நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் 144 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில், 6 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தற்போதைய ஆளும் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் 141 தொகுதிகளிலும், பா.ஜனதா 102 தொகுதிகளிலும் போட்டியிட்டது.
மற்றொரு கூட்டணியில், லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளம் 168 தொகுதிகளிலும், பஸ்வானின் லோக் ஜனசக்தி 75 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க 122 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் 142 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளமும், பஸ்வானின் லோக் ஜனதா சக்தியும் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை உள்பட இதர கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக