சனி, 9 செப்டம்பர், 2023

ஜி20 மாநாடு விருந்து: டெல்லி சென்றார் முதல்வர் ஸ்டாலின்

மின்னம்பலம்  - மோனிஷா :ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
ஆண்டுதோறும் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும் நாளையும் மாநாடு நடைபெறுகிறது.
ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.
தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜி20 மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.

மொராக்கோ நிலநடுக்கம்: 600-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு – நள்ளிரவில் நடந்தது என்ன?

BBC  : வட ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 632 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக 296 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

சந்திரபாபு நாயுடு கைது .. ஆந்திரா முன்னாள் முதல்வர்!

மாலை மலர் :  தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என முன்னதாக தெரிவித்திருந்தார்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதாக தகவல்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிஐடி அதிகாரிகள் கைது வாரண்டுக்கான உத்தரவை அவரிடம் வழங்கினர்.
 முன்னதாக, நான் தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரிகா பண்டாரநாயக்க : அதிபர் ரணில் விக்கிரமசிங்கா நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினார் ஆனால் ஊழல்வாதிகளை தண்டிக்க முடியாமல் இருக்கிறீர்

ceylonmirror.net :  “அடுத்த அரகலய நிம்மதியாக இருக்காது. அது இரத்த வெள்ளமாக இருக்கும். மக்களின் கோபத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.”
இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
சிங்களத் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சப்பாத்தாக நான் இருந்திருந்தால்கூட பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டிருப்பேன். தோல்விப் பயம் காரணமாக ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்குச் செல்லவில்லை.
நாட்டின் வீழ்ச்சியை ரணில் விக்கிரமசிங்கவால் விரைவாகத் தடுத்து நிறுத்த முடிந்தது. ஆனால், ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அவரால் முன்னேற முடியவில்லை.

குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி? 1972-ம் வருடம்.- அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி

 Arul Selvam  :     குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே....
அது 1972-ம் வருடம்..கலைஞர் இரண்டாம்முறை முதலமைச்சரான காலம்..
அரசு அலுவலகங்கள் முழுதும் அவாக்கள் நிரம்பி வழிந்த நேரம்...
அரசு வேலைக்கு,
TNPSC ரெக்ரூட்மன்ட் என
ஒன்றிருப்பது கூட OBC,BC,SC மாணவர்கள் அறியாத காலமது...
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்,
அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..டிவிஷனல் அக்கௌன்ட்டன்ட் சேஷாத்திரி, சூப்பிரண்டண்ட் ஸ்ரீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன், கிளார்க் பரந்தாமன்
இப்படிப்போகும் லிஸ்ட்..
கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ செல்வராசாகவோ இருப்பதுவே பெரிய விஷயம்..

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

பெண்களை பற்றி மனுஸ்மிருதி கூறுவது என்ன? அதிர்ச்சி அடையாதீர்கள்!.

Jeyarani Mayilvahanan  : பெண்களை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது? . இது
சாம்பிள் மட்டுமே...இதை விட மோசமான, ஆபாசமான சரக்கு் இந்து மதம் முழுக்கக் கொட்டிக் கிடக்கிறது. என்னுடைய கண்ணியம் கருதி சிலவற்றை மட்டும் பதிவிடுகிறேன்.
1. மனுஸ்மிருதி
மனு 2.213 இல், ''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்"25
மனு 2.214 இல், ''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்"25
மனு 2.215 இல், ''தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்"25
மனு 9.14 இல், ''பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்" என்கிறார்,
மனு 9.15 இல், ''ஆடவருடன் உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்"

பிரிட்டிஷார் Vs பிராமணர்கள் .. ஒரு பிராமணன், காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்!

 தினமணி* *கட்டுரை -2007::   பிரிட்டிஷார்   Vs  பிராமணர்கள்
*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*
 *சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*
 *வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*
 *சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
* *பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,**
 * பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*
*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*
 *1773 ஆம் ஆண்டு முதல் பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*
*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*
*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*
 *வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.*
*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*
* வெள்ளையரால்  வெளியிடப்பட்டது.*

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு!

மாலைமலர் : 7 தொகுதி இடைத்தேர்தல் முடிவு- அதிக வெற்றிகளை குவித்த "இந்தியா" கூட்டணி
ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஏழு தொகுதிகளில் "இந்தியா கூட்டணி" பெரும்பாலான தொகுதிகளில் வெற்றியை குவித்துள்ளது.

நடிகர் மாரிமுத்து காலமானார்! மாரிமுத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

 tamil.oneindia.com - Velmurugan P : சென்னை:  இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துக்கு இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது, படபடப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தவருக்கு போகும் வழியிலேயே நெஞ்சுவலி அதிகமாகி உள்ளது.
இந்நிலையில் ஒரு வழியாக மருத்துவமனை சென்றவர் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இன்று காலை 8.30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Tamil Nadu CM MK Stalin has condoled demise of director and actor Marimuthu

G 20 மாநாட்டுக்காக டெல்லி குடிசைகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் அதிகாரிகள்

 G 20 மாநாட்டுக்காக டெல்லி குடிசைகளை புல்டோசர்களைக் கொண்டு இடிக்கும் அதிகாரிகள்;அழும் பெண்மணி-காண்போரை கண்கலங்க வைக்கும் காட்சி

நடிகை மகாலக்ஷ்மியின் கணவர் Libra ரவீந்திரன் அதிரடி கைது! 16 கோடி மோசடி செய்தது நிரூபணம்!

tamil.asianetnews.com - manimegalai a : பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் கணவரும், தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 தயாரிப்பாளர் ராவீந்திரன் திடக்கழிவுகளை, ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு, மோசடி செய்து ஏமாற்றிய தொடரப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் (மாதவா மீடியா பிரைவேட் லிமிடெட்) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு 'லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர்  சந்திரசேகர் என்பவர், தனக்கு அறிமுகமாகி, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும்,

தயாநிதி மாறன் வாரிசுகள்.. கரண், திவ்யா துவங்கிய புதிய நிறுவனம்.. sneaker customization platform K-KIX

tamil.goodreturns.in - Prasanna Venkatesh  : நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதல் தீவிர அரசியலில் இருக்கும் காரணத்தால் அவருடைய மூத்த சகோதரர் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் போல் வர்த்தக துறையில் இல்லை. ஆனால் தயாநிதி மாறனின் வாரிசுகள் இளம் வயதிலேயே ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
இதன் மூலம் தயாநிதி மாறன் வாரிசுகள் கரண், திவ்யா வர்த்தக துறைக்குள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளனர். இவர்கள் துவங்கிய வர்த்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஒரு டிரெண்டியான வர்த்தகமாகும்.
நிவேதிதா அரவிந்த் (25 வயது), திவ்யா தயாநிதி மாறன் (22 வயது) மற்றும் கரண் தயாநிதி மாறன் (19 வயது) ஆகியோர் இணைந்து உருவாக்கிய பிராண்ட் தான் Kkix. இந்த நிறுவனம் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகும், Kkix ஒரு ஸ்னீக்கர் ஷூ கஸ்டமைஸ் சேவையை வழங்குகிறது.

வியாழன், 7 செப்டம்பர், 2023

தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள்- இராசராச சோழன் காலத்தில்.. ஏனைய கோயில்களில் எத்தனையோ?


  Chinniah Kasi
    தேவதாசி !  20-ம் நூற்றாண்டு தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.
கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும்.
45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது.
 இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது.
முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார்.
சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார், கோவிந்த ராகவய்யர், ஷேசகிரி அய்யர், மு. வ. ராமநாத அய்யர் எனும் பார்ப்பன அணி இதை எதிர்த்தனர்.

ராஜகோபாலச்சாரி ஏன் ஜி ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை புறந்தள்ளினார்?

ராதா மனோகர் :  மதராஸ் மாகாண முதலமைச்சர் ராஜகோபாலச்சாரி   திரு  .ஜி ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை  ஏன்  புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு சவால் விட்ட  இடதுசாரிகளின் வரலாறு  ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில்  பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல்  சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress  ஒரு அரசியல் கட்சியாக உருவானது
இதுதான் இலங்கையில் உருவான  முதல்  அரசியல் கட்சியாகும்.
இதன் நிறுவன தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் பணியாற்றினார்
அக்டோபர் 1920 இல் நடந்த முதலாவது கூட்டத்தில் சர் ஜேம்ஸ் பீரிஸ் இதன்  தலைவராக  தெரிவு செய்யப்பட்டார்,
இவருக்கு பின்பு தொடர்ந்து எப்.ஆர். சேனநாயக்க,
 டி.எஸ் சேனநாயக்க,  டி.பி.ஜயதிலக, ஈ.டபிள்யூ பெரேரா, சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர, பட்ரிக்
டி சில்வா குலரத்ன, எச்.டபிள்யூ.அமரசூரிய, டபிள்யூ.ஏ.டி.சில்வா, ஜோர்ஜ் ஈ.டி.சில்வா மற்றும் எட்வின் விஜேயரத்ன ஆகியோர் தொடர்ந்து  தலைவர்களாக பணியாற்றினார்கள்..
1943 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் மெதுவான போக்கை விமர்சித்து பூரண சுதந்திரத்திற்கான தேவை இருப்பதாக திரு டி எஸ் சேனநாயக்க கருதி   இலங்கை தேசிய காங்கிரசில்  இருந்து பிரிந்த ஏனைய பல தலைவர்களோடு   டி எஸ்
சேனநாயக்க தலைமையில்  ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள்.

ரூ.7.50 லட்சம் கோடி ஊழலை திசை திருப்ப காற்றில் சனாதன கம்பு சுற்றும் பாஜக" : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Kalaignar Seithigal  - Lenin  : தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த மாவட்டச் செயலாளர் சகோதரர் ராஜா, மாவட்டப் பொறுப்பாளர் அண்ணன் ஜெயபாலன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இளைஞர் அணி துணைச் செயலாளர் சகோதரர் ஜி.பி.ராஜா, கூட்டத்துக்கு இளைஞர்களைத் திரட்டி, நிதி வழங்கிய மாவட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்பும் வாழ்த்தும். மாவட்ட ஆய்வுப் பணிகளை ஒருங்கிணைத்த சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் செயலாளர் மருத்துவர் தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் நன்றி.

தைவான் அதிபர் தேர்தலில் போட்டி போடும் தொழிலதிபர்.. இந்தியாவிலும் ஒரு தொழிலதிபர் பிரதமராக முடியுமா.?

 tamil.goodreturns.in - Prasanna Venkatesh  : சீனா உடனான பிரச்சனைக்கு மத்தியில் தைவான் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்தச் சேர்தல் பல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாகவும் அமையலாம், அல்லது சீனா - தைவான் மத்தியிலான பிரச்சனையை மேலும் விரிவாக்க கூடும், காரணம் தைவான் நாட்டின் அரசியல் களம் அப்படிப்பட்டது.
தைவான் நாட்டில் 2 பிரதான அரசியல் கட்சிகள் உள்ளது. கோமின்டாங் (Kuomintang), சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவை, அதேபோல் சினாவின் கொள்கைகளுக்கு அப்படியே ஒப்புக்கொள்ளும் கட்சி. இந்தக் கட்சிக்கு Nationalist Party of China (NPC) or Chinese Nationalist Party (CNP) என்ற பெயர்களும் உள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டி போடும் தொழிலதிபர்.. இன்று தைவான் நாளை இந்தியாவா..?
அடுத்த கட்சி தைவான் நாட்டின் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்தைப் பரவலாக ஆதரிக்கும் ஜனநாயக முற்போக்குக் கட்சி அதாவது Democratic Progressive Party (DPP). தற்போது Tsai Ing-wen தலைமையிலான ஆட்சி ஜனநாயக முற்போக்குக் கட்சி உடையது.

விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக வாக்குமூலம்! மருத்துவ பரிசோதனை

மாலைமலர் : சென்னை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் மீது அடுத்தடுத்து போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக போலீஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடந்தது என்ன? என்பது பற்றி விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்திருந்தார்.

சனாதன தர்மம் எல்லா மக்களுக்கும் உரியது அல்ல.. அதில் பெண்களுக்கு உரிமை ஏதும் இல்லை, சூத்திரர்கள் அடிமைகள்,,,,

May be an image of temple and text that says 'சனாதனம் பெண்கள் சூத்திரர் சாதியற்றவர்களுக்கு எதிரானது! சனாதன தர்மம் என்பது பொதுவானதல்ல, அது எல்லா மக்களுக்கும் உரியது அல்ல. அது குறிப்பாக ஆரிய வேத வைதீகர்களுக்கான தர்மம் அல்லது வாழ்க்கை முறை. இதைத் தவறாக மற்றவர்களும் (சூத்திர பஞ்சம சண்டாளர்கள்) தமக்கானதாக கருதும் போதுதான் பிரச்சனை எழுகிறது. சனாதனம் என்பது இரு பிறப்பாளர்களான வைதீகர்களுக்கு மட்டுமே உரியது. அதில் இருபிறப்பாளர்களான பிராம்மண, கூத்திரிய, ய,வைசியர்களின் நலன்களுக்கு மட்டுமே இடமுண்டு,மற்றவர்களுக்கு துளியும் அதில் இடமில்லை.'

Dhinakaran Chelliah : சனாதன தர்மம் என்பது பொதுவானதல்ல,
அது எல்லா மக்களுக்கும் உரியது அல்ல.
அது குறிப்பாக ஆரிய வேத வைதீகர்களுக்கான தர்மம் அல்லது வாழ்க்கை முறை.
இதைத் தவறாக மற்றவர்களும் (சூத்திர பஞ்சம சண்டாளர்கள்) தமக்கானதாக கருதும் போதுதான் பிரச்சனை எழுகிறது.
சனாதனம் என்பது இரு பிறப்பாளர்களான வைதீகர்களுக்கு மட்டுமே உரியது.
அதில் இருபிறப்பாளர்களான பிராம்மண,க்ஷத்திரிய,வைசியர்களின் நலன்களுக்கு மட்டுமே இடமுண்டு,
மற்றவர்களுக்கு துளியும் அதில் இடமில்லை.
சனாதன நூல்கள் அனைத்தும் சூத்திரர்கள்,சண்டாளர்கள்,
பஞ்சமர்களை, புலையர்களை,அவர்ணர்களை இழிவாகவும் எதிரிகளாகவுமே கருதுகின்றன.

உச்சகட்ட கோபத்தில் உதயநிதி... மாற்றப்படும் மாவட்டங்கள்?

மின்னம்பலம் - Aara  :டிஜிட்டல் திண்ணை: உச்சகட்ட கோபத்தில் உதயநிதி… மாற்றப்படும் மாவட்டங்கள்?
வைஃபை ஆன் செய்ததும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு பிரத்யேக வீடியோ வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“செப்டம்பர் 4, 5 தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அரசு ஆய்வுக் கூட்டங்கள், இளைஞரணி மாநாட்டுக்கு ஆயத்தப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டங்கள் என அரசு, அரசியல் பயணமாகவே இதை அமைத்துக் கொண்டார் உதயநிதி.
தூத்துக்குடியில் தெற்கு, வடக்கு என இரு மாவட்டக் கழகங்களும் அதாவது அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் என இருவரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி வரும்போது வழக்கமாக இருக்கும் பெருங்கூட்டம் இல்லை.
அதனால் அப்செட் ஆனவர் தான் மட்டுமே பேசி விரைவாக நிகழ்ச்சியை முடிக்கத் திட்டமிட்டார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நூற்றுக்கணக்கான நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. ‘

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞர் உயிர் தியாகம் Man dies rescuing two children at waterfall

Mohananeethan Muruganantharajah smiling

jaffnamuslim.com  : பிரித்தானியாவில் அருவியில் குளித்துக்கொண்டிருந்த போது, நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வேல்ஸில் அமைந்துள்ள பிரேகான் பீக்கன்ஸ் அருவியில் நடந்துள்ளது.
மேலும் குறித்த சமபவத்தில் விமானியான 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவரெ இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர், குறித்த அருவியில் இரண்டு குழந்தைகளை உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார்.
பின்னர் குழந்தைகள் தண்ணீரிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட போதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார், ஏர் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

புதன், 6 செப்டம்பர், 2023

உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு

nakkheeran.in :தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான்.
இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.
டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார்.

பிரகாஷ் ராஜ் : பாரத் - யார் அந்த கோமாளி?

Prakash Raj j : Name the CLOWN who changes CLOTHS and tries to change his COUNTRY s name too .. for his ELECTION DRAMA மாலை மலர்  :   இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

உதயநிதியின் சனாதன டெங்கு விவகாரம் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் மோடி ஆலோசனை

தினமணி : புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கு இரு சொற்களில் "அளவுடன் எதிர்வினையாற்றுமாறு" பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் கூட்டத்தில்,  "வரலாற்றை ஆராயாமல், அரசியலமைப்பில் உள்ள உண்மை தகவலை பேசுங்கள். சனாதன சர்சைக்கு தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள்” என்று அமைச்சர்களிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக சந்தையில் இந்திய பொருட்களின் புகழ் பெற்ற அடையாளம் Brand Name இந்தியா என்பதுதான்

ராதா மனோகர்  :  வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன
நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.
சிலோன் டீ என்பது உலக புகழ் பெற்ற பிராண்ட் அடையாளம் Brand Name!
இன்றுவரை சிலோன் டீ என்றுதான் விளம்பர படுத்த வேண்டியுள்ளது
இல்லை இல்லை இது ஸ்ரீ லங்கா டீ என்று கூறிப்பாருங்கள் அது ஏதோவொரு  கண்டத்தில் இருக்கும் அட்ரஸ் இல்லாத நாடு என்று வாடிக்கையாளர்கள் கடந்து போய்விடுவார்கள்
இலங்கையின் உலகப்புகழ் பெற்ற ஒரே ஒரு பொருள் தேயிலைதான்
இந்தியா அப்படி இல்லையே?
எத்தனை பொருட்கள் உலக சந்தையில் இந்தியா என்ற அடையாளத்தோடு விற்கப்படுகிறது?
மிக பெறுமதி வாய்ந்த இந்தியா என்ற பிராண்ட் அடையாளத்தை பாரத் என்று மாற்றினால்,
இந்த பாரத்தை உலக சந்தையில் கொண்டு போய் சேர்க்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையோ தெரியாது.

சனாதனம்... கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?

Kanimozhi, Rahul Gandhi Speech at Parliament | Lok Sabha | VTV Tamil -  YouTube

  மின்னம்பலம் - Aara  :  திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய பேச்சு இந்தியா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்து, ’இந்துக்களுக்கு எதிரானது திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி’ என்று வட மாநிலங்களில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த அவதூறு பிரச்சாரத்தை எதிர்கொள்ள முடியாமல் காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் செப்டம்பர் 4 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து,
காங்கிரஸ் கட்சிக்கு எல்லா மதமும் சமம் தான். அனைவரது நம்பிக்கைகளையும் நாங்கள் மதிக்கிறோம்’ என்று விளக்கம் கொடுத்தார்.