பத்து ஆண்டுகளுக்கு பின் மியர்மர் எதிர்க்கட்சி தலைவி ஆங் சாங் சூகி தனது மகனை சந்தித்தார்.ஆங் சாங் சூகி (65) இராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்பட்டதால் 20 ஆண்டுகள் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தார். எனவே அவரை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன் ஆங் சாங் சூகி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரது 2ஆவது மகன் கிம் ஆரிஸ் (33) பாங்கொக் நகரில் தங்கியுள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயார் சூகியைச் சந்தித்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டதை அறிந்து, தனது தாயை நேரில் சந்திக்க மியான்மர் அரசிடம் விருப்பம் தெரிவித்தார்.
அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு பாங்கொக்கில் உள்ள மியான்மர் தூதரகம் விசா வழங்கியது. அவர் இன்று காலை விமானம் மூலம் யன்கூன் வந்து சேர்ந்தார்.விமானத்தில் இருந்து இறங்கிய அவர் தன்னைச் சந்திக்க அங்கு காத்திருந்த தனது தாயார் ஆங் சாங் சூகியைக் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் வடித்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு தாயும் மகனும் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர்.நெகிழ்ச்சியான இச்சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக