மின்னம்பலம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் உடலில் இருந்து ஒன்பது ஊசிகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.மேற்கு வங்க மாநிலம் கிரிஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடும் தொண்டை வலி காரணமாகக் கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாய் பேச முடியாமல் இருந்த அந்தச் சிறுமியின் தொண்டைப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது தொண்டையில், உணவுக் குழாயைச் சுற்றிலும் ஒன்பது ஊசிகள் இருந்தன. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த ஊசிகளை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இதன் மூலமாக, அந்தச் சிறுமி பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டார்.



























