ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

திமுகவை நீட் போராட்டத்தில் இருந்து திசை திருப்ப முயற்சி?

Devi Somasundaram : அனிதா தற்கொலைல திமுக மேல குற்றம் சொல்பவர்களுக்கு ஏன் பதில் சொல்லாம இருக்காங்க ..?? இன்பாக்ஸ்ல ஒரு கேள்வி ..
ஏன் பதில் சொல்லனும்....அல்லது என்ன பதில் சொல்லனும் ..ஸ்டாலின் கூட இருந்த புகைப்படம் போட்டு அனிதாவை திமுக தான் கொலை செய்துடுச்சுன்னு மெம் உருவாக்குவது தான் ஒரு குற்றசாட்டுக்கு ஆதாரம் என்று நினைக்கும் அளவுக்கு தான் அறிவிருக்கும் என்றால்..அவர்களுக்கு என்ன விளக்கம் தந்து பதில் சொல்லனும்...
போகிற போக்கில் ஒருத்தன் ஒரு பெண்ணை தேவிடியான்னு திட்னா. இல்ல இல்ல. நான் பத்தினின்னு அந்த பெண் தீக்குளிக்கனுமா ? .. இந்து மதம் சொன்ன தத்துவம் தன்னை நிருபித்து கொள்ளல்...சீதை தன் கற்ப நிருபித்து கொள்ள நிர்பந்திக்க பட்டாள்..
அதை தான் திமுகவும் செய்யனுமா? ..யார் குற்றவாளியோ அவர்களே திமுக மீது குற்றம் சாட்டுவது தானே ஆரம்பத்தில் இருந்து நடக்குது ..கணக்கு தர வேண்டிய பொருளாளர் கணக்கு கேட்ட அதிசயம் வேற எந்த நாட்டில் நடக்கும்.. கணக்கு கேட்டதாக நாடகம் போட்ட எம் ஜீ ஆரை நம்பி தான் ஓட்டு போட்டுச்சு இந்த நாடு..

கலைஞர் தெலுங்கர்ன்னு சொன்னதை விடவா பெரிய அபத்தம் இருக்க முடியும்.. நீரா ராடியா டேப்பை ஒரு பாதி நம்பிய மக்கள் அதே டேப்பில் கனிக்கும் ராசாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ராடியா பேசியதை ஏன் யாரும் கேட்க வில்லை. .
2 ஜீ 1.75 லட்சம்ன்னு கட்டுகட்டா நோட்டை அடுக்கி வச்சு மெம் போட்டவன்லாம் ஏன் நீதி மன்றம் போய் சாட்சி சொல்லி இருக்கலாம்ல..சி ஏ ஜி ய நீதி மன்றம் காரி துப்பிய போது அந்த மென் டிக்கெட்லாம் ஏன் அமைதியா இருந்துச்சு. .

. நீதிமன்றத்தில் நிருபிக்க முடியாத. வகையில் ஊழல் செய்ததா சொல்லி அதற்கு விஞ்ஞான ஊழல்ன்னு வேற பேர் வைச்சது வேற எந்த நாட்டில் நடக்கும்..நிருபிக்க படுவது தான் விஞ்ஞானம் என்பதை கூட அறியாமல் அதை இப்பவும் நம்பறவன் கிட்ட என்ன விளக்கம் தரனும்..
ஆசியாவிலேயே பெரிய பணக்காரர் கலைஞர். உலகத்துலயே ஊழலான கட்சி டி எம் கே. எத்ற்காவது ஆதாரம் உண்டா?? கோர்ட் கேஸ் உண்டா. ? ... தெருல போற நாய்லாம் கொலைக்கும் ..அதுகுலாம் நின்னு பதில் சொல்லனுமா? ..
திங்கள் கிழமை அனைத்து கட்சி கூட்டம் என்று ஸ்டாலின் அறிவித்த உடன் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டுகிறார் என்பதில் இருந்து நீட் க்கு எதிரா திமுக செயல்படாமல் தடுப்பது தான் நோக்கம் என்பது கூட புரியலன்னா. உங்க கிட்டலாம் இவ்லோ நாள் அரசியல் பேசியதே வேஸ்ட்....
நீள நீளமா பெங்களுர் கூ முட்டைகள் எழுதி குடுத்த காபி பேஸ்ட் தூக்கிட்டு
பேஜ் பேஜ் ஆ கமெண்ட் போடும் அளவு தான் வளருவ. அதுக்கு மேல யோசிக்கவே மாட்டன்னா. திமுக விளக்கம் சொன்னா மட்டும் ஆகான்னு திருந்திட போறியா...போய்யா. .நாளைக்கு இன்னொரு பொய். சொல்வான் ..அதுக்கு பதில் சொல்லனுமா. ..
அவன் நோக்கம் திமுக வை நீட் லேர்ந்து திசை திருப்பு வது தான்....தலை கீழ நின்னாலும் அது நடக்க போறதில்ல.. போங்கடே.

கருத்துகள் இல்லை: