கொடுமையானண செக்ஸ் வர்த்தகத்திலிருந்து 12000 பெண்களைக் காப்பாற்றிய நேபாள பெண்மணி அனுராதா கொய்ராலா ‘உலக ஹீரோ’வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
க்வாடலுப் அரிஸ்ப் டி லா வேகா (Guadalupe Arizpe De La Vega): 74 வயதாகும் இவர், மெக்ஸிகோவில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி, அதில் தினமும் 900 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர்களால் கொடுக்க முடிந்ததைப் பெற்றுக் கொள்கிறார். கொடுக்காவிட்டாலும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.
சூஸன் பர்ட்டன் (Susan Burton): போதை மருந்துக்கு அடிமையாகி சிறைத் தண்டனை பெற்றவர் சூஸன். ஆனால் பின்னர் அவரே ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஏற்படுத்தி, சிறை சென்று மீண்ட கலிபோர்னிய பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து வாழ்வளித்து வருகிறார்.
லிண்டா பான்ட்ரன் (Linda Fondren): உடல் பருமனால் அவதிப்படும் மிஸிஸிப்பி பகுதி மக்கள், உடல் எடையைக் குறைக்க இலவச பிட்னஸ் வசதிகள், சத்துணவு திட்டங்களை தந்து இதுவரை பல நூறு குண்டு மனிதர்களின் 15000 பவுண்ட் எடையைக் குறைத்துள்ளார்.
நாராயனண் கிருஷ்ணன் (Narayan Krishnan): தினசரி 400 மனநலம் பாதித்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அரும்பணியைச் செய்துவரும் மதுரைக்காரர் நாராயணன் கிருஷ்ணன்.
மேக்னஸ் மாக்பார்லன் பாரோ (Magnus MacFarlane-Barrow): மேரி மீல்ஸ் என்ற பெயரில் தினசரி உலகம் முழுவதும் உள்ள 4 லட்சம் குழந்தைகளுக்கு அளித்து வருகிறார் பாரோ. 1992-ம் ஆண்டிலிருந்து, இந்த சேவையைத் தொடர்கிறார் இவர்.
ஹார்மோன் பார்க்கர் (Harmon Parker): தனது கட்டுமானத் திறமையை பயன்படுத்தி கென்யாவின் ஆறுகளுக்குக் குறுக்கே நடை மேம்பாலங்களை அமைத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் பார்க்கர். இதனால் கொடிய மிருகங்களிடமிருந்தும் மக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்து வருகிறது. 1997-லிலிருந்து இதுவரை தனிமனிதராக 45 பாலங்களை அமைத்துள்ளார் பார்க்கர்.
அகி ரா (Aki Ra): கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது குழுவினருடன் சேர்ந்து இதுவரை 50000 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளார். இவை அனைத்தும் என்றோ புதைக்கப்பட்டு, இன்னமும் வெடிக்காமல் இருக்கும் ஆபத்தான வெடிகள்.
இவான்ஸ் வடான்கோ (Evans Wadongo): 23 வயதே ஆன இந்த கென்ய இளைஞர், கெரசின் மற்றும் கரி அடுப்பு விளக்குகளின் புகையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க இதுவரை 10000 பேருக்கு சூரிய ஒளி விளக்குகளை வழங்கியுள்ளார்.
டான் வால்ராத் (Dan Wallrath): டெக்ஸாஸைச் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரில் படுகாயமடைந்தவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்போதைக்கு 5 பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
இந்தப் போட்டிக்கு தமிழ் நாட்டை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு 25000 டாலர் பரிசை பெற்றுக்கொண்டார்
தன்னலமற்ற சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள தனி நபர்களை உலக ஹீரோவாக அடையாளம் காட்டும் வகையில் டாப் 10 உலக ஹீரோக்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி. 2007-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட சமூக சேவர்களின் பின்னணி மற்றும் சேவையைப் படித்து தெரிந்து கொண்டு, சர்வதேச அளவில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சிஎன்என் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த இரண்டு மாத காலமாக இதற்கான பொது வாக்கெடுப்பு சிஎன்என் இணையதளத்தில் நடத்தப்பட்டு வந்தது.
இதில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று அனுராதா கொய்ராலா உலக ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.

உலகம் முழுவதும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் நடிகை டெமி மூர்தான் அனுராதா கொய்ராலாவை அறிமுகப்படுத்தினார்.
அனுராதா கொய்ராலாவும் அவரது மைதி நேபால் அமைப்பும், மிகப் பெரிய விபச்சார சந்தையாகக் கருதப்படும் இந்திய – நேபாள எல்லையில் விற்கப்படும் இளம்பெண்களை தடுத்து காப்பாற்றி வருகின்றனர். 1993-லிருந்து இவர்களால் இதுவரை 12000 பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க ஒவ்வொருவரும் இந்தப் பணியில் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். பாலியல் தொழிலில் சிறுமிகளே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் அனுராதா கொய்ராலா.
உலக ஹீரோவாக தேர்வு பெற்ற அனுராதாவுக்கு 1 லட்சம் டாலர் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் அனுராதாவுடன் சேர்த்து மொத்தம் 10 பேர் ஹீரோக்களாக கடந்த சனிக்கிழமையன்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அந்த 10 பேரில் தமிழ் நாட்டை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனும் உண்டு. அனுராதா தவிர மற்ற அனைவருக்கும் தலா 25000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.
ஹாலிவுட்டின் டாப் நடிகர்கள் டெமி மூர், ஹாலே பெர்ரி, ஜெஸிகா ஆல்பா என அனைவரும் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மற்ற ஹீரோக்கள் – ஒரு அறிமுகம் க்வாடலுப் அரிஸ்ப் டி லா வேகா (Guadalupe Arizpe De La Vega): 74 வயதாகும் இவர், மெக்ஸிகோவில் ஒரு பெரிய மருத்துவமனையை நிறுவி, அதில் தினமும் 900 பேருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர்களால் கொடுக்க முடிந்ததைப் பெற்றுக் கொள்கிறார். கொடுக்காவிட்டாலும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.
சூஸன் பர்ட்டன் (Susan Burton): போதை மருந்துக்கு அடிமையாகி சிறைத் தண்டனை பெற்றவர் சூஸன். ஆனால் பின்னர் அவரே ஒரு தன்னார்வ நிறுவனத்தை ஏற்படுத்தி, சிறை சென்று மீண்ட கலிபோர்னிய பெண்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்து வாழ்வளித்து வருகிறார்.
லிண்டா பான்ட்ரன் (Linda Fondren): உடல் பருமனால் அவதிப்படும் மிஸிஸிப்பி பகுதி மக்கள், உடல் எடையைக் குறைக்க இலவச பிட்னஸ் வசதிகள், சத்துணவு திட்டங்களை தந்து இதுவரை பல நூறு குண்டு மனிதர்களின் 15000 பவுண்ட் எடையைக் குறைத்துள்ளார்.
நாராயனண் கிருஷ்ணன் (Narayan Krishnan): தினசரி 400 மனநலம் பாதித்த ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் அரும்பணியைச் செய்துவரும் மதுரைக்காரர் நாராயணன் கிருஷ்ணன்.
மேக்னஸ் மாக்பார்லன் பாரோ (Magnus MacFarlane-Barrow): மேரி மீல்ஸ் என்ற பெயரில் தினசரி உலகம் முழுவதும் உள்ள 4 லட்சம் குழந்தைகளுக்கு அளித்து வருகிறார் பாரோ. 1992-ம் ஆண்டிலிருந்து, இந்த சேவையைத் தொடர்கிறார் இவர்.
ஹார்மோன் பார்க்கர் (Harmon Parker): தனது கட்டுமானத் திறமையை பயன்படுத்தி கென்யாவின் ஆறுகளுக்குக் குறுக்கே நடை மேம்பாலங்களை அமைத்து மக்களைக் காப்பாற்றி வருகிறார் பார்க்கர். இதனால் கொடிய மிருகங்களிடமிருந்தும் மக்களுக்கு பாதுகாப்புக் கிடைத்து வருகிறது. 1997-லிலிருந்து இதுவரை தனிமனிதராக 45 பாலங்களை அமைத்துள்ளார் பார்க்கர்.
அகி ரா (Aki Ra): கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது குழுவினருடன் சேர்ந்து இதுவரை 50000 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளார். இவை அனைத்தும் என்றோ புதைக்கப்பட்டு, இன்னமும் வெடிக்காமல் இருக்கும் ஆபத்தான வெடிகள்.
இவான்ஸ் வடான்கோ (Evans Wadongo): 23 வயதே ஆன இந்த கென்ய இளைஞர், கெரசின் மற்றும் கரி அடுப்பு விளக்குகளின் புகையால் பாதிக்கப்படும் மக்களைக் காக்க இதுவரை 10000 பேருக்கு சூரிய ஒளி விளக்குகளை வழங்கியுள்ளார்.
டான் வால்ராத் (Dan Wallrath): டெக்ஸாஸைச் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போரில் படுகாயமடைந்தவர்களுக்கு சொந்த வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இப்போதைக்கு 5 பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக