குழந்தை ஒன்றின் முதுகில் காலால் மிதித்து புதுவிதமான வைத்தியம் செய்ததால் அக்குழந்தை மரணமான சம்பவமொன்று கேகாலை மாவட்டம் வரக்காபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இருதய நோயால் அவதிப்பட்ட 1வருடமும் 8மாதங்களும் வயதுடைய குழந்தையொன்றுக்கு வைத்திய சிகிச்சை பெறும்பொருட்டு அக்குழந்தையின் பெற்றோர் பௌத்த பிக்கு ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர். அப்போது வரக்காபொல துல்ஹரிய பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரின் பெயரைக் கூறி அவரிடம் சென்று சிகிச்சை பெறுமாறு பௌத்த பிக்கு பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனையடுத்து உரிய வைத்தியரிடம் குறிப்பிட்ட குழந்தையின் பெற்றோர் குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். வைத்தியரிடம் குழந்தையை ஒப்படைத்த பின் அவ்வைத்தியர் குழந்தையின் முதுகில் காலால் மிதித்து ஏதோ புதுமுறையில் வைத்தியம் செய்துள்ளார். இதனையடுத்து குழந்தை நினைவிழந்துள்ளது. இதையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குழந்தை மரணமாகியுள்ளது. இக்குழந்தையின் பெற்றோர் வழங்கிய வாக்குமூலத்தையடுத்து மேற்படி வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக