வியாழன், 25 நவம்பர், 2010

மாவீரர் தினம் ஒரு பெரிய பிஸினஸ்

லண்டனில் புலிகள் 3லட்சம் பவுண்ட்ஸ் செலவழித்து மாவீரர் தினம் செய்யவுள்ளார்கள் மிகவும் ஆடம்பரமாக செய்யவுள்ளார்கள். ஆடம்பரமாக செய்து வருகிற மக்களிடம் அதை இதை வித்து காசு சம்பாதிக்க புலிகள் முயல்கிறார்கள். பூவுக்கு ஒரு விலை, கொடிக்கு ஒரு விலை, புத்தகத்திற்கு ஒரு விலை, கொத்துரொட்டி, குடிவகை என ஒரு மாபெரும் வியாபாரம் ஒன்று மாவீரர் தினமன்று நடைபெறவுள்ளது. இதனால் வரும் வருமானம் மாவீரர் குடும்பத்திற்கு பயன்படுமா என்கிற விசர்க்கேள்வியெல்லாம் கேட்ககூடாது. வந்தமா மாவீரர் தினத்தை பார்த்தோமா, அதை இதை வாங்கினமா எண்டு சத்தம் போடாமால் போயிடணும். கேள்வி எதுவும் கேட்கக்கூடாது.
புலிகளின் அகராதியில் புலிகளுக்கு பிடிக்காத வார்த்தையே கேள்வி கேட்பதுதான். தமிழ்மக்களை ஆண்டிகளாக்கி நடுத்தெருவில் விட்ட ஆயுதப்போராட்டமும் அதற்கு தலைமை தாங்கிய புலிகளும் கடைசியில் முள்ளிவாய்க்காலில் மண்டையைப்போட்டதும் வெளிநாடுகளில் உள்ள புலிகள் கிடைத்ததை சுத்த வெளிக்கிட்டாங்கள். கொஞ்ச நாளாய் வருமானம் குறைஞ்சு போச்சு. அதனால் மாவீரர் தினத்தை மிகப்பெரியளவில் ஆடம்பரமாகச் செய்து காசு உழைக்க வெளிக்கிட்டுள்ளார்கள். இதுதான் உண்மை. செத்துப்போன 23000 மாவீரர்கள் பலர் நாடு கிடைக்கும் என்கிற நோக்கத்தில் சண்டை பிடிச்சு இறந்தார்கள். இதில் கொஞ்சப்பேர் சக இயக்கக்காரங்களோட சண்டை பிடிச்சு இறந்து போனார்கள். கணிசமான அளவு பலவந்தமாக புலிகளால் பிடிக்கப்பட்டு யுத்தத்தில் அநியாயமாக செத்துப்போனார்கள். எதுவாக இருந்தாலும் வெளிநாட்டுப்புலிகளுக்கு வருமானத்தை தருகிறவர்களாகவே அவர்கள் இறந்துபோனார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
முந்தியெண்டால் புலி இருக்குது என்கிற பயத்தில் கட்டாயமாக மாவீரர் தினத்திற்குப்போகவேண்டும். இனி அந்தளவு சனம் வருமா என்கிற சந்தேகம்தான். இந்தமுறை எவ்வளவு சனம் வருகிறது எண்டு பாhத்துவிட்டு அடுத்தமுறை கொத்துரொட்டிக்கு குழைக்கிற மாவைப் குறைச்சுப் போடணும் என ரொட்டி விற்கிற ஒரு புலி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது
மாவீரர் தினத்திற்கு ஏன் மக்கள் போகிறார்கள் என சி.என்.என் ரேஞ்சுக்கு ஒரு ஆய்வு நடாத்தினால் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கும். இளசுகள் தங்களுக்கு புதிசா ஒரு கனெக்ஷன் கிடைக்குமா என போகிறார்கள். சிலர் தமக்கு தெரிந்தவர்களை அங்க சந்திக்கலாம் எனப் போகிறார்கள். சிலர் வேடிக்கை பார்க்க போகிறார்கள். 5வீதம் தங்களுடைய குடும்பத்தில் ஒருவர் மாவீராக போனதால் போகிறார்கள். இப்படித்தான் மாவீரர் தினம் கடந்தகாலங்களில் களை கட்டியது.
புலிகளுக்கு எல்லா நிகழ்ச்சிகளும் வருமானம் தருகிற விழாவாக நடத்தவேணும் என்கிறதுதான் முக்கியம். ஓசியில் ஒரு பணியாரமும் சுடக்கூடாது. கடந்தகாலங்களில் இப்படி சேர்த்த காசுகளை கடைசியில் ஆமி கொண்டு போக வெளிநாடுகளில் இருந்த பணத்தை ஆளுக்காள் பங்கு போட்டு விட்டார்கள். இருந்தாலும் இப்படி ஏதாவது ஒன்றைச்செய்து வருமானத்தை தக்க வைக்கவேணும். மந்தைக்கூட்டங்களாக மக்கள் இருக்கையில் எமக்கென்ன கவலை. மாவீரர் தினத்திற்கு வருகின்ற மக்களின் முகத்தைப்பார்த்தால்………..
இதுகளுக்கெல்லாம் எப்ப அறிவு வந்து சிந்திச்சு………..

கருத்துகள் இல்லை: