துக்கொண்டனர். நேற்று அதிகாலை 1.30 மணிக்கு அந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்று விட்டனர். இதில் 9 குடிசைகள் தீயில் எரிந்துவிட்டன.

பிச்சைக்காரன் சரத்குமார் விஜயகாந்தை பிச்சைக்காரன் என்னும் வினோதம் பாருமையா

Viruvirupu புதுக்கோட்டையில் அ.தி.மு.க.-வினரே திகைக்கும் அளவுக்கு தே.மு.தி.க.-வையும், அதன் தலைவர் விஜயகாந்த்தையும் போட்டுப் புரட்டியெடுக்கத் துவங்கியுள்ளார் நடிகர்-கம்-அரசியல்வாதி, சரத்குமார்.
பயம் கொள்ளாதீர்கள், அவரது சினிமாவில் வருவதுபோல கைகளால் புரட்டியெடுக்கவில்லை. எல்லாமே வார்த்தைகளால்தான்.
“தே.மு.தி.க. எம்.எல்ஏ.-க்கள் ஜெயித்ததே, பிச்சை எடுத்துத்தான் என்றிருக்கிறார் சரத். அவரது கூற்றுப்படி, தே.மு.தி.க.-வுக்கு எம்.எல்.ஏ. பிச்சை போட்டது, பிச்சை போட்டது, அ.தி.மு.க.!
(இந்த இரு தரப்பும் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிச்சை எடுக்காத குறையாகத்தான் மக்களிடம் கையேந்தி ஓட்டுக் கேட்டார்கள். அந்த வகையில் இரு தரப்புக்கும் பிச்சை போட்டது வாக்காளர்கள்தான் என்பதை யாரும் நினைப்பதில்லை)

வீரபாண்டியார் மர்ம கடிதம்: சில ‘சி’ செலவில் செட்டில்மென்ட் ரெடி!

Viruvirupu,
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மர்ம கடிதம் ஒன்று வந்தது என்பது, வார இறுதியில் தி.மு.க. சர்க்கிள்களில் ஹாட் டாபிக்காக இருந்தாலும், அது வதந்தியா, நிஜமா என்ற குழப்பம் பலருக்கும் இருந்தது. இன்னமும் இருக்கிறது. எமக்கு கிடைத்த தகவலின்படி கடிதம் வந்தது நிஜம். கடிதம், வீரபாண்டியார் முகாமை கொஞ்சம் மிரள வைத்திருப்பது அதைவிட நிஜம்.
முன்கதைச் சுருக்கம் என்னவென்றால், வீரபாண்டி ஆறுமுகத்தை விமர்சித்து ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. கடிதத்தை மேலோட்டமாக பார்த்தால், தி.மு.க.-வுக்கு உள்ளேயுள்ள யாரோ ஒரு நபர், சேலம் தி.மு.க.-வின் தற்போதைய நிலை கண்டு கொந்தளித்த மனநிலையில் எழுதியதுபோல உள்ளது.

ஜெயலலிதா எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கு முயற்சியில்

Viruvirupu
முதல்வர் ஜெயலலிதா இன்று டில்லிக்கு செல்வதற்கு, மத்திய திட்டக்குழு கூட்டத்தில் தமிழகத்துக்கு அதிக நிதி கோருவதற்காக என்பதுதான் பிரதான காரணம். ஆனால், அவர் செல்லும் தினத்தில் டில்லியில் மற்றொரு விஷயமும் நடக்கலாம். காங்கிரஸ் செயற்குழு இன்று கூடி, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடந்தால் ஜெயலலிதாவின் டில்லி விஜயம், தலைநகர் மீடியாக்களில் மிகப் பெரிய அளவில் கவரேஜ் பெறும்.
ஏற்கனவே, காங்கிரஸ் தரப்புக்கு எதிர் வேட்பாளரை நோக்கி கையைக் காட்டியுள்ள ஜெயலலிதா, காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கு முயற்சியில் உள்ளார் என்று டில்லி அரசியல் சர்க்கிள்களில் ஒரு பேச்சு உண்டு.

கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து

பருவ நிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்து, இந்தியாவில் கடலோர பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளதாக ஒரு ஆய்வில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய பருவநிலை மாற்றம் குறித்து 120 அமைப்புகளை சேர்ந்த 220 விஞ்ஞானிகள் ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற அமைப்புக்கு அறிக்கை அளித்துள்ளனர்.இந்த விஞ்ஞானிகள் அழிவு உண்டாக்கத்தக்கதும், சுனாமி தாக்கியதுமான தமிழ்நாட்டின் நாகப்பட் டினம், `பேக் வாட்டர்' என்று அழைக்கப்படுகிற உப்பங்கழிகளால் சூழ்ந்த கேரளாவின் கொச்சி, ஒடிசாவின் பாரதிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர்.அந்த ஆய்வின் அடிப்படையில் அவர்கள் அறிக்கை தயாரித்து அளித்துள்ளனர். அந்த அறிக்கையில், ஆண்டுகளுக்கு இடையே கடல் நீர் மட்டம் 3.5 அங்குலத்திலிருந்து 34.6 அங்குலம் அளவிற்கு உயர்கிற வாய்ப்பு உள்ளது.

நீதிமன்றத் தீர்ப்புககள், பார்பன ஆதிக்க நீதித்துறை


ஓபலாபுரம் கனிமச் சுரங்க முறைகேட்டில், சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்குவதற்காக, முதல் கூடுதல் சிபிஐ நீதிபதி பட்டாபி ராமாராவ் ரூ.10 கோடி லஞ்சம் வாங்கினார் என்பதில் அனைவரும் அதிர்ச்சி அடையக் காரணம், நீதிபதி லஞ்சம் வாங்கினார் என்பதால் மட்டும் அல்ல; ஜாமீன் வழங்க ரூ.10 கோடியா என்பதுதான்.

 நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட கொஞ்சம் நஞ்ச நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் சமீபத்திய சில நீதிமன்றத் தீர்ப்புகளும், நீதிபதிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் அமைந்துள்ளன என்பதுதான் வேதனையானது.எல்லாத் துறைகளிலும் இருப்பதைப்போல சில கறுப்பு ஆடுகள் நீதித்துறையிலும் இருப்பது என்பதில் வியப்பொன்றும் இல்லை. நீதிமன்றங்களில் இடைக்காலத் தடை பெறும் விவகாரங்களில் முறைகேடுகள் மேலதிகமாக நடப்பதாக எல்லோராலும் பேசப்பட்டு வந்தது.

மம்தா:என்னைப் போல் எந்த முதலமைச்சருக்காவது தைரியம் உள்ளதா?

மேற்கு வங்காளம், ஜூன் 1-மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் 2 ஆவது முக்கியமான கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பெட்ரோல் விலைகுறைப்பு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

தி.மு.க. தலைவர் கலைஞர் 89ஆவது பிறந்த நாள்


தந்தை பெரியார் நினைவிடத்தில் கலைஞர் மலர் வளையம் வைத்து மரியாதை
கலைஞரை தமிழர் தலைவர் வரவேற்று சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்
தி.மு.க. தலைவர் கலைஞர் தமது 89ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2012)  தந்தை பெரியார் நினைவிடத்தில்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் தமிழர் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.

ரோஜா: இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது

Roja Confident Ysr Congress Victory By Polls
ஹைதராபாத்: ஆந்திராவில் ஜெகனுக்கு எதிராக சிபிஐயை தூண்டிவிடும் காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்று நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரதிநிதியுமான ரோஜா கூறியுள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தற்போது ஹைதராபாத் சஞ்சல்கூடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் வந்துள்ள நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜெகனை சிறையில் தள்ளியது வீண்.. பிரச்சாரத்துக்கு அலைமோதும் கூட்டம்

 Jagans Mother Sister Draw Huge Crowds
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை வரும் இடைத்தேர்தலில் முடக்குவதற்காக அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ சிறையில் அடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் நினைத்ததற்கு எதிராக ஜெகனின் குடும்பத்தினர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆந்திராவில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரு நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கும் ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.

கமல் அதிரடி!ஷாருக்கானும் ஜாக்கிசானும் எனக்கு தேவையில்லை

கமல் நடித்து இயக்கியுள்ள ’விஸ்வரூபம்’  படத்தின் ரிலீஸுக்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது.   இதையடுத்து கமல் தனது அடுத்த படமான ‘அமர் ஹை’ பற்றி அறிவித்திருந்தார். 
இப்படத்தை பற்றி கமல் பேசும்போது,    ”அரசியலில் நடக்கும் ஊழலை மையமாகக் கொண்டு இரண்டு வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கதை இது.   கதையில் சில மாற்றங்களை மட்டும் இப்போது செய்திருக்கிறேன். படத்தை தமிழிலும், இந்தியிலும் ஒரே சமயத்தில் வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.