செவ்வாய், 23 நவம்பர், 2010

கோவில்களில் அனைத்து கட்டணமும் திடீர் கிடுகிடு உயர்வு,அர்ச்சனை முதல் அபிஷேகம் வரை

தமிழக கோவில்களில், அர்ச்சனை முதல் அபிஷேகம் வரை அனைத்து கட்டணத்தையும், இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38 ஆயிரத்து 421 கோவில்கள் செயல்படுகின்றன. இந்த கோவில்களில் பராமரிப்பு, நிர்வாக பணிகளை மேற்கொள்ள வசதியாக சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை, என 10 மண்டலங்களாக அறநிலையத்துறை பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் உள்ள கோவில்களின் வருமானத்தின் அடிப்படையில் சிறப்பு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என கோவில்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பணி புரியும் ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு வகையில் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இந்த செலவினங்களை சரி செய்யவும், கோவில்களின் வருவாயை அதிகரிக்கும் வகையில் தற்போது அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு பூஜைகள் உட்பட அனைத்து கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதில் சாதாரண அர்ச்சனை கட்டணம், இரண்டு ரூபாய் என்பது, ஐந்து ரூபாயாகவும், அபிஷேகம் 20 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், அரை சந்தனக் காப்பு சிறப்பு அலங்கார கட்டணம் 150 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், முழுச் சந்தனக் காப்பு அலங்கார கட்டணம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும், வெள்ளி, தங்க கவச சாத்துபடிகளுக்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர சைக்கிள்கள் பூஜை கட்டணம் ஐந்து ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும், மொபட்டுகளுக்கு 20 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ஆட்டோவுக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், கார், வேன்களுக்கு 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாகவும், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு நிலைகளான பழநி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், ராமேஸ்வரம் கோதண்டராமசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளிட்ட கோவில்களின் அர்ச்சனை கட்டணம் ஐந்து ரூபாய் என்பது 10ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், சந்தனக் காப்பு, வெண்ணெய் காப்பு, திருமஞ்சன அலங்காரம், முத்தங்கி சாத்துபடி என சிறப்பு பூஜைகளின் கட்டணம் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசன கட்டணம் 250 ரூபாய் என்பது 500 ரூபாயாகவும், 500 ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தங்க, வெள்ளி தேர்களை இழுப்பதற்கான குறைந்த பட்ச கட்டணம் 1,500 ரூபாய் என்பது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதை அடுத்து அதற்கான ரசீது புத்தகங்கள் தயார் செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவில்களுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையிலும் ஊழியர்கள் பயன் அடையும் வகையில், கோவில்களில் பூஜை கட்டணம் அனைத்தும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அர்ச்சனை கட்டணத்தை உயர்த்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிற கட்டணங்களை ஏரியாவுக்கு தக்கபடி கோவில் நிர்வாகமே உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதில் சில கோவில்களில், நிர்வாக காரணங்களுக்காக கட்டண உயர்வு டிசம்பர் 1 முதல் அமல் படுத்தப்படுகிறது. தற்போதைய அர்ச்சனை கட்டணம் இரண்டு ரூபாயில் பூஜாரிகளுக்கு 60 பைசா வழங்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வுக்கு பின் பூஜாரிகளின் பங்கு 1.60 ரூபாய் வழங்கப்படும். சிறப்பு நிலை கோவில்களில் பூஜாரிகளுக்கு நான்கு ரூபாய் வரை பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
பாலா ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-23 19:08:16 IST
உண்டியலில் வரும் காணிக்கையில் 2 சதவிகிதம் e.o சுருட்டுவதென்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். இது தவிர நகைகள், பணத்தை கவனிக்க நேர்மையோ, தெய்வ பக்தியோ, நம்பிக்கையோ இல்லாத நாத்திக ஆளுங்கட்சி அறங்காவலர்கள்; நொந்து போய் பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களிடம் காசு வாங்கிக்கொண்டு எரிந்து விழும் பூசாரிகள் ...நமக்கு விடிவே இல்லை! ஒன்று அரசு ஊழியர்களின் அராஜகம் இல்லை பூசாரிகளின் அகம்பாவம்..இவை எல்லாம் போதாது என்று ஆள் அரவம் இல்லாத கோயில்களில் கூட பர்ர்கிங் கட்டண கொள்ளை- ஊராட்சி தலைவர் ஆசியுடன்! ஆண்டவனே இறங்கி வந்து மாற்றினால்தான் உண்டு!...
ரமேஷ்moorthy - bangalore,இந்தியா
2010-11-23 15:55:54 IST
Why the hell govt is managing temple. IN this case they should manage even chruches and mosque. They collect our money and say there is no god....we should not go to temple.......
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-23 15:46:05 IST
இது எந்த அடிப்படை முறையில் கூட்டுகிறார்கள் என்று எங்களை போல் உள்ள பொது ஜனத்திற்கு ஒன்றும் புரிய வில்லை. இந்த கோவில்களில் மஞ்ச கலரு மற்றும் பச்ச கலருல என்று புது,புது புக் அடிகிராணுக. ஆனால் இந்த பணம் பூராம் யாரு கொண்டு போரானுக என்று தெரியவில்லை. இதை எல்லாம் ஒழித்து கட்டனும் என்றால் அர்ச்சனை செய்யாமல் சாமி மட்டும் கும்பிட்டு புட்டு வரவேண்டிதான். ஆனால் ஆண்கள் இப்படி செய்யா தயாராகி விடுவார்கள். ஆனால் நம்ம பெண்ஜாதிகள் இப்படி சாமி மட்டும் கும்பிட வருவார்களா?என்று சந்தேகமாக உள்ளது. அதனால் தான் இந்த கோவில் நிர்வாகம் நம்முடைய வீக் என்ன வென்று தெரிந்து கொண்டு இப்படி செய்யுராணுக. இதை தடுத்து நிறத்தணும் என்றால் மக்களா பார்த்து நிருத்தினால் ஒழிய மாற்ற முடியும். இல்லையேல் இவனுகள் மாசத்துக்கு,மாசம் அர்ச்சனை செய்யும் டிக்கெட்டின் விலையை கூட்டி விடுவானுகள். நம் மனிதர்களுக்கு அர்ச்சனை செய்யணும் என்ற ஒரு மூட நம்பிக்கையை செய்து காண்பித்து விட்டார்கள் நம்ம முன்னோர்கள்.அதை நாம் இன்னும் செய்து கொண்டு இருக்கிறோம்;;;;;;;;;;;;;;அதை இவனுகள் சாதகமாக பயன் படுத்தி இப்படி செய்யுறானுகள்;;;;;;;;;;;;;;;;;;;;தெய்வம் ஒன்றும் எனக்கு தேங்காய் உடை;;;;;;;;;;;;;பால் ஊத்து;;;;;;;;;கோழி வெட்டு இல்லை ஆடு வெட்டு என்று சொல்ல வில்லை;;;;;;;;;;;;;;;;;;;;;நம்ம மூட நம்பிக்கையால் இதை செய்து கொண்டு வருகிறோம்;;;;;;;;சாமி தரிசனத்தை நீங்க வீட்டில் செய்தலும் நல்ல பலன் கிடைக்கும்;;;;;;;;;;;;;;;;;;;;;;இவனுகளுக்கு நாம் பணத்தை கொடுத்து இந்த டிக்கெட் வாங்கி அர்ச்சனை செய்வதை காட்டிலும்;;;;;;;;;;;;;;;;;;;;;;நாம் கோவிலுக்கு சென்று பாவ பாட்ட ஏழைகளுக்கு ஒரு நேரம் வகுறார சோறு போட்டாலே போதும்;;;;;;;;;;;;;;;;;;;;;அதுவே நாம் தெய்வத்திற்கு செய்யும் கடமையாகும்;;;;;;;;;;;;;;;;இப்படி செய்தால் நம்மலை தெய்வம் வழி மேல் விழிவைத்து பார்த்துக் கொள்ளும்;;;;;;;;;;;;;;...
த.செல்வன் - திருநெல்வேலி,இந்தியா
2010-11-23 14:31:04 IST
ஹிந்து சமுதாயமே,தயவு செய்து யாரும் அர்ச்சனை செய்யாதிர்கள்,கோவில் உண்டியல்களில் காணிக்கை போடாதிர்கள். உங்கள் ஊரில் படிக்க கஷ்டப்படும் ஏழை ஹிந்து மாணவனுக்கு கல்விக்கான கட்டணம் செலுத்தி வாழ வையுங்கள்.கோவில்களில் செலுத்தும் எல்லா பணமும் ஹிந்துகளை முட்டாள் என சொல்லும் கருணாநிதி கைகளுக்கே செல்லும்.அரசாங்கத்தின் கைகளில் கோவில்கள் இருக்கும் வரை கோவிலுக்கு வெளியே நின்றோ கட்டணம் செலுத்தாத க்யுவில் நின்றோ சாமி கும்பிடுங்கள்.அர்ச்சனை,அபிசேகம் செய்தால் மட்டுமே சாமி தரிசனம் பூர்த்தியாகும் என்று நினைக்காதீர்கள்.மனதில் பக்தியோடு தரிசனம் செய்தால் அதுவே சிறந்தது. தவறு செய்கிறவன் தான் அர்ச்சனை அபிசேகம்,உண்டியல் காணிக்கை இடவேண்டும்.புண்ணியம் தேட நினைப்பவன் உண்மையான ஏழைக்கு உதவினால் போதும்.புண்ணியம் கிடைக்கும்....
sridhar - chennai,இந்தியா
2010-11-23 14:17:46 IST
கோயில் சொத்துக்கள் குத்தக்கைதாரர்களிடம் மற்றும் கடைகள் வாடகை மூலம் வசூல் பண்ணினாலே போதுமானது, எதற்கு கட்டணம் வசூல்...
அருண் - மங்க்லளூரு,இந்தியா
2010-11-23 14:17:26 IST
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிறிஸ்தவர்களுக்கு மானிய பள்ளிகள். ஆனல் ஹிந்துக்களுக்கு மட்டும் விலைவாசி உயர்வு. இதனை எல்லாம் தட்டி கேக்க மீண்டும் கடவுள் அவதாரம் எடுப்பார்...
இந்தியன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-11-23 14:04:38 IST
This goverment making temples as business place.I think kind of decisions will certainly spoil hinduism and their followers will surely think of alternaives.why these coward goverments are not interfering in mosques and churches.For every muslim goverment is giving 40000 RS for Hajj.Any hindu given such a amount for pilgrimage.our money is going to saudiarabia for no use.Everybody has to yhink about this....
nandha - லாகோஸ்nigeria,இந்தியா
2010-11-23 13:46:39 IST
கடவுளை மனமார வழிபட எதுக்கு டா இவ்ளோ பணம் கேக்குறிங்க??? எந்த மாதிரி வடமாநிலங்களில் மட்டும் தான் நடக்கும், எப்போ தமிழ்நாட்ல கூடவா??...
uthiran - chennai,இந்தியா
2010-11-23 13:44:01 IST
A humble request to devotees and hindus who are going to temple regularly. Try to avoid using special darshan queues as much as possible. If you want to have peaceful darshan, go to the temple during lesser crowded periods - like evening / morning time of week days (There is a custom nowadays that visiting Shri Vishnu temples during saturdays. There is no mention in Vedas or Sastras that saturday is an auspicious day for darshan in Shri Vishnu temples). Try to go to lesser crowded yet powerful temples which may be little far away from your city. Dont pay money in Hundis as it is never spent for the temple or devotees welfare. Even for temple renovation work, government is trying to collect money from donors; hundi money is never spent for those activities. After all, while casting the vote in the next election, keep in your mind about this government's harassment level to the hindus and devotees; teach an unforgettable lesson to this government and DMK party....
கார்த்திக் - பெங்களூர்,இந்தியா
2010-11-23 13:07:36 IST
அட பாவிங்கள கோடி கோடியாக ஹிந்து பணத்த வாங்கி ஹிந்துக்களுக்கு நல்லதா பண்ணாமா எல்லா ஆளுகளுக்கும் செலவு செய்றீங்கள.. இருடி ...இனிமே DIRECT அஹ சாமிக்கு போட்டு விடுகிறேன். அல்லது HINDU முன்னணி அல்லது நல்ல இயக்கத்துக்கு போடுறேன்..ஹிந்து இஸ் ஆல்வய்ஸ் ILLICHA வாய்.......
sathyan - tirupur,இந்தியா
2010-11-23 13:06:08 IST
பாவம் அரசாங்கம். மிகவும் நிதி நெருக்கடியில் உள்ளது .பின் அதை ஈடுகட்ட சாமி பெயரை சொல்லி கொள்ளை அடிக்கிறார்கள்.பின்னர் எப்படி இலவசங்களை வாரி இறைக்க முடியும். கோவில்களில் அர்ச்சனைக்கு கட்டணம் மற்றும் காணிக்கை செலுத்த உண்டியல் உள்ளது .பின் எதற்காக தட்டுக் காசு பிச்சை போல் வசூலிக்கபடுகிறது,,ஏனென்றால் தட்டில் காசு போடவில்லை என்றால் எதோ பிச்சைகாரனுக்கு போடுவது போல விபூதியை அள்ளி போடுவார் அந்த அர்ச்சகர்.தட்டில் 10 ரூ அல்லது 100 ரூ போட்டு பாருங்கள். சாமிக்கு நடக்க வேண்டிய மரியாதையை மற்றும் சாமிக்கு செலுத்திய மாலை உங்கள் கழுத்தை தேடி வரும் ....
சூர்யா - டெல்லி,இந்தியா
2010-11-23 12:53:22 IST
சர்ச்ல போய் சட்டம் போட வேண்டியதுதானே ! ஹிந்துக்களுக்கு மட்டும் ஏன் துறை ?? ஹிந்து அற நிலைய துறைய தூக்க வேண்டியதுதானே ! உனக்குதான் சாமி இல்லேயே !...
பட்டாசுபாலு - சென்னை,இந்தியா
2010-11-23 12:03:06 IST
மு க என்ன நினைகிறார்னா கட்டணத்த உயர்த்தி உயர்த்தி கோவிலுக்கு யாரும் வராமல் கோவிலை மூடிவிட்டு அங்கேயும் டாஸ்மாக் கடைகளை திறந்து விடலாம் என நினைக்கிறார் போலும். கோவில்களை நம்பி வாழ்பவர்கள் பிராமணர்கள். அவர்கள் நல்வாழ்வு மு க விற்கு பிடிக்காது. இதோடு அவர்கள் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோசப்பட்டு கொள்வார். அதோடு இந்துக்களும் கடவுள் பக்க்தியை மறந்து மு க வுடன் சேர்ந்து தி க ஆகி விடுவார்கள் என கனவு காண்கிறார்...
இந்தியன் - பெங்களூர்,இந்தியா
2010-11-23 12:00:22 IST
இதற்கு காரணம் மக்கள் கோவிலுக்கு செல்லும் சக்தி அதிகரித்துள்ளது........
மு.அசோக் kumar - Quatrebornes,மொரிஷியஸ்
2010-11-23 11:53:14 IST
மு.அசோக்குமார், Mauritius . கட்டணம் பத்து அல்லது இருபது சதவீதம் இருந்தால் நியாயம். இப்படி நூறு சதவீதம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?. அப்படி ஏற்றினால் என்ன இந்த ஊர்களுக்கு செல்லும் சாலை, இரயில் மற்றும் இதர வசதிகள் அதிகரிக்க செய்ய போகிறர்கள? மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொள்ள vendaam....
வெள் விஷேர் - இந்தியா,இந்தியா
2010-11-23 11:48:41 IST
அய்யா கருணாநிதி, நீங்கள் அடித்த கொள்ளை போதாதா. ஏன் எழை வயற்றில் அடிக்கீர்கள்.அறநிலை மந்திரி உங்களுக்கு ஏதாவது கமிஷன் தருகிறாரா. உங்களுக்கு கடவுள், பிராமின், முந்தன்கிய வகுப்பு ஆட்களை கண்டால் புடிக்காது. பின் எதற்காக இந்த உயர்வு. முடிந்தால் உங்கள் குடும்ப சொத்தில் இருந்து மான்யம் கொடுக்கவும்...
ராமஸ்வாமி S - CHENNAI,இந்தியா
2010-11-23 11:47:39 IST
GOVT SHOULD IMMEDIATELY WITHDRAW THE PRICE HIKE IN ARCHANI AND ABISHKARM. THE POOR PEOPLE WILL SUFFER LIKE ANY THING. SIVAN SOTTHU KULA NAZAM THE PROVERB WILL COME FOR THE CONCLUSION. OUR BELOVED CM SHOULD INTERFERE AND DO JUSTICE...
முருகன் - சென்னை,இந்தியா
2010-11-23 11:41:00 IST
ஏன் கோயிலில் அர்ச்சகர் அர்ச்சனை செய்ய வேண்டும், நீங்களே செய்யலாமே, உங்கள் பெயர், நட்சத்திரம் கூறி அச்டோதிர மந்திரம் ஜெபித்து, உங்கள் வேண்டுதலை மானசீகமாக உண்மை உன்போடு வேண்டுங்கள். உங்களை விட உங்களுக்காக தீவிரமாக வேண்டுபவர் யார் உளர். இப்போது பல கோயில்களும் வியாபார ஸ்தலமாகவே உள்ளது. இதே கருணாநிதி தான் பராசக்தியில், வீர வசனம் எழுதினார், கோயில்கள் வியாபார கூடாரம் ஆக கூடாது என்று, இவர் ஆட்சியில் தான் இந்த அட்டகாசங்கள் எல்லாம் நடக்கிறது. பல கோயில் பூசாரிகளும் வியாபாரிகளாகி விட்டனர், ஆகவே அவர்களை கொண்டு அர்ச்சனை செய்யும் அவசியம் இல்லை. நீங்களே பயபக்தியுடன் கோயில் உள்ளே இறைவன் திருமுன் நின்று அர்ச்சனை செய்யுங்கள். ஜெய் ஹிந்த்!...
பிரசாத் - சென்னை,இந்தியா
2010-11-23 11:07:03 IST
is there any Govt organization for Other religious institutions like HRCE?...
subramanian - salem,இந்தியா
2010-11-23 10:51:20 IST
இந்த ஒரு செயலுக்க்காகவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்....
ponvignesh - chennai,இந்தியா
2010-11-23 10:45:01 IST
நாலு மாசந்தானே இருக்குது ! அள்ளுங்க, அள்ளுங்க!...
மர்.Public - chennai,இந்தியா
2010-11-23 10:01:32 IST
டாஸ்மாக் ரூபாய் + கோவில் உண்டியல் பணம் =இலவசம். கோவில் பணம் எடுக்க பெரியார் ,அண்ணாதுரை கொள்கை எதுவும் கிடையாடு கருணாநிதிக்கு ....
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-11-23 09:01:27 IST
கோயிலுக்கு ஏன் போறீங்க. வீட்டுலே சாமி கும்பிடு...
Balu - chennai,இந்தியா
2010-11-23 08:42:06 IST
ஏன் இந்த கட்டண ஏற்றம்? அப்படியானால் கோவில் வருமானம் அனைத்தும் ஹிந்துக்களுக்கு மட்டுமே பயன் படுத்த அரசு தயாரா?, எங்க காச வங்கி தின்னுட்டு எங்களையே திட்டுவாங்க...
க. ஜெயவேலு - மதுரை,இந்தியா
2010-11-23 08:33:35 IST
கோயில் நிலங்கள், கடைகள் வாடகைகள் சரியான முறையில் வசூலிக்கப்பட்டாலே கோயிலில் பிற கட்டணங்கள் இல்லாமல் பூஜை நடத்தலாம். அதன் வாடகை நிர்ணயம் பார்த்தால் மற்றொரு ஸ்பெக்ட்ரம் மாதிரி இருக்கும். அந்தந்த பகுதிகளில் வெளியில் நிலவும் நிலவரப்படி வாடகை நிர்ணயம் செய்து அதை சரியாக வசூல் செய்து பாருங்கள். வருமானம் எங்கு போய் நிற்கும் என்று. ஆனால் இதெல்லாம் அனாவசியம். இப்போதெல்லாம் எந்த கோயிலிலுமே தேங்காயை சாமிக்கு முன் உடைப்பதுமில்லை, படிப்பதுமில்லை. பின் எதற்கு அர்ச்சனை எல்லாம். அர்ச்சனை தட்டை கொடுத்துவிட்டு பின்னால் நிற்பவரிடம் அர்ச்சனை வாங்குவதை விட நேராக சென்றோமா சாமி கும்பிட்டோமா வந்தோமா என்று இருந்து பாருங்கள். அப்புறம் இந்த கட்டணம் எல்லாம் தானாக இறங்கும். நான் முன்பெல்லாம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாக விழாவின் போது முதல் நபராக சென்று முதல் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் காண்பது வழக்கம். அப்போது பொது தரிஷனம் கட்டண தரிஷனம் ஒரே மாதிரி இருக்கும். தற்போது அங்குள்ள கட்டு(ட)பாடுகளை பார்த்தபின் வெளியில் நின்றே சாமியை மனதார கும்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்....
ராஜ்குமார் - திருநெல்வேலி,இந்தியா
2010-11-23 05:27:42 IST
இளிச்சவாயன் ஹிந்து தானே - நல்லா ஏம்மாதுங்க...
Hindu - Chennai,இந்தியா
2010-11-23 05:17:53 IST
உண்டியலில் போடும் பணத்தை இலவசங்களுக்கும் அரசின் வெட்டி செல்லாவிற்கும் செலவிடுவது பின்பு மேலும் கட்டணம் உயர்த்துவது .. கிரேட் கருணாநிதி. Hindus - dont drop money in hundi .. Spend them directly for temple works and give the money to good hindu organisations.. Government will automatically get away from temples where they cant squander money....
ராம் - இந்தியா,இந்தியா
2010-11-23 00:54:48 IST
உண்டியல் காசுக்கு கணக்கு எங்கே ? அவ்வளவும் கோவிலுக்கா செலவிடுகிரிர்கள் ?...
அஜய்குமார் - ஆஸ்டின்,யூ.எஸ்.ஏ
2010-11-23 00:48:08 IST

கருத்துகள் இல்லை: