வியாழன், 25 நவம்பர், 2010

அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக களனிப் பிரதேச குடியிருப்பாளர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனு

மக்கள் தொடர்பு மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக களனிப் பிரதேச குடியிருப்பாளர் ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா, சட்ட விரோதமான முறையில் தமது மலசல கூடத்தையும், மதில் சுவரையும் இடித்துள்ளதாக குறித்த களனிப் பிரதேச குடியிருப்பாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ஷிராணி பண்டாரநாயக்க, கே. ஸ்ரீபவன் மற்றும் நிமால் காமினி அமரதுங்க ஆகியோரினால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த அசித லியனகே என்பவரினால் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் களனி பிரதேசசபை தலைவர் பிரசன்ன ரனவீர ஆகியோருக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமது காணியில் முச்சக்கர வண்டி சாரதிகள் தரிப்பிடமொன்றை அமைத்துள்ளதாகவும் இது தொடர்பில் முறைப்பாடு செய்த காலம் முதல் முச்சக்கர வண்டி சாரதிகளும் களனி பிரதேச சபைத் தலைவரும் தமக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: