வியாழன், 2 ஆகஸ்ட், 2018

சிறுமியின் தொண்டைக்குள் ஒன்பது ஊசிகள் .. மந்திரவாதி கொடுமை ... மருத்துவர்கள் காப்பாற்றினர்


சிறுமியின் தொண்டைக்குள் 9 ஊசிகள்!மின்னம்பலம்: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் உடலில் இருந்து ஒன்பது ஊசிகளை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கிரிஷ்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடும் தொண்டை வலி காரணமாகக் கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று நில் ரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வாய் பேச முடியாமல் இருந்த அந்தச் சிறுமியின் தொண்டைப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது தொண்டையில், உணவுக் குழாயைச் சுற்றிலும் ஒன்பது ஊசிகள் இருந்தன. சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த ஊசிகளை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள். இதன் மூலமாக, அந்தச் சிறுமி பெரும் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

வடக்கு கர்நாடகாவை தனி மாநிலமாக ... கோரிக்கை வலுக்கிறது . பின்னணியில் பஜாக ...?

கர்நாடகாவை இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தி பந்த்!மின்னம்பலம்: கர்நாடகாவில் இருந்து வடக்கு கர்நாடகாவைப் பிரித்துத் தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி இன்று (ஆகஸ்ட் 2) பந்த் நடைபெறவுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி உள்ளார்.
ஜூலை 5ஆம் தேதி புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் வடக்கு கர்நாடகப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் வடகர்நாடகாவைத் தனி மாநிலமாக அறிவிக்ககோரி இன்று (ஆகஸ்ட் 2) போராட்டம் நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

பிகார் .. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற பட்டது மூன்று வயது ...

குழந்தை மீட்பு: நெகிழ்ச்சியில் ஊர்மக்கள்!
மின்னம்பலம்: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை ஒன்று 31 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாமலுள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் பொதுமக்கள் மூடாமல் அப்படியே விட்டுவிடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.
பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி மூன்று வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது.

தகவலறிந்த கோட்வாலி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளைக் கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மீண்டும் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ மாரடைப்பால் உயிரிழப்பு ஏ.கே.போஸ் ... அதிமுக எம் எல் ஏ

தினமலர்: மதுரை: திருப்பரங்குன்றம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மாரடைப்பால் காலமானார்.
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ். நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அவரை அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை போகும் வழியிலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஜீவா நகரில், அவரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
 இன்று மாலை மதுரை வரும் முதல்வர் பழனிசாமி, போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார். இவர் கடந்த 2006,2011, -ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறறார். கடந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் அவர் தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி

பட்ட பகலில் மதுரையில் ஒரு ஜாதிய படுகொலை .. ஊடகங்கள் மௌனம் .. தேவர் ஜாதி தலைவன் திருமாறனின் கொலவெறி ..

மணி அமுதன் மா.பா : பட்ட பகலில் சினிமாவை மிஞ்சும் அளவிற்க்கு
மதுரையில் ஒரு ஜாதிய படுகொலை நடந்துள்ளது.. தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது..
மதுரையில் இருக்கிற பெரும்பாலான முற்போக்கு அமைப்புகள் - புரட்சிகர அமைப்புகள் - ஆயுதம் தாங்கி போராடுவோம் என்றெல்லாம் பேசுகிற இயக்கங்கள் கூட இப்பிரச்சனையில் மெளம் சாதிப்பதேன்...
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் திருமாறனை கண்டு அவ்வளவு பயமா உங்களுக்கெல்லாம் அல்லது இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தனிப்பட்ட பிரச்சனை என நினைக்குறீங்களா ??
யார் வந்தாலும் வராவிட்டாலும் ஆர்எஸ்எஸ் ன் கைக்கூலியாக செயல்படுகிற தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியை அதன் தலைவன் ஜாதி வெறியன் திருமாறனை நான் அம்பலப்படுத்துவேன்.. எதிர்த்து நிற்பேன்..
தமிழக அரசே..
தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியை தடை செய்..
தம்பி சபரீஷனை கொலை செய்த ஜாதி வெறி மிருகங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கு..
ஜாதி கலவரங்களை தூண்டி விடுகிற வெறியன் திருமாறனை கைது செய்..
மணி அமுதன் :தென்னிந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியினரால் நடத்தப்பட்ட ஜாதிய படுகொலை கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பட்டூரில் தென்னினிந்திய பார்வர்ட் ப்ளாக் கொடி கம்பத்தை நட கரிகாலன் தலைமையில் குணபாலன் என்பவரால் முயற்சி மேற் கொள்ளப்பட்டது.
ஜாதி அமைப்புகளை அனுமதிக்க மாட்டோம் என்று படுகொலை செய்யப்பட்ட சபரீஸ்வரன் உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் எதிர்த்துள்ளனர்.
இதை மனதில் கொண்டு 31.7.18 ல் நடந்த ஜல்லிக்கட்டிற்க்கு போன ஈஸ்வரன் உள்ளிட்ட இளைஞர்களை "பறைத் தாயோழிகளா கள்ளர்கள் நடத்துற ஜல்லிக்கட்டிற்க்கு நீங்க ஏண்டா வந்தீங்க " என்று மிரட்டி கொலை வெறி தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள்.

திலகர் ..பார்ப்பனீய வெறியன் லோகமான்ய பால கங்காதர திலகர் ... கேடிகளுக்கு முன்னோடி . : August 1, 1920

திலகர் சுதந்திரப் போராட்டத்தில் சிறை செல்லவில்லை.
கள்ள கையெழுத்து மோசடி சாதிவெறி மததுவேஷ வழக்குகளில் சிறைக்கு சென்ற பாலகங்காதர திலகர்.
ஆதாரங்களுடன் பதிவு..
இன்று நாடுமுழுவதும் சங்கிகளால் திலகரின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. '' சுதந்திரம் எனது பிறப்புரிமை'' என்று திலகர் முழங்கியதாக கூறும் அவர்கள், ''சுதந்திரமடைந்த இந்தியாவை ஆளும் உரிமையும் கல்வியும் அரசியலும் பார்ப்பனர்களுக்கே உரியது '' என்று சாதிவெறி பிடித்த இந்த பார்ப்பனன் கூறியதை மட்டும் வசதியாக மறைத்து விடுவார்கள்.
தற்போது கூட தமிழகத்தில் கள்ளக்காதல் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து நிலஆக்கிரமிப்பு போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்ட பாஜக இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதிக்கப்பட்டவனால் ஓடஓட துரத்தி வெட்டிக் கொல்லப்பட்டதையும் ,அப்படி செத்தவர்களை இந்து அமைப்புகள் '' தேச பக்தர்களாக '' சித்தரித்து வருவதையும் நாம் அறிவோம்.
இன்றைக்கு நடந்த கள்ளக்காதல் கொலைகளையே தேசபக்த கொலைகளாக திரித்து கூறும் பார்ப்பனிய கும்பல்களும் பார்ப்பன ஊடகங்களும் ,ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய முஸ்லிம் மக்களை தேசவிரோதிகளாகவும் , பார்ப்பனியத்துக்கு ஆதரவாக போராடியவர்களை தேசபக்தர்களாவும் வரலாற்றையே திரித்து நமக்கு சொல்லி வருவதோடு சுதந்திர போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்த வாஜ்பேயிக்கு பாரத ரத்னா விருது கொடுத்துள்ளது ..

புதன், 1 ஆகஸ்ட், 2018

திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள்! ... ஸ்டாலின் வேண்டுகோள் : தொண்டர்கள் யாரும் இன்னுயிரை இழந்திட வேண்டாம் .

காவேரி எந்த தலைவருக்கும் வாய்க்காத தொண்டர்
tamilthehindu :திமுக தொண்டர்கள் யாரும் தங்கள் இன்னுயிரை இழந்திடும் எவ்வித
முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என, அக்கட்சயின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன். கருணாநிதியின் உடல்நலக்குறைவால் ஏற்பட்டுள்ள சோகத்துடன் தொண்டர்கள் இறந்துள்ளார்கள் என்ற செய்தி என்னை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த தொண்டர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் காவேரி மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல், கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. கருணாநிதிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து அவரது உடல்நிலையைக் கண் அயராது கண்காணித்து வருகிறது.

மருத்துவ படிப்பில் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு தொடரும்.. உச்சநீதி மன்றம் தீர்ப்பு!

tamiloneindia -Veera Kumar : தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அதே இடஒதுக்கீடு
தொடரும்- உச்சநீதிமன்றம் அதிரடி- வீடியோ டெல்லி: தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக பொது ஜாதி பிரிவை (OC) சேர்ந்த மாணவர்கள் முத்து ராமகிருஷ்ணன், சத்திய நாராயணன் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992ல் தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும், 69% இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுப் பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்.
அதோடு, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டை கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும், கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கலைஞருக்கு எப்படி சொத்துக்கள் சேர்ந்தது? 18-வயதில் முரசொலி ..1949 இல் மாடர்ன் தியேட்டர்ஸ் .. இன்றுவரை .. ஒரு அலசல்!

Kathirava Maths : கலைஞர் எந்த சொத்துகளையும் கொண்டு
வரவில்லை. சென்னை
வரும்போது திருட்டு ரயில் ஏரி வந்தார் என கூறும் அறிவாளிகளுக்கு 2010 யில் தலைவர் தந்த பேட்டி:
தனது சொத்து விவரங்களை வெளியிட்ட முதல்வர் கருணாநிதி, கோபாலபுரம் வீட்டைத் தவிர எந்த சொத்தும் வாங்கவில்லை என்றும், லஞ்சம் - ஊழலைப் பொறுத்தவரையில், தாம் ஒரு நெருப்பு மாதிரி என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சொத்து விவரம் வெளியிடுவது ஏன்?
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அம்மையார் ஜெயலலிதா தொடங்கி, அந்தக் கட்சியிலே உள்ள அடிமட்டத் தொண்டர்கள் வரையிலும் - ஏன், தமிழகத்திலே உள்ள வேறுசில கட்சிகளின் நண்பர்கள் ஒரு சிலரும் - என்னைப் பற்றி குறிப்பிடும் போது - நான் ஏதோ "சல்லிக்காசு'' கூட கையிலே இல்லாமல் சென்னைக்கு வந்ததைப் போலவும் - இன்றைக்கு ஆசியாவிலேயே முதலாவது பணக்காரனாக இருப்பதாகவும் - என் பெயரில் ஏராளமான சொத்துக்களையும், எஸ்டேட்டுகளையும் வாங்கிக்
குவித்திருப்பதைப் போலவும் பேசி வருகிறார்கள், எழுதி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் - என்னுடைய சொத்துகள் என்ன என்பதைப் பற்றி குறை கூறுபவர்களுக்கும் - அதை நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு விளக்கம் அளிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். என்னதான் அவர்கள் என் குடும்பத்தைப் பற்றி குறைவாக எழுதினாலும், நான் சிசு பருவத்திலே இருந்த போதே, திருடர்கள் வீடு புகுந்து திருட வருகின்ற அளவிற்கும் - உயர்நிலைப் பள்ளியில் படிக்கவே திருவாரூரில் கொண்டு போய் சேர்க்கக் கூடிய அளவிற்கும் ஓரளவு வசதியுள்ள குடும்பம் தான் என்னுடையது.
முரசொலி தொடங்கி முதல் கார் வரை...
எனக்கு 18 வயதாகும் போது "முரசொலி'' வாரப்பத்திரிகையைத் தொடங்கி விட்டேன். அப்போதே நாடகங்களை எழுதுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டேன். திராவிடர் கழகப் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டேன். 1949-ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சில் எழுத்தாளராக பணியிலே அமர்ந்தேன்.

சாலையில் மக்கள் மீது மோதிய கார்: 6 பேர் உயிரிழப்பு,, CCTV காட்சி..கோவையில்....


நியுஸ் 18 :கோவையில், சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது, அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
கோவை சுந்தராபுரம் பெரியார் சிலை பகுதி அருகே, பேருந்துக்காக சாலையோரம் பொதுமக்கள் நின்றிருந்தனர். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி, அதிவேகமாக வந்த ஆடி சொகுசு கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.
இங்கும் அங்குமாக சீறிப்பாய்ந்த அந்த கார், சாலையோரத்தில் நின்றிருந்த மக்களின் மீது மோதியது. சாலையோர பூக்கடை மற்றும் ஆட்டோவின் மீதும் கார் மோதியதில், மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
5 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் காவல்துறை துணை ஆணையர் லட்சுமி உடனடியாக விரைந்து, விசாரணை மேற்கொண்டார். அப்போது சொகுசு காரை ஓட்டி வந்த ஜெகதீசனை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவேரி ... அழகிரி ரஜினி வெவகாரமா? ... அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து காவேரிக்கு .. இதுவும் வெவகாரமா?

டிஜிட்டல் திண்ணை: கலைஞருடன் சந்திப்பு, அதிமுகவில் சலசலப்பு! மின்னம்பலம் : நேற்று ரஜினி, இன்று விஜய் எனத் தொடர்ந்து கலைஞரின் உடல்நிலை பற்றி விசாரிக்க, காவேரி மருத்துவமனைக்கு சினிமா பிரபலங்களும் வந்தபடியே இருக்கிறார்கள். இதுவரை கலைஞரின் உடல்நிலை பற்றி விசாரிக்கப் போனவர்கள் எல்லோருமே ஸ்டாலினையும், கனிமொழியையும்தான் சந்தித்துப் பேசினார்கள். அந்தப் புகைப்படங்களும் வீடியோவும் மட்டும்தான் மீடியாவுக்கும் கொடுக்கப்பட்டன. நேற்றுதான் முதல் முறையாக அழகிரியுடன் ரஜினி பேசும் படம் வெளியானது. ஆனால் அந்தப் படத்தை திமுக தரப்பு வெளியிடவில்லை.
நேற்று வெளிநாட்டு ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குத்தான் வந்தார். வந்தவர், முதலில் சந்தித்தது அழகிரியைத்தான். அப்போது, அழகிரியின் மகன் துரை தயாநிதி உடன் இருந்திருக்கிறார். ரஜினியும் அழகிரியும் பேசும் படங்களைத் தனது செல்போனில் எடுத்தவரும் துரை தயாநிதிதான். ‘தலைவர் எப்படி இருக்காரு..?’ என ரஜினி விசாரித்தபோது, ’இப்போ பரவாயில்லை... நல்லா இருக்காரு. அவரு தூங்கிட்டு இருக்காரு. அதனால யாரும் டிஸ்ட்ரப் பண்றதில்லை. இன்ஃபெக்‌ஷன் ஆகும் என்பதால் அடிக்கடி யாரும் பார்க்க வேண்டாம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க...’ என அழகிரி சொல்லியிருக்கிறார்.

காதல் திருமண ஜோடிக்கு சிறுநீர் குடிக்க செய்த உறவினர்...

காதல் திருமண ஜோடிக்கு சிறுநீர் விருந்து!மின்னம்பலம்: காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியினரை கடத்திச் சென்ற உறவினர்கள், அவர்களை சிறுநீர் குடிக்கச் செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஹர்தாஸ்பூரில் குடும்பத்தினரை எதிர்த்து ஒரு இளம் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமணத் தம்பதியருக்கு, அவரது குடும்பத்தினரே அதிர்ச்சியூட்டும் வகையில் கொடூர தண்டனை வழங்கியுள்ளனர்.
திருமணமாகி ஓரிரு தினங்களே ஆன நிலையில், பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று (ஜூலை 31) புதுமணத் தம்பதியினரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது, மணப்பெண்ணின் அலங்காரம் முழுவதும் கலைத்து, அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினர்.பின்னர், இளம் ஜோடி இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு நிர்பந்தப்படுத்தினர்.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட தம்பதியினர் காவல்நிலையத்தில், மணப்பெண்ணின் தந்தை, இரண்டு மாமாக்கள் மற்றும் மூன்று பேருக்கு எதிராக புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மம்தா : எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை! டெல்லியில் சோனியா ராகுல் சந்திப்பு .. கொல்கத்தா பேரணிக்கு அழைப்பு..


சோனியா, ராகுல், தேவே கவுடாவை சந்தித்தார் மம்தா பானர்ஜிtamilthehindu : எனக்கு பிரதமராகும் ஆசையில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து, மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். டெல்லியில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், இன்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த மம்தா பானர்ஜி, பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தப்படுவீர்களா? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “எனக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை. நான் சாமானியர். சாதாரண ஒரு தொழிலாளி அவ்வளவுதான். தொடர்ந்து எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். எனக்கு இப்போது தேவையெல்லாம், மத்தியில் ஆளும் பாஜக அரசை அகற்ற வேண்டும். அதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்.

திமுகவுக்குள் ஆர் எஸ் எஸ் சிலிப்பர் செல் .. பிரியாணி குண்டர்கள் ... யுவராஜ் திவாகர் நீக்கம்!


மோடி நிர்மலா 8 ஊடக முதலாளிகளை சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நம்புவோம்
Nethaji : சென்னையில் பிரியாணிக்காக ஒரு கடையில் சண்டை போட்ட திமுகவைச் சேர்ந்த யுவராஜ் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் இயக்கத்தில் இருந்து வந்தவர் என உறுதி செய்யப்பட்டுள்ளது .
இதை வைத்து பார்க்கும்போது இது எதேச்சையான சம்பவம் என்று கடந்து செல்ல முடியவில்லை .
கடந்த 5 நாட்களில் தொலைக்காட்சிகளில் முகநூல்களில்
திமுகவை பற்றிய செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை எண்ணத்தை தகர்க்கும் வகையில் தொலைக்காட்சிகளிலும் முகநூல் நண்பர்கள் நடத்திய திமுகவின் தமிழர்களுக்கான செயல்பாட்டை தெளிவுபடுத்திய நிலையில் திமுகவின் வாக்கு சதவிகிதம் மக்கள் மத்தியில் சற்று அதிகரித்து அதிகரித்து இருக்கிற வாய்ப்பு நிச்சயமாக உள்ளது .

இதை முறியடிக்கும் வகையில் திமுகவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த சம்பவம் திட்டமிட்டு அந்த ஸ்லீப்பர் செல் நபரால் நடத்தப்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன் .

நடிகை ரோஜாவின் உயிருக்கு ஆபத்து ? சந்திரபாபு நாயுடுவின் மகன் மீது குற்றச்சாட்டு!

roja தனது நக்கீரன் :உயிருக்கு ஆபத்து இருப்பதாக பிரபல நடிகையும், ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் அகரம்பேட்டையை சேர்ந்த சுமதி என்ற பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இருசக்கர வானத்தின் மீது அதிவேகமாக வந்த லாரி ஒன்று மோதியதில் சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
 சம்பவத்தை அறிந்த சுமதியின் உறவினர்கள் அங்கு கூடினர். சுமதியின் உடலை பார்த்து கதறி அழுந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ரோஜா, காரை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லாரி உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசியதாக சுமதியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
 இதனை கேட்ட ரோஜா, உடனடியாக சென்னை - திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த போலீசார் ரோஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மம்தா பானர்ஜி : உள்நாட்டு போர் வெடிக்கும் ,,,,, வன்முறையை தூண்டுகிறார் என்று ...


தினத்தந்தி :உள்நாட்டு போர் வெடிக்கும்” என பேசிய விவகாரம்: வன்முறையை தூண்டுவதாக மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி மோடி அரசை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
 அவர் கூறுகையில், “தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாக பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டு போருக்கும், ரத்தகளரிக்கும் வழி வகுக்கும்.
இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா?... அப்படி செய்தால் உங்களால் ஒரு போதும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சாடினார்.

அழகிரி கலாய்ப்பு; ஸ்டாலின் ஆட்கள் தவிப்பு! .. தினமலர்

சென்னை,:காவேரி மருத்துமனையில், சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை பற்றி விசாரிக்க வரும், ஸ்டாலின் ஆதரவாளர்களை, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கடுமையாக கலாய்ப்பதால், அவர்கள் தலைதெறிக்க, ஓட்டம் பிடிப்பதாக, கட்சி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. வயது முதிர்வு காரணமாக உடல் நலிவு அடைந்துள்ள கருணாநிதி, நான்காவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நலம் விசாரிக்க, தலைவர்கள் பிரமுகர்கள் தினமும், மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.நான்காவது மாடியில் உள்ள அறைகளில் தங்கியிருக்கும், குடும்பத்தினரை சந்தித்து, கருணாநிதியின் நலம் பற்றி விசாரித்துசெல்கின்றனர். அழகிரி, தன் மனைவி காந்தியுடன், ஒரு அறையில்தங்கியுள்ளார்.மருத்துவமனை வாசல் அருகில் நின்றுக் கொண்டிருக்கும், தலைமை நிலைய நிர்வாகிகள் கு.க.செல்வம், பூச்சி முருகன் ஆகியோர், யாரை அனுமதிக்க வேண்டும் என்பதை, ஸ்டாலினிடம் கேட்டு, உள்ளேஅனுமதிக்கின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் முன்னாள், எம்.எல்.ஏ., வைத்தியலிங்கம் வந்தார். அப்போது, அங்கு வந்த அழகிரியிடம், கு.க.செல்வம் வலியச் சென்று, 'வைத்தியலிங்கத்தை உள்ளே அனுப்பி வைக்கட்டுமா' என,கேட்டுள்ளார்.உடனே, அழகிரி, 'அவர் கட்சியில சீனியர்... யார் யார் மூத்தவங்கன்னு, விபரம் தெரியாம இருக்கீங்களே... உங்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைச்சிருக்கணும்... அப்படி வைக்காமல் போனதால் தான், இப்படில்லாம் நடக்குது'ன்னு பாய்ந்திருக்கிறார்.

இந்தியாவில் 13,657 பேர் கைகளால் மலம் அள்ளுபவர்கள்!... இந்த எண்ணிக்கை சரியா?


,மின்னம்பலம்: இந்தியாவில் கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் நிலைமை தற்போதும் தொடர்கிறது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மக்களவையில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள தகவலின்படி, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13,657 பேர் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நபர்கள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவிலான மலம் அள்ளும் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு, 11,247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் 738 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் மனிதக்கழிவுகளை அள்ளுகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் 78 பேரும், அசாம் மாநிலத்தில் 154 பேரும், பிகாரில் 137 பேரும், சத்தீஸ்கரில் 3 பேரும், ஒடிசாவில் 237 பேரும், பஞ்சாபில் 91 பேரும், உத்தரகாண்டில் 137 பேரும், மேற்கு வங்கத்தில் 104 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 170 மாவட்டங்களில் 155 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கலைஞர் பற்றி மார்கண்டேய கட்ஜுவின் தரங்கெட்ட பதிவுக்கு திமுக பதிலளித்துள்ளது.

tamil.news18.com : திமுக தலைவர் கலைஞர்  குறித்து மார்கண்டேய கட்ஜுவின்
ட்விட்டர் பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது.</ இதனைத் தொடர்ந்து, மொத்தம் 7 ட்வீட்களில் மார்கண்டேய கட்ஜுவின் பதிவுக்கு திமுக-வின் சமூக வலைத்தளப் பிரிவு பதிலளித்துள்ளது. அந்த பதிலின் சாரம்சம் பின் வருமாறு:
 Mr.@mkatju You seem to be suffering from a disease of the Sanghis that is lying through nose. Thalaivar #Kalaignar had started Murasoli as a weekly when he was 18.(addition to Murasoli, Kungumam, Muththaram, Vannathirai &Rising Sun in English were founded by MK)

கட்ஜு நீங்கள் சங் பரிவார் ஆட்களை போல் வடிக்கட்டிய பொய் சொல்லும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். கலைஞர் கருணாநிதி 18 வயதானபோது, முரசொலியை வார இதழாக தொடங்கினார். அது மட்டுமில்லாமல் குங்குமம், முத்தாரம், வண்ணத்திரை மற்றும் ரைசிங் சன் (ஆங்கில இதழ்) ஆகியவையும் அவரால் தொடங்கபட்டது.

 #DMK4TN : Mr.@mkatju You seem to be suffering from a disease of the Sanghis that is lying through nose. Thalaivar #Kalaignar had started Murasoli as a weekly when he was 18.(addition to Murasoli, Kungumam, Muththaram, Vannathirai &Rising Sun in English were founded by MK)

பழனி முருகன் கோயில் பார்ப்பனர் கைக்கு மாறியதெப்படி?

Thamizh Inian :  பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண உருவச் சிலை,
போகர் என்பவரால் செய்யப்பட்டது. அவருடைய மரபில் வந்தவரான புலிப்பாணி பாத்திர உடையார் அக்கோயிலில் பூசை செய்துவரும் நாளில் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பா அய்யன் பழனிக்கு வந்தான். அவன் ஒரு பார்ப்பனன். ஆகையால் புலிப்பாணி பாத்திர உடையாரிடமிருந்து தீர்த்தப் பிர சாதம் வாங்கக்கூடாது என்று நினைத்தான். அதனால் அவனும் பாளையக்காரரும் சேர்ந்து கோயில் பூசை உரிமையைப் புலிப்பாணியிடமிருந்து பிடுங்கி, சாலிவாகன சகாப்தம் 1366, கலியுக சகாப்தம் 4578க்கு மேல் செல்லாநின்ற ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 16ஆம் தேதி திங்கள் கிழமையன்று அய்ந்து பார்ப்பனர்களுக்குக் கொடுத்தான்.
1. கொடுமுடி சரஸ்வதி அய்யன்
2. மருதூர் தம்பா அய்யன்
3. நாட்டாரய்யன் கோயில் சுப்பய்யன்
4. கரூர் முத்தய்யன்
5. கடம்பர் கோயில் அகிலாண்டய்யன் ஆகிய அய்ந்து பார்ப்பனர்களையும் வர வழைத்து கொடுமுடி சரஸ்வதி அய்யனைக் குருக்களாகவும், மற்ற நால்வரையும் பூசைப் பரிசாரக நம்பிகளாகவும் நியமித்தான்.
ஆசை காட்டலும் அச்சுறுத்தலும்

செவ்வாய், 31 ஜூலை, 2018

அட்டவனை ஜாதிகளிடையே ...ஆதிக்கமும் அடக்குமுறையும் எங்கே யார் நிகழ்த்தினாலும்


Murugan Kanna : ஆதிக்கமும் அடக்குமுறையும் எங்கே யார் நிகழ்த்தினாலும்
அது கண்டிக்கப்பட வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் பறையர் ஜாதி வீட்டு பெண்ணை அருந்ததியர் ஜாதி வீட்டு பையன் காதலித்து திருமணம் செய்ததால் பறையர் ஜாதியினர் அருந்தியர் பையனின் வீட்டில் புகுந்துதாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜாதி இந்துக்களால் ஒரே நிலையில் ஜாதிய தீண்டாமை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் இரு ஜாதிகளுக்குள்ளும் இப்படியான ஜாதிய வன்மங்கள் நிறைந்துள்ளது மிகவும் வருந்ததக்கது. அட்டவனை ஜாதிகளிடையே இது போன்று நடக்கும் நிகழ்வுகளை உட்ஜாதி முரண்கள் மோதல்கள் என்று சிலர் மூடி மறைக்க கூடும். ஆனால் இது போன்ற சம்பவங்களை எவ்வளவு மூடி மறைத்தாலும் சில கொடுரமானவைகள் அம்பலப்பட்டு சந்தி சரிக்கிறது.
தயவு கூர்ந்து இது போன்ற அட்டவனை ஜாதிகளிடையே நடக்கும் சம்பவங்களை உட்ஜாதி முரண் என்று கூறாதீர்கள். அட்டவனை ஜாதிகள் அனைத்தும் தனித் தனி ஜாதிகளாகவே உள்ளனர். ஜாதி இந்துக்களால் ஒடுக்குமுறைகளை அனுபவித்தாலும் ஒவ்வொரு ஜாதிகளும் பல்வேறு முரண்களோடும் மோல்களேடும் சில வல்லாதிக்க போக்குகளோடுமே பயனிக்கிறது என்பதை சமுகநீதி பேசும் இயக்கங்களும ஜாதி ஒழிப்பு பேசும் இயக்கங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் இருந்து அகதிகள் இந்தியாவுக்குள் வருகிறார்களாம் ! மத்திய அமைச்சர் கிரண் ரிச்சு

வடநாட்டான் மனதில் இருக்கும் துவேஷம் வெளிவந்து விட்டது .. பின்பு சமாளித்துகொண்டார்
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு
THE HINDU TAMIL தமிழக்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் அகதிகள் வருகிறார்கள் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று பேசியதால் கடும் அமளி ஏற்பட்டது.
அதிமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் வாய்தவறி பேசிவிட்டதாகக் கூறிவிட்டார்.
மக்களவையில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு இன்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார். அப்போது அகதிகள் விவகாரம் குறித்துப் பேசுகையில்,” மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் ரோஹிங்கயா முஸ்லிகளுக்கு அகதிகள் அங்கீகாரம் கொடுக்க முடியாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உ. பியில் எதிர்கட்சிகள் பிரமாண்ட கூட்டணி ... காங்கிரஸ் , மாயாவதி , அகிலேஷ் யாதவ் , அஜித் சிங்....

THE HINDU TAMIL : உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் வகையில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ‘மெகா’ கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதனால் மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
உ.பி.யில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து போட்டியிட்டன.
இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் அஜித்சிங்கும் இணைந்ததால் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டது.
 வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்ய இதே வியூகத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.
இதில் கணிசமான தொகு

பாஜக தலித் பெண் எம்எல்ஏ வந்து சென்ற கோவிலை கங்கை நீரால் கழுவிய பாஜக ...

Chinniah Kasi :லக்னோ, ஜூலை 30 - தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்ற கோயிலை, ிஷா வந்து சென்றதால், கடவுளின் கோபம் அடைந்துள்ளதாகவும், ஒரு துளி மழைகூடபெய்யவில்லை என்றும்கூறியுள்ளார். மேலும், தெய்வங் களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற வேண்டுமானால், ஆலயத்தை சுத்தப் படுத்த வேண்டும் என்று கூறி, அதன்படி கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்றுநதிகளின் மூலமும் கழுவிவிட வைத்துள்ளார்.
கங்கை நீரால் கழுவிவிட்ட மூடத்தனம் உத்தரப்பிரதேசத்தில்
நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம், முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, ராத் தொகுதியை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ-வான மனிஷா அனுராகி கடந்தஜூலை 12-ஆம் தேதி, விழாஒன்றுக்காக வந்து சென்றுள் ளார்.

தமிழ் ஊடகத்தினரை குறி வைக்கும் பா.ஜ.க.! -ஆபரேஷன் டி.எம்.ஜி. "Operation Tamil Media Group "

Operation Tamil Media Group
tv-discussionநக்கீரன்  :சி.ஜீவா பாரதி :
கட்டிப்பிடி வைத்தியம் செய்த ராகுலின் நாடாளுமன்றச் செயல்பாடு உலகளவில் ட்ரெண்ட் ஆனதால் பதறிப்போன பா.ஜ.க. தரப்பு, “"ரஷ்யா போன்ற நாடுகளில் எதிரிகளை வீழ்த்த இப்படித்தான் கட்டிப்பிடித்து விஷஊசி குத்திவிடுவார்கள்'’என்கிற அளவுக்குப் பிரச்சாரம் செய்கிறது. எதிர்த்தரப்பு ஒருதுளி அளவுகூட அரசியல் லாபம் பெற்றுவிடக்கூடாது என்பதிலும், தனக்கு எதிராக சிறு விமர்சனம்கூட வெளிப்படக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கும் பா.ஜ.க.வின் பார்வை தமிழ்நாட்டு ஊடகங்கள் மீது தற்போது அழுத்தமாகப் பதிந்துள்ளது.
2014 தேர்தலுக்கு முன்பே, மோடிக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் ஊடகங்களில் உள்ளவர்களை அவற்றின் நிர்வாகத்தின் உதவியுடன் வெளியில் அனுப்பும் வேலையைக் கச்சிதமாக செய்தது. தேர்தலில் ஜெயித்த பிறகு ஊடகங்களுக்கு எதிராகவும், தனிமனித கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும் பல நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியது.
reportersஉணவு, உடை, கலாசாரம் என அனைத்திலும் புகுந்து மக்களின் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறார்கள் பா.ஜ.க.வினரும் அவர்களது ஆதரவு அமைப்பினரும். அத்துடன், மாநில மொழிகளில் உள்ள ஊடகங்கள் மீதும் பார்வை திரும்பியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகள்-அறிவித்த திட்டங்கள்-மேற்கொண்ட நடவடிக்கைகள் பலவற்றிலும் மோடி அரசு தோல்வியடைந்துள்ள நிலையில், அதுபற்றிய பொதுமக்களின் கருத்துகளை பிரதிபலிக்கக்கூடிய ஊடகவியலாளர்களை அந்தந்த நிறுவனங்களிலிருந்து தனிமைப்படுத்துவது அல்லது முடக்குவது என்பதுதான் பா.ஜ.க.வின் தற்போதைய அசைன்மெண்ட்.