திங்கள், 19 டிசம்பர், 2016

ஒட்டுக்கேட்பு!: உளவுத் துறையில் திவாகரனின் உறவினரான ஜெயச்சந்திரன் நியமனம்

தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவில் பணியாற்றிவந்த ஏ.டி.எஸ்.பி.,யான ராஜேந்திரன், காவல்துறையின் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். ராஜேந்திரன் பணியற்றி வந்த பதவிக்கு, திவாகரனின் உறவினரான ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கு பணிமாற்றல் வருவது குறித்து அறிந்த ராஜேந்திரன், அதே பணியைத் தொடர முயற்சிகள் செய்தார். ஆனால், அவரது முயற்சி பலனிக்காத நிலையில் கம்ப்யூட்டர் பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜேந்திரனின் திடீர் பணி மாற்றத்துக்கு காரணம், தலைமைச் செயலாளரான ராம்மோகன் ராவை ரகசிய கண்காணிப்பு செய்து அவரது கோபத்துக்கு ஆளானதுதான் என்கிறார்கள். அவ்வாறு கண்காணிப்பு பணியை மேற்கொள்ளச் சொன்னதே உளவுத்துறை உயர் அதிகாரியான சத்தியமூர்த்திதான் என்று தெரிய வந்ததும், ராம்மோகன் ராவ், சத்தியமூர்த்தியை அழைத்து கடிந்திருக்கிறார்.

அதோடு, போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்த தலைமைச் செயலாளர் அவரிடம், ‘’உளவுத்துறை உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி ராஜேந்திரன் என்னை கண்காணிக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். இதேபோன்றுதான் இவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, உளவுத் துறை ரிப்போர்ட்டை வேறு சிலருக்கும் அளித்திருக்கிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தொலைபேசிகளை ஒட்டு கேட்கும் பிரிவில் இருந்த ராஜேந்திரனுக்கு அதிரடி பணிமாற்றம் நடந்திருக்கிறது. விரைவில் சத்தியமூர்த்திக்கும் டிரான்ஸ்பர் வருமா வராதா என்ற பட்டிமன்றம்தான் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் நடந்து வருகிறது  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: