கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப் பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன முழுமையாக நீக்கப்படவிருக்கின்றது. இதற் கான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011ம் ஆண் டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பு இந்நாட்டில் தகவல், தொழில் நுட்பத் துறை யுடன் தொடர்பு வைத்திருக்கும் சகலருக்கும் மகிழ்ச்சியை யும், சந்தோஷத்தையும் அளித்திருக்கும். அதேநேரம், இந்த அறிவிப்பு இந்நாட்டினர் மத்தியில் பெரும் வரவேற் பையும் பெறும். இவை மறைக்க முடியாத உண்மைகளாகும்.
இன்றைய கால கட்டத்தில் தகவல், தொழில் நுட்பத்துறை அப ரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. அத்தோடு நில்லாமல் இத்துறை தொடர்ந்தும் வளர்ச்சி அடைந்து வரு கின்றது. இவ்வாறான ஒரு வளர்ச்சியை வேறு எந்தத் துறை யும் ஒரு குறுகிய காலத்தில் அடையவில்லை.
அந்தவகையில்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை யும், நாட்டு மக்களையும் நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்த அடிப்படையில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவி வகிக் கும் காலத்திலேயே நாட்டையும், நாட்டு மக்களையும் தக வல், தொழில் நுட்பத் துறையில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கும்போது நாட்டில் பத்து சதவீதத்திற்கும் குறை வானவர்களே கணனி அறிவைப் பெற்றவர்களாக இருந்த னர். அதுவும் பிரதான நகர்களில் வசதி படைத்தவர்கள் மத்தியில் தான் கணனியும், கணனி அறிவும், அதன் பயன் பாடும் இருந்தது. நகரம், கிராமம் என்ற பேதமில்லாமல் எல்லா மக்கள் மத்தியிலும் கணனியும், கணனி அறிவும் கொண்டு செல்லப்படாத நிலையே அன்று காணப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்த வேலைத் திட் டங்களின் பயனாக தகவல், தொழில் நுட்பத்தின் முக்கியத் துவத்தையும், சிறப்பையும் நாட்டு மக்களால் புரிந்துகொள் ளக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கணனி அறிவின் அவசி யம், அதன் பயன்பாட்டின் முக்கியத்துவம் என்பன தொடர் பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்பட்டது. இதற்கு நாடெங்கிலும் ஆயிரம் நெனசல் அறிவகம் அமைக்கும் திட்டம் பெரிதும் உதவியது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005ம் ஆண் டில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர் பாராளுமன் றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு- செலவுத் திட் டத்திலும் தகவல், தொழில்நுட்பத்துறைக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தான் 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியும், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியும் நீக்கப்படுகின்றது.
அதேநேரம், கடந்த வருடத்தை ஆங்கிலம் மற்றும் தகவல், தொழில் நுட்பத்திற்கான ஆண்டாகவும் ஜனாதிபதி தலை மையிலான அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தி இருந்தது.
இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக தற்போது இலங்கைய ரின் கணனி அறிவு 40 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. நகர மக்கள் மாத்திரமல்லாமல் கிராம மக்களும் தகவல் தொழில் நுட்ப அறிவைப்பெற்றவர்களாக வும், அதனைப் பயன்படுத்தக்கூடியவர்களாகவும் மாறி இரு க்கின்றார்கள்.
என்றாலும் அடுத்துவரும் ஐந்து வருடங்களில் இலங்கையரின் கணனி அறிவையும் பயன்பாட்டையும் 70 சதவீதத்திற்கும் மேல் மேம்படுத்துவதே ஜனாதிபதி தலைமையிலான அர சாங்கத்தின் நோக்கமாகும்.
ஆகவே இந்த நாட்டின் துரித அபிவிருத்திக்கு தகவல், தொழில் நுட்பத்துறையின் மேம்பாடு பாரிய பங்களிப்பு செய்யும் என்பதை உறுதிபடக் கூறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக