![]() |
M Ponnusamy : முதலில் அதிமுக, இரண்டாவது திமுக இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் போட்ட பிச்சையால் 1998 & 1999 ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் சி.பி.இராதாகிருஷ்ணன்.
(C.P. Radhakrishnan ) (சந்திராபுரம், பொன்னுசாமி. ராதாகிருஷ்ணன்)*
அதன்பின் 2004, 2014, 2019 என்று மும்முறை அல்லது அதற்கும் மேல் தொடர்ந்து மண்ணைக் கவ்வியவர் இந்த காவிகிருஷ்ணன்.*
கோவை மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்படவே இனி இது வேலைக்காவாது என்று இந்தியாவிலேயே அதிசொகுசு பதவியான ஆளுநர் பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டன.*
இறுதியாக இப்போது இருப்பதிலேயே டம்மி பதவியான துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றி எளிதில் வாய்க்குமா எனத் தெரியவில்லை, இருந்தாலும் அவரே வெல்வார்.!
ஜெயா மரணப் படுக்கையில் இருந்தபோது அதிகமாக இங்கு தொகுறிக் கொண்டிருந்தவர் வெங்கைய்யா. அவரை அடக்கி கட்டிப் போட இந்தப் பதவியைத்தான் தந்தனர். அதன்பின் அவர் நடந்த தடம் கூட யார் கண்ணுக்கும் தெரியவில்லை.
ஜெகதீப் தன்கர் கொட்டு மேல் கொட்டாய் மம்தாவிடம் வாங்கி, அவர் மண்டை வீங்கிப் போக, அவருக்கும் இந்தப் பதவியைக் கொடுத்துத்தான் கட்டிப்போட்டனர்.*
ஜெகதீப் ஆசையாசையாய் மீனாவுடன் எடுத்துக்கொண்ட ஒரே ஒரு போட்டோ வந்தது. அவ்வளவுதான்.*
அதன்பின் என்ன நடந்தது என்று எல் போர்டுக்கு மட்டுமே தெரியும். திடுதிப்பென்று அவரை பதவியிலிருந்து துரத்தி விட்டனர். அவ்வளவு பெரிய பதவியை வகித்த ஆள் அட்ரஸ் கூடத் தெரியவில்லை !*
அந்தளவு மொண்ணை பதவி.*
ஆனால் ஒரு இலாபம் உண்டு.*.
நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவைத் தலைவராக தினமும் அந்த அவையை நடத்தலாம்.
அங்கு நம்மாட்கள் பொதுவாக தமிழில்தான் பேசுகின்றனர். நம்ம இராதாகி உட்காரும் போது இனி அவை கலகலப்பாக போகும். சல்மா, கமல்
M. P. யாகப் போன நேரம் பார்த்து இதெல்லாம் அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைகிறது. *
உரித்து உப்புக்கண்டம் தடவுங்கள் - வாழ்த்துகள்!
M Ponnusamy :; #தமிழ்நாட்டின்_தந்திரம்மிகுந்த_பிழைப்புவாத_சாதிகள்...!*
காங்கிரசு கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் கோலோச்சிய போது, காமராசரை கேடயமாக்கி, நாடார் சாதியினர் இந்து, கிறிஸ்தவர் என்ற மத வேறுபாடு இன்றி,தமிழகம் முழுவதும் கிளை பரப்பி பற்றிப் படர்ந்து, பொருளாதாரத்தில் உச்சத்தில் அமர்ந்தனர். காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்தார்கள்.*
பாஜக ஆட்சி யதிகாரத்தில் வந்துவிட்டதும் இந்து நாடார்கள் காங்கிரசை கை கழுவிவிட்டு, பாஜகவை பிடித்துக் கொண்டு, பொன்னார், தமிழிசை போன்றோர் அமைச்சர், ஆளுநர் என்று ஆனார்கள். தற்போது இந்து நாடார்கள் இக் கட்சியின் வாக்கு வங்கியாக மாறிவிட்டார்கள்.*
கிறிஸ்தவ நாடார்கள் திகைத்து நிற்கிறார்கள்*
கோவை கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், அதே போல காங்கிரசு உச்சத்தில் இருந்தபோது சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் மோகன் மற்றும் அவரின் மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் போன்றோர் உயர்பதவிகளில் இருந்தார்கள்.*
தற்போது அந்த கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பா.ஜ.க விற்குத் தாவி, அதன் வாக்கு வங்கியாக ஆகிவிட்டார்கள்.*
சி.பி.ராதா கிருஷ்ணன்.
(C.P. Radhakrishnan )
(சந்திராபுரம், பொன்னுசாமி. ராதாகிருஷ்ணன்)
துணைக் குடியரசுத் தலைவராக ஆகப்போகிறார். அண்ணாமலை,வானதி திருநாவுக்கரசு,உயர் பதவிகளில் அமர வைக்கப்பட்டு உள்ளார்கள்.*
வெற்றி பெறும் குதிரைகளில் ஏறி சவாரி செய்து கொண்டிருக்கும் இந்த இரண்டு சாதிகளும், தமிழ்நாட்டின் வேறெந்த சாதிகளை விடவும், தந்திரம் மிகுந்த பிழைப்புவாத பிதாமகன்களாக இருக்கிறார்கள்.*
இந்த குதிரை சவாரியில் தேவர்களும் ( நயினார் நகேந்திரன்), அருந்ததியினர் களும்(எல்.முருகன்) இணைந்து இருக்கிறார்கள்.*
இந்த சாதியினர் எந்த அளவிற்கு பா.ஜ.கவின் வாக்கு வங்கியாக மாறி பதவிகளைப் பெறப் போகிறார்கள் என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். போகப் போகத்தான் தெரிய வரும்.*
சித்தார்த் தமிழவேள், முகநூல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக