இதுகுறித்து அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சாமி கூறி வரும் அனைத்துப் புகார்களும் ஆதாரமற்றவை, தேவையற்றவை. குறிப்பாக பிரதமர் மீது அவர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என்பதோடு அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.
நடந்த சம்பவம் (ஸ்பெக்ட்ரம்) 2007ல் நடந்துள்ளது. எனவே இப்போது அமைச்சராக உள்ள நான் அதுகுறித்து கருத்துக் கூற முடியாது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாககருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
அதேபோல, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தை கடந்த 20 வருடங்களாகவே விமர்சித்துக் கொண்டிருக்கிறார் சாமி. இதற்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். இதுகுறித்து சட்ட ஆலோசனையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.
அரசியல் ரீதியாக உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கூறிக் கொண்டிருக்கிறார் சாமி. அப்படிப்பட்டவரை சட்ட ரீதியாகத்தான் ஒடுக்க வேண்டும். அதை விரைவில் சாமி எதிர்கொள்ள தயாராக இருக்கட்டும் என்றார் பைலட்.
பதிவு செய்தது: 23 Nov 2010 2:28 am
(முன்னாள் அரிச்சந்திரன்): டேய் மால்மதி என்னும் எனது பெயரைப் பயன்படுத்துபவனே.. உனக்கு மனசாட்சி இருக்கிறதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக