தமிழ் அரங்கத்தினர் ஜனாதிபதியை நேற்று சந்திச்சு உரையாடினதாக செய்திகள் வந்துள்ளன. அதில் சிங்களவர் வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைப் பற்றி சிவாஜிலிங்கம் ஏடாகூடமாக கேட்டுவைக்க ஜனாதிபதிக்கு வந்ததே கோபம். கொழும்பில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஆதிக்கம் செலுத்துவார்களாயின் யாழ்ப்பாணத்தில் சிங்களவர் குடியேறுவதில் தவறில்லை என ஒரு போடு போட சிவாஜிலிங்கம் வெலவெலத்துப்போய்விட்டார். பிறகு பத்திரிகையில் கொடுத்த பேட்டியில் ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்திகரமாக இல்லையென அறிக்கை வேறு கொடுத்திருக்கிறார்.
சிவாஜிலிங்கத்தின் கடந்தகால வரலாறு புலிகளுக்காக குரல் கொடுத்ததுதான். இதை உலகே அறியும். புலிகளைக் காப்பாற்ற முடியாமல் போனபின் லண்டனில் இருந்த சிவாஜிலிங்கம் புலம்பெயர் புலிகளுக்கிடையிலான உள்மோதல்களை கண்டு இந்த விசரன்களுடன் நானிருப்பதை விட நாட்டுக்குப்போய் நிம்மதியதாக இருக்கலாம் என நாட்டுக்கு ஓடிப்போனார். நாட்டுக்கு வருவதில் பிரச்சினையில்லை. வந்தால் வாயைப்பொத்தியபடி இருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பிரகாரம் சிவாஜிலிங்கம் எந்தவித பிரச்சினையுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி லெக்சனும் கேட்டுப்பார்த்தார். தேர்தலில் போட்டியிட்டுப்பார்த்தார் வெற்றி கிடைக்கவில்லை. இப்போ தமிழரங்கத்தில் சேர்ந்து இருக்கிறார்.
தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதென்றால் சிங்களமக்கள் மத்தியில் அது நியாயமான கோரிக்கையாகத் தெரிய வேண்டும். சிரிப்பே முகத்தில் வராத சிவாஜிலிங்கம் தொடர்பாக சிங்கள மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை. புலியின் பிரதிநிதியாகவே அவர் இனங்காட்டப்பட்டிருக்கிறார் ஆகவே தமிழரங்கத்தில் சிவாஜிலிங்கம் மௌனமாக இருப்பது தமிழரங்கத்திற்கு நல்லது.
குடியேற்றம் தொடர்பான கேள்விகள் சிவாஜிலிங்கத்திடமிருந்து வருமாயின் அது புலித்தன்மை கொண்டதாகவே இருக்கும். அக்கேள்வியை தமிழரங்கத்தில் இருந்து வேறு யாரும் கேட்டிருந்தால் ஜனாதிபதி இப்படி எகிறிப்பாய்ந்திருக்கமாட்டார். இதனை தமிழரங்கத்தினர் புரிந்து கொள்வது நல்லது.
எப்படியாயினும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை முன்னிலைப்படுத்தி தமிழரங்கம் செயற்படுமாயின் அதற்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருக்காது என்பதே ரீ வடையின் அபிப்ராயம்.
என்ன விளங்கிச்சோ சிவாஜிலிங்கம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக