இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரிச் சென்ற குடும்பமொன்று தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீவிர கண்காணிப்பு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
யோகச்சந்திரன் ராகவன், அவரது மனைவி சுமதி ராகவன், மகள் அற்புதா மகன் அபினயன் ஆகியோர் இவ்வாறு தனியாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த குடும்பத்தினர் அவுஸ்திரேலியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடுமென்ற அச்சம் காரணமாக இவ்வாறு கண்காணிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. 24 மணித்தியாலமும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் அவர்களை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தனியாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதனால் தாம் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகவன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கு தாம் விரும்புவதாகவும், இவ்வாறான ஓர் நிலைமை தமக்கு ஏற்படும் என நினைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உடல் ரீதியாக அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியதாகவும் அவுஸ்திரேலியாவில் உள ரீதியான தாக்கங்களை எதிர்நோக்குவதாகவும், தமக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை எனவும், தமது மனைவி தமிழீழ நீதிமன்றில் எழுதுவிஞைர் பிரிவில் கடயைமாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்று கடந்த ஓரிரு மாதங்களிற்கு முன்னரும் 2 குழந்தைகள் அடங்கிய இன்னொரு தமிழ்க்குடும்பத்தை அவுஸ்திரேலியா கண்காணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. |
செவ்வாய், 23 நவம்பர், 2010
Australia அகதி அந்தஸ்து கோரிய குடும்பம் ஒன்றின்மேல் தீவிர கண்காணிப்பு செலுத்தும் அவுஸ்திரேலியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக