வியாழன், 25 நவம்பர், 2010

புலிகளின் ‘சீறோ வன்பேஸ்’ வதை முகாம் கண்டுபிடிப்பு


26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் முல்லைத்தீவில் தோண்டி எடுப்பு
புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார். தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின்சீறோ வன்பேஸ்என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது.
புலிகளுக்கு எதிரானவர்களையும், பிடிக்கப்படும் படை வீரர்களையும் இந்த முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்து கொல்வதற்கே இந்த முகாம் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது அங்கு நடத்தப்பட்ட தேடுதல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இராணுவம், கடற்படை வீரர்களின் எலும்புக் கூடுகளே நேற்றும் நேற்று முன்தினமும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேலும் கூறினார். புலிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஐ. பி. ஜெயரட்ணமும் இங்கு தான் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை கொழும்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: