வெள்ளி, 26 நவம்பர், 2010

முறிகண்டி பிள்ளையார் கோவில் விவகாரம்;

 ஜனவரியில் விசாரணை
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்  பலவந்தமாகப் பெற்றுக்கொண்ட கோவிலை  தன்னிடமே தருமாறு கோரிக்கை
முறிகண்டி பிள்ளையார் கோவிலை பரம்பரை தர்மகர்த்தாவிடம் ஒப்படைக்கக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது. ஏ – 9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கொவிலின் முன்னாள் தர்மகர்த்தா மணிவண்ணன், கோலியின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அதனை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்து கலாசார விவகார திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் தனது சொத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு வேண்டியே நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தன்னிடமிருந்து குறித்த கோவிலை பலவந்தமாகப் பெற்றுக்கொண்டதால் அதன் பின்னர் தான் இந்தியாவுக்குச் சென்றதாகவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  விடுதலைப் புலிகள் இயக்கம் தோல்வியடைந்த நிலையில் மேற்படி கோவிலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென உரிய அதிகாரிகளிடம் கோரிய போதிலும் அதனால் எவ்விதப் பயனும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த கோவிலுக்குச் சேரவேண்டிய பணம் இந்து கலாசார விவகார திணைக்கள பணிப்பாளர் மேற்பார்வையில் கொழும்புக்கு அனுப்பப்படுவதாகவும் முன்னாள் தர்மகார்த்தா தனது மனுவில் மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: