இங்கே நிறைய உவைசிகள் உண்டு இரட்டை இலக்கத்தில் வாக்குவங்கி இருந்தாலும் அதை பங்கு போட நாற்பதிற்கும் மேற்பட்ட கட்சிகள் அதுகூட தவறு அமைப்புகள் லெட்டர்பேட் கட்சிகள் ..ஒற்றுமையின்மை சிதைத்துவிடுமென (வேதம்) அறிந்திருந்தும் பதவியும் புகழும் அவர்களை பார்வையை மறைத்துவிட்டன.. யாரோடு சேர்வதென்பதில் இவர்கள் தரும் விளக்கங்கள் எல்லாம் குப்பைகள்.. தேர்தல் அரசியலில் யாரை வரவிடகூடாதென்ற தெளிவு வேண்டும் பிரதான பகைக்கு யாரெல்லாம் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரவு தருவார்கள் என்று அறிந்திருக்கவேண்டும் .. உண்மையில் சுமையோடு இருக்கிறார்கள்.. சமூகநீதியின் நெடிய பயணத்தில் இவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கிருக்கிறது ..நம்பிக்கைக்குரியவர்கள்..
..
விடுதலை சிறுத்தைகள்
என்னதான் முற்போக்கு பேசி நின்றாலும் நிழல் என்னவோ "சாதியநிலையை" காட்டுகிறது ..சிலநேரம் நிழல் உண்மை பேசும்.. தங்கள் வாக்கு வங்கி எத்தனை தூரம் பயணிக்கும் என்பதை அறியாமல் பேசுகிறா்கள் .. பல தொகுதிகள் கண்ணுக்கெட்டிய தூரம் காணவில்லை என்பதும் சில மாவட்டங்களில் பெருத்த ஆதரவு அதிலும் போராட வேண்டி வரும் என்பதை காலம் உணர்த்தியும் நாங்கள் இல்லையென்றால்
திமுக வெல்ல முடியாதென ஆரூடம் சொல்கிறார்கள் தரையில் கால் நிற்காமல் எழ முடியாது .. நிறைய விமர்சனங்கள் உண்டு கடந்தகால கசப்பான நினைவுகள் வந்துபோவதுண்டு .. ஆனாலும் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனுமில்லை என்ற கலைஞர் தந்த தெளிவும் .. சமூகநீதியோடு பயணிக்க பேராசான் தந்த பாடமும் வாய்திறக்க மறுக்கிறது
எங்கு நின்றால் வெல்லமுடியுமென்றும் எந்த சின்னத்தில் நின்றால் வெற்றி எளிதாகுமென்று திமுக தலைமை தரும் யோசனையை ஏற்றால் நல்லது ..
வீணாக NO BALL போட வேண்டியதில்லை..
தேர்தல் அரசியலில் சில விட்டுவீழ்ச்சிகள் அவசியம் என்பதை உணரவேண்டும்..
..
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் தங்களின் பலத்தை உணர்ந்து அமைதிகாப்பது நல்லது
பழையபடி பார்ப்பன பாசத்தில் பிரிந்து சென்றாலும் தனிஆவர்த்தனம் செய்தாலும் எடுபடாது .. மக்கள் ஆட்சியாளர்களால் பெருங்துயரில் நிற்கிறார்கள் இந்த இழிநிலைக்கு தெரிந்து தெரியாமலோ "மநகூ".வும் ஒரு காரணம் என்பதை அறிவார்கள் .. தமிழகத்தை பிடித்த பீடைகளை ஒழிக்க திமுகதான் சரியான தேர்வென்பதை காலம் தந்த படிப்பினையால் அறிந்துணர்ந்திருக்கிறார்கள்.. இனியும் தவறிழைத்தால் எதிர்காலம் இருண்டுபோகும் என்பதையும் தங்கள் சந்ததி அடிமைகளைப்போல அலைய நேரிடும் மானம்கெட்டு மரியாதை போய்விடும் என்பதை உணர்கிறார்கள் ..காலம் தரும் நல்வாய்ப்பாய் "தளபதி" கிடைத்திருக்கிறார்.. பெருவெள்ளத்தில் சிக்கி தத்தளிப்போருக்கு கிடைத்த தோணியாய் தி.மு.கழகத்தின் தலைவர் வந்திருக்கிறார் அவரை அறியணையேற்றுவது தான் எதிர்காலத்தில் பாதுகாப்பை தரும் என நம்பிக்கை கொள்கிறார்கள் ..
உதிரிகள் ஒன்றை உணருதல் நன்று ..
நாட்டின் நலன் கருதி..
தங்கள் மரியாதை கெடாமல் திமுக தரும்.. உதிரிப்பூக்களை மாலையாக்கி தருவார் தளபதி..
நமது இலக்கு 2021 தளபதி முதல்வர்
அந்த ஒற்றை சிந்தனையோடு பயணிப்போம்
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக