வியாழன், 6 அக்டோபர், 2011

முருகன், சாந்தன், பேரறிவாளன் வருத்தம் தூக்கில் அரசியல் நடத்தும் வைகோவும் சீமானும்

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக மூவர் தூக்கு தண்டனை:மோதிக் கொள்ளும் வைகோ,சீமான்,மரணத்திலும் கட்சி அரசியல் நடத்தும் தமிழக 'உணர்வாளர்கள்!

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கில் அரசியல் நடத்தும்  மூவருக்கும் தூக்கு தண்டணை அறிவிக்கப்பட்டதும்   தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சி யாரும் எதிர்பாராதது. தமிழ் உணர்வாளர்கள் அனைவருமே ஒரே அணியில் கைகோர்த்து போராடிய சில சம்பவங்களில் இதுவும் ஒன்று. கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதநேய அடிப்படையில் மக்கள் பெருமளவு இணைந்து போராடியதும் தமிழ் நாட்டில் இதுவே முதல்முறை. சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் தவிர, அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கருத்துதான் இருந்தது.

ஆனாலும் வைகோவும், சீமானும் இந்த விஷயத்தில் தங்கள் அரசியல் தங்கி இருப்பதால் அதிக ஆர்வம் காட்டினர்.

திருமாவளவன்:எம்பியாவேன் என நினைத்து பார்த்ததில்லை: வேட்பாளர்களை ஊக்கப்படுத்திய திருமா


சென்னை எழும்பூரில்  (05.10.2011) விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,

எப்போதும் இல்லாத இந்த உள்ளாடசித் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே களம் இறங்கியுள்ளன. தேமுதிகவும்
கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டணி வைத்தன. அதுவும் சிக்கலில் முடிந்துவிட்டது. ஆனால் இஸ்லாமிய சகோதர அமைப்புகளும், விடுதலைச்சிறுத்தைகளும் கூட்டணி அமைத்து மக்கள் ஜனநாயக கூட்டணி என்ற அமைப்பு உருவாகி உள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் தான் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளோம். திராவிட கட்சிகள் அனைத்தும் சிறுபான்மையினரும், ஒடுக்கப்பட்டோரையும், தலித்துக்களையும் ஒரு ஏணிப்படியாக பயன்படுத்தி வந்துள்ளன. இதுவரை ஓட்டுப் போட மட்டுமே நாம் பயன்பட்டு வந்துள்ளோம்.

அன்பழகன்:இந்திய வரலாற்றிலேயே J மிகப்பெரிய குற்றவாளியாகப்

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா: பேராசிரியர் அன்பழகன்

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா என, திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசினார்.
திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து , திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசிய அவர், இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய குற்றவாளியாகப் பேசப்பட்டவர் ஜெயலலிதா. டான்சி நில வழக்கில் தனது கையெழுத்தையே மறுத்து பின்னர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டவர்.
தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து சொகுசு பங்களா கட்டிக்கொண்டு அந்த இடத்தை இன்னும் ஒப்படைக்காதவர் ஜெயலலிதா.

எண்ணெய் வளத்தை தடுக்கவே புலிகளை நோர்வே ஆதரித்தது

எண்ணெய் வளத்தையும் வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதைத் தடுத்து நிறுத்தவே நோர்வே புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த குற்றஞ்சாட்டியுள்ளார். போரை முடிபுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப்படுத்திருக்க முடியாதென்றும் அவர் கூறியுள்ளார்.
மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் 3 வருடங் களில் மின் உற்பத்திக்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தமுடியும். முதலாவது எண்ணெய்க் கிணறு மூலம் ஹைட்ரோ காபன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது.

தெலுங்கானா போராட்டம்! கேள்வி – பதில்!!

கேள்வி 1:
வணக்கம். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் தனித் தெலுங்கானா போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
கேள்வி 2:
ஒருவேளை தெலுங்கானா பிரிக்கப்பட்டால் தமிழகத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?
கேள்வி 3:
அகில இந்திய அளவிலான விளைவுகள் என்னவாக இருக்கும்?
- முரளி
அன்புள்ள முரளி,
2010 ஜனவரி புதிய ஜனநாயகம் இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரை உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கிறது. அதையே இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். apple's steve jobs dead

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.
அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொழில் நுட்ப சாதன தயாரிப்பில் புகழ் பெற்றதாகும். 1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜாப்ஸ். உடல்நலக்குறைவுக் காரணமாக ஆப்பிள் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் விலகினார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டாக சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஸ்டீவ் ஜாப்ஸ் கலிபோர்னியாவில் உயிரிழந்ததாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. 
ஆப்பிள் பளபளப்பாக வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் வாடிக்கொண்டிருந்தார். அவருடைய உடல்நிலை மோசமாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளைக் கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருந்ததுபோல் தன் அந்தரங்க வாழ்க்கையையும் அவர் ரகசியமாகத்தான் வைத்திருந்தார். தன்னைப் பற்றி நல்லவிதமான செய்திகள் வெளிவருவதைக்கூட அவர் விரும்பவில்லை.
ஒரு முறை, ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய ஒரு புத்தகத்தைஒரு பதிப்பம் வெளியிட்டது. வேண்டாம் என்று பலமுறை மறுத்தபிறகும் இந்தப் புத்தகம் வெளிவந்தது. அந்த பதிப்பகத்தாரின் புத்தகங்கள் பல ஆப்பிளின் இணையக் கடையில் நல்ல லாபத்துக்கு விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஆனாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் கொதித்துப்போனார். இணையம் மூலமாக விற்றுக்கொண்டிருந்த அந்தப் பதிப்பகத்தாரின் அத்தனை புத்தகங்களையும் இரவோடு இரவாக தூக்கி எறிய உத்தரவிட்டார். ஸ்டீவ் ஜாப்ஸின் கோபம், குணாதிசயம் அவ்வளவு விசித்திரமானது.

மானங்கெட்ட மாவை அமிரை கொலை செய்தவர்கள் யார்?

தற்போதைய இளந்தலைமுனருக்கு அமிர்தலிங்கம் என்றால் யாரென்றே தெரியாது. அவரது பங்களிப்பு என்ன என்பது பற்றியும் தெரியாது. ஆனால் அவர் இறந்து விட்டார் என்பது மட்டும் தெரியும். ஆனால் அவர் எவ்வாறு இறந்தார்:? இயற்கை மரணமா? அல்லது புலிகளிடம் மண்டியிட்டிருந்த காலத்தில ஆனந்தசங்கரியண்ண கூறுவது போல விபத்தா? அல்லது கொலையா? உண்மையில் நடந்தது என்ன என்பது தெரிந்திருந்தும் மறைக்கின்றார்கள் தமிழர்கள் தலைவர்கள் என தம்மைக் கூறிக்கொள்ளும் கருங்காலிகள். 
 யாழ்ப்பாணத்திலே நடந்த அமிரின் நினைவுக் கூட்டத்தில் சி.வி.கே சிவஞானம் உட்பட பலர் பேசியிருக்கிறார்கள். ஆனால் ஒருவர் கூட அமிர் அநியாயமாக கொல்லப்பட்டர் என்பது பற்றி வாய் திறக்கவில்லை. இவர்கள்தான் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்களாம் சீ.. ஆ..
சரி இவர்களை விடுவோம். அமிர்தலிங்கத்தினால் வளர்த்து விடப்பட்ட அமிரின் குணாதியங்களில் எதுவுமேயற்ற முதுகெலும்பற்ற பிராணிதான் மாவை. இன்றைக்கு இந்த மாவை தனது பிள்ளைகளை வெளிநாட்டிலே விட்டு கோடிக்கணக்காக செலவளித்து படிப்பிக்கிறார் என்றால் அது அண்ணன் அமிர் போட்ட பிச்சை. இன்றைக்கு கொழும்பிலே குளுகுளு அறையிலே மாவை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றார் என்றால் அது அண்ணன் அமிர் போட்ட பிச்சை. இன்றைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சொகுசு வாகனத்திலே மாவை வலம் வருகின்றார் என்றால் அதுவும் அண்ணன் அமிர்; போட்ட பிச்சை. இப்படியெல்லாம் செய்த அமிருக்கு மாவை செய்த கைமாறு என்ன? அமிருக்கு உண்மையில் நடந்தது என்ன?

5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்

பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்
லண்டன்: நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் செல்வது தெரிகிறது- இந்திய கடற்படைத் தளபதி!


கடற்படை அதிகாரிகளின் அறக்கடளை ஆண்டு விழாப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா. ‘’இந்திய மீனவர்கள் தொடட்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது மிகப்பெரிய விஷயம். இது இரு நாட்டு கடற்படை தொடர்பான விஷயம் அல்ல, இரு நாட்டு அரசியல் தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டிய விஷய்மாக இது உள்ளது.நமது கடல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள ரேடார்களைக் கண்காணிக்கும் போது நமது மீனவர்கள் செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்று மீன்பிடிக்கின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராசா விருப்ப மனு

Raja2ஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக ராசா விருப்பம்- மனு செய்தார்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம ஊழல் வழக்கை கண்காணித்து வரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கருத்து தெரிவிக்க விரும்புவதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விருப்பம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
2ஜி வழக்கில் ராசா உள்ளிட்டோர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கை புதிதாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இதனால் ராசா தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ கோர்ட்டில் விசாரணையைப் புறக்கணிக்க ராசா தரப்பு முடிவு செய்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2012 ஜெயிப்பது சந்தேகம் பராக் ஒபாமா

வாஷிங்டன் : இரண்டாவது முறையாக அதிபராவது சந்தேகம்தான் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அண்மையில் நடத்திய ஆய்வு முடிவும் இதையே பிரதிபலிக்கிறது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009 ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார். முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையும் கிடைத்தது. 4 ஆண்டுகளைக் கொண்ட இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது.

பேராசிரியர்.றோகான் குணரத்ன:பயங்கரவாதிகள் மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிவதால்

Rohan Gunaratna -5பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் ஸ்ரீலங்கா உலகளாவிய அதிகார வரம்புக்குள் விண்ணப்பிக்க வேண்டும் - பேராசிரியர்.றோகான் குணரத்ன
- கே.ரி. ராஜசிங்கம்
பயங்கரவாதம் தொடர்பான விடயங்களில் அமெரிக்கா உலகளாவிய அதிகார வரம்புக்குள் விண்ணப்பிக்கிறது. ஸ்ரீலங்காவும் இந்த உதாரணத்தை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார், பேராசிரியர்.றோகான் குணரத்ன.
“ஸ்ரீலங்காவில் உள்ள பயங்கரவாத பிரச்சாரத்துக்கு புலம்பெயர் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகளால் பாரிய அளவில் நிதியுதவி வழங்கப்பட்டது. அவ்வாறு நிதி வழங்கிய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை வெளிக்கொண்டு வருவது அவசியம், மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவர்களை இனங்கண்டு, இன்னமும் தமிழர்களின் மனங்களில் இடம் தேடி வரும் அத்தகைய எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

விஷம் கக்கும் யாழ். உதயன்,சப்றா’சரவணபவன் MP TNA

bias journalismsஊடக தர்மத்தை காலில் போட்டு மிதிக்கும் யாழ். உதயன் விஷம் கக்கும் 
- திருநீலகண்டன் - கனடா
இலங்கையில் ஊடக சுதந்திரம் இல்லையென்ற பிரச்சாரம் கடந்த பல வருடங்களாக உலகளாவிய ரீதியில் செய்யப்பட்டு வருகிறது. அதைச் செய்பவர்களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையும் ஒன்று. ஆனால் இந்த உதயன் பத்திரிகையில் வெளிவரும் செய்திகளைப் பார்த்தால், இலங்கையில் தாராளமான ஊடக சுதந்திரம் இருக்கிறது என்பது நிரூபணமாவது மட்டுமின்றி, ஊடக சுதந்திரத்தின் பெயரால் என்னவிதமான கயமைத்தனங்களை அங்கு செய்யலாம் என்பதும் தெரிய வரும். உண்மையில் ஊடக சுதந்திரத்தை பல்வேறு நாசகார நோக்கங்களுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதில் ஒருவர் பயிற்சி பெற வேண்டுமானால், அதை உதயனிடமிருந்துதான் கற்றுக் கொள்ள முடியும்.
உதாரணத்துக்கு இதோ சில..
‘மகிந்த அரசு இனப்பிரச்சினையைத் தீர்க்காது’ என கொட்டை எழுத்தில் ஒரு நாள் தலைப்புச் செய்தி வரும். அடுத்த நாள் ‘அரசு - கூட்டமைப்பு பேச்சில் முன்னேற்றம் - அரசு கூறுகிறது’ என்று ஒரு செய்தி தவிர்க்க முடியாமல் எங்காவது ஒரு மூலைக்குள் போடப்பட்டிருக்கும். அதற்கடுத்த நாள் ‘இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நாம் ஒருபோதும் விட மாட்டோம் - சிரேஸ்ட அமைச்சர் தெரிவிப்பு’ என ஒரு தலைப்புச் செய்தி வரும். ஆனால் அந்த சிரேஸ்ட அமைச்சர் யார் என்ற பெயர் இருக்காது.

புதன், 5 அக்டோபர், 2011

குஷ்பு:மக்கள் தங்கள் தவறை உணர்ந்துவிட்டார்கள்


தவறை திருத்துவதற்கு ஒரு சரியான வாய்ப்பு. அந்த வாய்ப்பு திருச்சி மேற்கு தொகுதி மக்களுக்கு மட்டும் கிடைத்திருக்கிறது 

ஜெயலலிதா ஆட்சியில்  மூன்று மாதத்தில் அவர்கள் செய்யும் ஒரே காரியம், திமுகவின் அமைச்சர்கள்,  எம்எல்ஏக்களை தினமும் ஒரு பொய் வழக்கைப் போட்டு கைது செய்வது. நள்ளிரவில்  போலீசார் வீடுகளில் ஏறி குதிப்பது. தினமும் ஒரு கைது தான்  செய்துக்கொண்டிருக்கிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் மீது கொடுக்கப்படும்  புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திமுககாரன் என்றால் உடனே  கைது செய்வது. வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவது. தமிழக மக்களுக்கு  நல்லாட்சி தருவது திமுக மட்டுமே. மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்.
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து நடிகை குஷ்பு 05.10.2011 அன்று திருச்சியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

தெலுங்கானா போராட்டம் தென்னிந்தியாவுக்கு ஆபத்து! மின் உற்பத்தி வீழ்ச்சி


ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டம் நீடித்து வருவதால் ஆந்திராவில் மின் நிலையங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா மட்டுமல்லாமல், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களிலும் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

தெலுங்கானா போராட்டத்தால் ஆந்திராவில் மின் உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து அணல் மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டிய கடுமையான சூழல் எழுந்துள்ளது. இதனால் ஆந்திராவே இருளில் மூழ்கும் அபாயகரமான நிலையை நோக்கி அந்த மாநிலம் போய்க் கொண்டுள்ளது.

மவுன சாமியாரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர்

பாபநாசம் மலையில் தியானம் செய்த சாமியாரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர்

விகேபுரம்: பாபநாசம் மலையில் தங்கியிருந்து 7 ஆண்டுகளாக தியானம் செய்த மவுன சாமியார் சாது குமார் சாமியை வனத்துறையினர் இரவு நேரத்தில் சென்று கொடூரமாக தாக்கி நிர்வாண நிலையில் அடித்து விரட்டினர். அவர் என்ன ஆனார், உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த சுயம்பு மகன் குமார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் இல்லறத்தை துறந்து பக்தி மார்க்கத்தில் ஈடுபடத் தொடங்கினார். அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் மலையில் உள்ள கல்யாணி தீர்த்தம் வந்து அங்குள்ள கோடிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தங்கினார். அதன் பிறகு காவி உடை தரித்த அவர் யாரிடமும் பேசாமல் எப்போதும் தியானம் செய்தார். இதனால் அவரை அனைவரும் சாதுகுமார் என்றும், மவுன சாமியார் எனவும் அழைக்கத் தொடங்கினர். எப்போதும் குழந்தை போல காட்சியளிப்பார்.

புலிகள் நெதர்லாந்தில் 21 Brain washing பாடசாலைளை நடத்தி

நெதர்லாந்தில் புலிகள் வார இறுதி பாடசாலைகள் 21ஐ நடத்தி வருகின்றனர் என கொழும்பு ஊடகங்கள்!

நெதர்லாந்தில்,புலிகள் 21 வார இறுதி பாடசாலைளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெதர்லாந்து காவல்துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் அநேகமான பாடசாலைகள் தனி நபர்களிடமும் மற்றும் சில சங்கங்களிடம் ருந்தும் பறிதெடுத்தவையாகும் கோவில்களையும் புலி குண்டர்கள் பறித்தெடுத்த வரலாறுகள் பல உண்டு.
அம்ஸ்டடம், ரொட்டர்டம், தி ஹேக், பிரடா, இன்ட்டோவன், ஏர்னம் மற்றும் லியூ மற்றும் ஒஸ்டன்ஸ்பெலி ஆகிய நகரங்களில் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

WallStreet காபரெட்சுரண்டலுக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்


அமெரிக்காவில் மூன்றாவது வாரத்தில் வால் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் :அடக்கி வாசிக்கும் பத்திரிகைகள்!



நியூயார்க்: அமெரிக்காவில் "வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கத்தின்' போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல், தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பாலத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 700 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆர்ப்பாட்டத்தை மேலும் தூண்டி விட்டுள்ளது.

தொடரும் ஆர்ப்பாட்டங்கள்: நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. லாஸ் ஏஞ்சல்சின் சிட்டி ஹால் கட்டடம் முன்பு, இன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.காபரெட்சுரண்டலுக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராட்டம்

தீவிர கண்காணிப்பு!கேரளாவிற்கு செல்லும் இலங்கையர்கள்

தென் இந்தியாவின் கேரள மாநிலத்திற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.இந்திய காவல்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் கூட்டாக இணைந்து இந்தக் கண்காணிப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கொச்சி விமான நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல்- எ.வ.வேலு, செல்வகணபதி ஹோட்டல் அறைகளில் ரெய்டு


Velu and and Selvaganapathuy
திருச்சியில், முன்னாள் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி உள்ளிட்ட திமுகவினர் தங்கியுள்ள ஹோட்டலுக்குள் புகுந்த அதிகாரிகள் குழு அங்கு அறை அறையாக சோதனையிட்டனர். இதனால் திமுகவினர் பரபரப்படைந்தனர்.
அம்மான்னா சும்மாவா உங்களை தேர்தல் பிரசாரம் செய்யவிடுவாரா?
திருச்சி மேற்கு இடைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இங்கு அதிமுக சார்பி்ல மு.பரஞ்சோதியும், திமுக சார்பில் கே.என்.நேருவும் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் பிரசாரத்தை முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, செல்வகணபதி, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக இருந்து பிரசாரத்தைக் கவனித்து வருகின்றனர்.

கத்தோலிக்கம்: காதல், காமம், ஊழல்,உளறல்களா உண்மைகளா?

ஆமென் (ஒரு கன்னிகாஸ்திரீயின் தன்வரலாறு),
சிஸ்டர் ஜெஸ்மி, மொழிபெயர்ப்பு: குளச்சல் மு. யூசுப்,
காலச்சுவடு, 2010, விலை ரூ. 150.
சிஸ்டர் ஜெஸ்மி எழுதி மலையாளத்திலும் பின் ஆங்கிலத்திலும் வெளியாகி பரபரப்பைத் தேடிக்கொண்ட புத்தகம் ‘ஆமென்’. ஜெஸ்மியின் தன்வரலாறு. பள்ளியில் படிக்கும்போதே தான் ஒரு கன்யாஸ்திரீ ஆகவேண்டும் என்று முடிவெடுத்த ஓர் இளம்பெண், எப்படி தன் விருப்பத்தை அடைந்தார், ஆனால் ஒரு கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக அவர் எவ்விதமான இன்னல்களை வாழ்வில் சந்திக்கவேண்டிவந்தது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைக்கிறது.
புத்தகத்தை நான் மூன்று பகுதிகளாகப் பார்க்கிறேன். சிலிர்க்கவைக்கும் ஜெஸ்மியின் இயேசு அனுபவங்கள். ஒரு கன்யாஸ்திரீயாக ஆகவேண்டும் என்று அவருக்கு ஏற்படும் ஆன்மிக அனுபவத்தை இயேசுவுடனான திருமணம், இயேசுவுடன் கூடுவதுபோன்ற உணர்வு என்று உருவகிக்கும்போது  கிட்டத்தட்ட ஆண்டாளை நெருங்குகிறார். புத்தகத்தின் கவித்துவமான கணங்கள் இவை. தொடர்ந்து அவர் இயேசுவுடன் ஆத்மார்த்தமாகப் பேசுவது, சண்டை போடுவது எல்லாம் சுவையாக ரசிக்கத்தக்கவை. அடுத்து, அவரது கன்யாஸ்திரீ வாழ்க்கைமுழுவதும் மடத்தில் உள்ள பெண்களாலும் ஆண்களாலும் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். இதுபற்றி அறிந்திராதவர்களுக்கு இது அதிர்ச்சியைத் தரலாம். ஆனால் எனக்கு அவ்வளவாக அதிர்ச்சியாக இல்லை. ஆனால் கொஞ்சம் அதீதமாகச் சொல்கிறாரோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
கடைசியாக, தொடர்ந்து அவருக்குப் பிறருடன் ஏற்படும் தகராறுகள். அதில் பல ‘அவள் என்னோட முடியைப் பிடிச்சு இழுத்தா!’ ரக சில்லறை விஷயங்கள். ஒரு புத்தகத்தில் எழுதத்தக்கவையே அல்ல. சில நிர்வாகத்தின் ஊழலில் அவர் பங்குகொள்ளாமல் எதிர்த்தபோது ஏற்பட்ட தகராறுகள். இதனை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.

லிபியா. யாருக்கு எத்தனை விழுக்காடு எண்ணெய்?

கடந்த ஏழு மாதங்களாக லிபிய அதிபர் மம்மர் கடாஃபிக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையில் நடந்துவந்த போர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. மேற்கு வல்லரசு நாடுகளின் துணையுடன் புரட்சியாளர்கள் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பெருவாரியான பகுதிகளைக் கைப்பற்றி தாற்காலிக ஆட்சியையும் அமைத்துவிட்டனர். அதிபர் கடாஃபி இப்போது முன்னாள் அதிபராக்கப்பட்டு அவரது ஆதரவாளர்கள் ஒருசில பகுதிகளை மட்டுமே தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடாஃபியின் கதி என்ன, அவர் எங்கே இருக்கிறார் என்பது திட்டவட்டமாக இன்னும் தெரியவில்லை.

நீதியின் கதவடைக்க முயலும் புலிகளின் கறைபடிந்த கரங்கள்

சர்வதேசத்தில் நீதியின் கதவடைக்க முயலும் விடுதலைப் புலிகளின் கறைபடிந்த கரங்கள்!
பயங்கரவாதிகளுக்காக குரல் கொடுக்கும் நெதர்லாந்து சட்டத்தரணி நெதர்லாந்தில் புலிகளுக்காக நிதி சேகரித்து அதனை ஆயுதக் கொள்வனவுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் இடம் பெற்று வரும் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணைகளில்  நீக்கப்பட வேண்டும் என்ற  கோரிக்கையை ஐந்து விடுதலைப் புலிகளின் சார்பில்  ஆஜராகி வாதிடும் சட்டத்தரணி விக்டர் கொப்பே முன் வைத்துள்ளார்.

விஜயகாந்த் மைக்கை பிடிங்கிய போலிஸ் போட்டுத்தாளித்த விஜயகாந்த்




சங்கரன்கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 04.10.2011 இரவு தேர்தல் பிரச்சாரம்
செய்தார். 
பிரச்சாரம் செய்வதற்கு மதியம் அனுமதி பெற்றிருந்த நிலையில் இரவுதான் விஜயகாந்தால் வரமுடிந்தது.   இதனால் கூட்டம் அதிக அளவில் கூடிவிட்டது.


அந்த நேரம் போலீசார் வந்து,  மைக் செட்டுகள், விஜயகாந்த் பேசவிருந்த மை அனைத்து பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
பின்னர் பேசவந்த விஜயகாந்துக்கு வேறு ஒரு மை கொடுக்கப்பட்டது.  மைக்கை பிடித்ததுமே போலீசை போட்டுத்தாளித்தார் விஜயகாந்த்.
ஆவேசமாக மைக்கை பிடித்த விஜயகாந்த்,  ‘’சங்கரன் கோவில் போலீஸ் என்ன புதுசா, வழியில நான் எத்தனை போலீசை பார்த்தவன் தெரியுமா?  நான் ஒரு எதிர்க்கட்சி தலைவர்.  எனக்கு கொடுக்க வேண்டிய முழு பாதுகாப்பை நீங்க  தரணும்.
இது உங்களுக்கு தெரியாதா? இதென்ன புதுசா ஆட்டம் போடுறீங்க.

TNA பொது தொண்டுகள் ஆற்றியதில்லை வெறும் அரசியல் மட்டுமே நடாத்துகிறது

vanni refugeesஇனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசுவது மட்டும் தமிழ் அரசியல் கட்சிகளின் பணியாகாது.  அதற்கப்பால் மக்களுக்கான மனிதநேயப் பணியாற்றுவதும் காலத்தின் கட்டாயமாகும்.
- கிருஷ்ணமூர்த்தி  அரவிந்தன்
வன்னியில் எந்தத் தெருவிலே எந்த வேளையில் நீங்கள் சென்றாலும் அங்கே கையில்லாத, அல்லது காலில்லாத அல்லது கண்களை இழந்த பலரை நீங்கள் சந்திக்காமல் செல்ல முடியாது. அவர்கள் புழுதி நிரம்பிய தெருக்களிலும், இருள் நிரம்பிய வீடுகளிலும், காடும் புதருமாகவிருக்கும் ஊர்களிலும் தங்கள் ஒவ்வொரு நாள் பொழுதைக் கழிப்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி மயிரிழையில் உயர் தப்பியிருந்தார் ஒருவர்.  அவருக்கு ஏற்கனவே ஒரு கால் இல்லை.  விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படையினருக்குமிடையில் வன்னிப் பகுதியில் நடைபெற்ற ஒரு மோதலின்போது அவருடைய கால் சிதைந்து போயிற்று.  ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகச் செயற்பட்ட அவர், தற்போது விறகு வெட்டியாகிச் சீவியம் நடத்துகிறார்.  சைக்கிளில் விறகை ஏற்றிச்; செல்லும் போதே அவர் விபத்தில் சிக்கியிருக்கிறார்.