இதற்கிடையில் நேற்று இந்த சாக்சி டி.வி.,யில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து பரிமாற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தில் காங்கிரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ராகுலின் அணுகுமுறையின் நுணுக்கத்தில் உள்ள குறையே . ராகுலின் வழிகாட்டுதல் சரி இல்லை. இவரது பிரசாரத்திற்கு ஆதரவு இல்லை. இவர் ஒரு சக்தியற்றவராகவே கருதப்படுகிறார் என்றும் விமர்சித்தது. இந்த பிரச்னை காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன்மோகன் கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என மத்திய அமைச்சரும் மாநில மூத்த தலைவருமான ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார். அவரது டி. வி., நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் உள்ளது. இவரது தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் நம்பி்க்கை ஸ்திரமாக இருந்தவர் ஆனால் அவரது மகன் போக்கு வேறு விதமாக இருக்கிறது. இவர் மீது எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் இருக்கும் என்றார்.
டில்லியில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி : இந்நிலையில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற கிரண்குமார் ரெட்டி டில்லி சென்றுள்ளார். அங்கு அவர் காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார். யார், யாரை அமைச்சராக நியமிக்கலாம், என்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கிறார்.
ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை: ஆந்திராவில் ராஜ சேகர ரெட்டி மறைவுக்கு பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராகவோ அல்லது மத்திய அமைச்சராகவே நியமிக்கப்படலாம் என்ற அவரது ஆதரவாளர்களின் கனவு வீண் ஆகிப்போனது. இதனையடுத்து தந்தை மறைவு காரணமாக அதிர்ச்சியில் இறந்த குடும்பத்தினரை சந்திக்க செல்வதாக யாத்திரை புறப்பட்டார்.
இதுவும் காங்கிரசுக்கு ஜெகன் மீது அதிருப்தியை அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோனையும் நடத்தியுள்ளார் ஜெகன். இந்நிலையில் இவரது டி.வி.,க்க்ள் நடத்தும் நிகழ்ச்சியால் ஜெகன் மீது எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கலாம், இதனால் கட்சிக்கு இழப்பு இருக்குமா என்றும் காங்., உயர்மட்ட தலைவர்கள் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.
நா.ஜெயகுமார். - PONDICHERRY,இந்தியா
2010-11-27 15:54:58 IST
இது தான் உண்மை. ஜகன் அவர்களே உங்களை போல ஆட்கள் தான் பிஜேபி க்கு தேவை. அப்போ தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். எதுவாக இருந்தாலும் நல்ல முடிவாக எடுப்பீர்கள் என நம்புகிறோம்...
மு.கோபால் - கரூர்,இந்தியா
2010-11-27 15:46:12 IST
முதல்ல ராகுல் காந்தி மாதிரி வாரிசு கோட்டால வர்ற அரசியல் வாதிகளை ஒதுக்கி தள்ளிட்டு உண்மையா மக்களுக்காக உழைக்கிறவங்கள கண்டு பிடிங்கப்பா. காமராஜர் இருந்த கட்சில இப்போ கழிசடைகளா இருக்கு வெட்ககேடு...
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-27 14:20:01 IST
இவரு சொல்வது ஒரு பக்கம் உண்மை தான்;;;;...
raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-27 14:15:19 IST
இந்த இத்துப்போன ராகுல் காந்தியால் ஒன்றும் ... கூட முடியாது, என்பதை அனைவரும் அறிவார்கள். அதனை சாக்ஷி தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் நமது காங்கிரஸ் கட்சி டமால் தான்....
ebenezer - chennai,இந்தியா
2010-11-27 13:48:06 IST
தம்பி ஜெகன், செய்வதை நன்றாக செய். இந்திய காங்கிரஸ் தலைவர்களில் நீ ஒருத்தன் தான் சுத்த ஆண் பிள்ளையாக இருக்கிறாய். உன்னை பெற்ற தாயை கடவுள் ஆசிர்வதிப்பாராக. எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து காமராஜர் தமிழ்நாட்டை நல்ல கண்ட்ரோல் ல் வைத்திருந்தார். இந்த நன்றி கெட்ட ராகுலின் பாட்டி இந்திராகாந்தியின் சுயனத்தால் தூக்கி எறியப்பட்டு அவமானப்படுத்தபட்டார். அதோடு தமிழ்நாட்டில் அழிந்தது காங்கிரஸ். உன் அப்பா, அதேபோல் ஆந்திராவில் காங்கிரஸ் சை நன்றாக வளர்த்து வந்தார். உனக்கு இருக்கும் பிடியை விட்டுகொடுக்காதே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ நாட்கள் எண்ணப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூட்டு குழு விசாரணைக்கு போனால் சோனியாவின் ஊழல் வெளி வந்துவிடும். அதோடு முடிந்தது காங்கிரஸ். சோனியா குடும்பமும் எங்கே ஒடபோகுதோ தெரியவில்லை. அடுத்தது பி ஜே பி ஆட்சி தான்....
பிரபு - மதுரை,இந்தியா
2010-11-27 13:30:34 IST
இது மன்னர் ஆட்சி அல்ல, ராஜசேகர ரெட்டி ஆந்திர மக்களின் ஏகோபித்த ஆதரவோடும், அரசியல் முதிர்ச்சியோடும் செயல்பட்ட தலைவர். அவரோட வாரிசு என்பதால் மட்டுமே மக்களின் ஆதரவு வந்து விடாது. தந்தையே இழந்து நிற்கிற தனயன் endr...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக